நேர்கோடும் நெளிகோடும்
ஜனவரி 12th, 2012 § 3 மறுமொழிகள்
..
நேர்கோட்டுப் பயணிகளுக்குத் தெரியாது
நெளிகோட்டுப் பயணத்தின் தன்மை
வெவ்வேறு திசைகளில் புறப்பட்டுப் பயணித்து
கூர்முனையில் எதிர்கொண்டு திசைமாறும்
நேர்கோட்டுப் பயணிகளுக்குத் தெரியாது
நெளிக்கோட்டுப் பயணத்தின் மற்றுமொரு நெளிவில்
திரும்பித் தொடரும் பயணத்தில்
திசைகள் தொலையும்
உங்க நண்பர் ஜீவபிரக்ஞா நல்லாவே கவிதை எழுதறாங்க (கவிதாயினி தானே?)
இதே மாதிரி ரொம்ப வருஷம் முன்னாடி என் ப்ளாகர் ப்ரோஃபைலுக்கு நான் எழுதிய விளக்கம்:
வாழ்க்கங்கிறது சிலருக்கு கோடு
சிலருக்கு வட்டம்
சிலருக்கு சப்பையான நீள்வட்டம்
சிலருக்கு அந்தரத்துல தொங்கற பரவளையம்
சிலருக்கு புரியாத அதிபரவளையம்
இன்னும் சிலருக்கு அது வெறும் புள்ளி
வடிவம் எதுன்னாலும் வாழறதுக்கு பேர் தான் வாழ்கை.
இந்த சாதன, சோதன அதெல்லாம் சும்மாங்க!
எண்டர் தட்டி கவிதையெழுதுவோர் சங்க நிரந்திர உறுப்பினர்.
உங்க கவித நல்லாவே இருக்குங்க… செப்பனிட்டு பதிப்பித்து விடலாமா?
ஜீவபிரக்ஞாதான் இந்தக் கவிதையை எழுதியவர் என்பதையும் அவர் ஒரு கவிதாயினி என்பதையும் எப்படி கண்டு பிடித்தீர்கள்?
கவிதைக்கு உள்ளேயே போய் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ரொம்ப நன்றி சார்.
இணையத் தொடர்பில்லாத அந்தம்மாவுக்கு உங்க பின்னூட்டத்தை பிரிண்ட் எடுத்துக் கொடுக்கறேன். ரொம்ப சந்தோஷப்படுவாங்க.
இது ஏற்கெனவே இங்கே ரொம்ப நாளா இருக்கே.
உங்க இஷ்டம் சார்! பதிப்பிக்கலாம்.