எளிய பொங்கல் நல்வாழ்த்துகள்
ஜனவரி 16th, 2012 § 2 மறுமொழிகள்
….
மிகத் தாழ்ந்த பள்ளங்கள் தங்கள்
மிக உயர்ந்த முகடுகளைக் கொண்டு
தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன-
வீழ்ச்சிகளைப் பேசுபவர்கள் மறந்து விடுகிறார்கள்
உச்சங்களும் வீழ்ச்சிகளும் ஒரு பாதையின்
இருவேறு திசைகள்; திசைமாறும் பயணத்தின்
மாறாத பாதை
மேடம் உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்
மேடம்கிட்ட சொல்லிடறேன் சார்….
மாசம் ஒரு தடவையோ என்னவோதான் இணையத்துக்கு வருவாங்க, பாவம்….
இந்தக் கவிதைகள் அவங்க செல்பேசியில் சொல்லக் கேட்டு எழுதியவை. தன் கவிதைகள் ஒரு ப்ளாகில் பதிவாவதைப் படிக்கக்கூட முடியாத ஒரு தமிழ்ச் சூழல் இருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.