குறிச்சொற்கள்
இயான் பெட்டரிட்ஜ் என்பவர் டேக்னோவியா என்ற வலைப்பூவுக்கு முற்றும் சொல்லி விட்டார்.
எனக்கு அவர் யார் என்ன என்பது தெரியாது- ஆனால் அவர் எழுதி இருப்பதைப் பார்த்தால் ரொம்ப பெரிய ஆளாக இருப்பார் போலத் தெரிகிறது.
நாம் எல்லாரும் பிரபலமாவதையும், அதிகார அந்தஸ்தையும் விரும்பும் இந்தக் காலத்தில் சாமியார் மாதிரி இப்படி ஒரு காரணம் சொல்கிறார் பாருங்கள்-
“இந்தத் தளம், அதன் நீட்சியாக நான், சொல்வதை நம்ப நிறைய பேர் இருக்கிறார்கள் என்ற உண்மை எனக்கு உவப்பானதாக இல்லை. எனக்குக் கிடைத்திருக்கிற அந்த அதிகாரம் என்னை செலுத்துகிற திசையும் எனக்குப் பிடித்தமானதாக இல்லை. உன் எழுத்து இன்னொருத்தருக்குத் துன்பம் தரும் ஆற்றல் அடையும்போது, அதையும் நீ பின்விளைவுகள் குறித்து ஒரு கணம் கூட சிந்திக்காமல் செய்ய முடியும் என்கிறபோது, கணினியை விட்டு ஒரு அடி அப்பால் விலக வேண்டிய வேளை வந்து விட்டது என்று பொருள். நீ எழுதுவதை மற்றவர்கள் முன்கொண்டு செல்லப் போகிறார்கள் என்பதை அறிந்தவனாய் நீ எழுதும்போது- அதிலும் அவர்கள் தேவைகளுக்கேற்ப உன் எழுத்தை நீ வடிவமைத்துத் தரத் துவங்கி விட்டாய் என்றால்- அதுதான் நிறுத்த வேண்டிய நேரம்.
எனக்கு இளங்கோ அடிகள் நினைவுக்கு வருகிறார் என்றால் அடிக்க வர மாட்டீர்கள்தானே?
இவர் எங்கிருந்தாலும் நன்றாய் வாழ வாழ்த்துகள்- மனசாட்சியுள்ள மனிதர்.
