ஒரு முச்சந்திப் பிள்ளையார் சொன்னது

ஜனவரி 19th, 2012 § 4 மறுமொழிகள்

.. :)

மகளே ஜீவா, உன் ஒவ்வொரு தேர்விலும் இப்பேரண்டம்
பிளவுற்றுப் பல்கிப் பெருகும் – உன் பயணிக்காத பாதைகள்
வேறொரு அண்டத்தில் பயணித்தனவாகும்.

உன் முன் விரியும் இரு பாதைகளில் எதிலும் நீ செல்லலாம்
கூட்டிக் கழித்துப் பார்த்தால் எதுவும் மாறி விடப் போவதில்லை,
இவ்வுலகம் ஆசையின் வடிவம்.

ஒன்றல்ல உலகம், மீண்டும் சொல்கிறேன் கேள்
(இது கவிதை), ஒன்றல்ல உலகம் – உன் ஒவ்வொரு தேர்விலும்
இப்பேரண்டம் பல்கிப் பெருகும்.

முகமற்ற சாத்தியங்களையும், இழந்த வாய்ப்புகளையும் எண்ணி
கலங்கி நில்லாதே – பலப் பேரண்டங்கள் பிறக்கக் கண்ட
முச்சந்திப் பிள்ளையார் நான்.

மகளே ஜீவா, நான் அறியாத உலகங்கள் எனக்களிக்கும் இன்பம்
நானறியும் இவ்வுலகில் என் துன்பங்கள் தீர்க்கும் மருந்தல்ல
எனில், உனக்காக வருந்துவேன்.

அறியாத போதும் அழ வைக்கும் உன் இழந்த சாத்தியங்கள்
உன்நினைவில் உனக்களிக்கும் துன்பம், நீயறியும் இவ்வுலகில்
நிழலாடவில்லையா, பெண்ணே கேள்.

காண்டீவனின் கேள்வியை எதிர்கொண்ட கண்ணன் முன்
இரு உலகங்கள் விரிந்தன – பகவத் கீதை பிறந்தது ஒன்றில்,
ஜீவகீதை பிறந்தது மற்றொன்றில்.

ஒவ்வொரு தேர்வும் ஓர் உலகாக்கும் – உண்மையைச் சொன்னால்
உனக்கழிவில்லை, உன் தேர்வுகள் பொய்க்காது, உன் சாத்தியங்கள்
இழக்கப்படுவதில்லை. நீ ஜீவபிரக்ஞா.

கேள், எனக்கொரு சிதறு தேங்காய் விடு/ விடாதே இன்னொரு உலகில்
வேறொரு ஜீவா அதைச் செய்வாள். போ. உன் வழி செல்.
என் ஆசிகள் உனக்கு உண்டெனினும்

நீ செல்லா வழியில் உன்னைப் பின் தொடர்வேன். முச்சந்தியின்
தனிமை அலுப்பாய் இருக்கிறது- கூட்டிக் கழித்துப் பார்த்தால் எதுவும்
மாறி விடாது எனினும்.

Tagged: ,

§ 4 Responses to ஒரு முச்சந்திப் பிள்ளையார் சொன்னது

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

What’s this?

You are currently reading ஒரு முச்சந்திப் பிள்ளையார் சொன்னது at கள்ளிப் பெட்டி.

meta

Follow

Get every new post delivered to your Inbox.