நானும் ஒரு இலக்கியவாதி

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜெயமோகனின் வலைத்தளத்தில் கண்ட ஒரு பதிவைப் பற்றி இந்த வளைத்தளத்தில் ( ஆமாம், எலிவளையில் வருகிற ‘ள’தான்) எழுதி புண்ணியம் கட்டிக் கொண்டேன். இதுநாள் வரை தினம் ஆறேழு பேர் மட்டும் வழி மாறி இங்கே வந்துக் கொண்டிருந்தார்கள், ஜெயமோகனின் வலைத்தளத்தில் அந்த பதிவு trackback ஆகத் தென்பட்டதின்பின்விளைவு , இன்று மாலை வந்து பார்க்கிறேன், நூற்றி இருபது பேர் முட்டி மோதிக்கொண்டு என்னமோ ஏதோவென்று வந்து பார்த்து ஏமாந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அழகிரிக்கு தென் மாவட்டங்களில் கிடைக்கிற வெற்றியைவிட இது அசாத்தியமான சாதனை. உண்மையை சொன்னால், ஜெயமோகனின் வீச்சுக்கு இது ஒரு சான்று, அதை விடுங்கள்.

விஷயத்துக்கு வருவோம்- அந்த நூற்றி இருபது பேரின் கண்முழிகளை இந்த தளத்தில் பார்த்ததும் ஆஹா, நாமும் ஒரு இலக்கியவாதி ஆகி விட்டோமடா என்று ஒரு சின்ன கர்வம் வந்து விட்டது. எனவே, கண்முழிகள் வந்து விழுகிற இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு நம் தமிழர் நாகரீகத்துக்கேற்றபடி ஒரு இலக்கிய தாக்குதலை ஆரம்பித்து விடுகிறேன்.

—–

என்னங்க- கைபேசியில் வந்த ஒரு குறுந்தகவலை முற்போக்கி விடுகிறது தப்பா என்ன?

பாருங்க சார், இன்றைக்கு காலைல பதினோரு மணிக்கு, “Never design your character like a garden where anyone can walk…!! Design it like the sky where everyone aspire to reach…!!!” அப்படின்னு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அடடா, ரொம்ப நல்லா இருக்கேன்னு அதை எனக்கு நன்றாக பழக்கமான நண்பர் ஒருத்தருக்கு முற்போக்கி விட்டேன்.

சொன்னா நம்ப மாட்டிங்கக்கா, பத்தே பத்து நிமிஷத்துல அவரு அதை கவிதையா மாத்திப்புட்டாரு!-

எவர்க்கும் எளிய
இன்பப் பூங்காவாய்,
இலவசம் ஆக்காதே
உன் நெஞ்சை!

அண்ணாந்து நோக்கியும்
அடைதற்கரிதாய்,
ஆகாயத்தைப் போல்
நீ இரு!

எப்படி போகுது பாருங்க கதை! போதாக்குறைக்கு ஊக்க ஊதியமாய் இது வேறு:

கலக்கல் கவிதை

:

அன்று,
லெட்டர் கொடுத்தேன்-
வாங்க மறுத்தாள்…!

இன்று,
என்னிடம் லெட்டர்
வாங்க காத்திருக்கிறாள்!

காரணம்…?

நான் போஸ்ட்மேன்
என்பதால்!

ஒளிநகல் பதிவகம் வைத்திருக்கிற ஒவ்வொருத்தரும் ரூபாய் நோட்டு அடிக்கிற கதையாய், தமிழில் ஆனா ஆவன்னா எழுதத் தெரிந்த ஒவ்வொருத்தரும் கவிதை எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரையும் இந்த நோய் பீடித்திருக்கிறது.

வைரமுத்து நோபல் பரிசு வாங்க ஆசைப்படுகிறார் என்று நினைக்கிறேன். கலைஞருக்கு அதை எப்படியாவது வாங்கிக் கொடுக்க தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு அது கிடைக்குமா இல்லையா என்று தெரியாது, ஆனால் ஒன்று.

கவிதை எழுதாத தமிழர் ஒருத்தர் இருந்தால் சொல்லுங்கள், தமிழ் இலக்கியத்துக்கு அவர் செய்த சேவைக்காக ஒன்றுக்கு இரண்டாக நோபல் பரிசு தரலாம்- ஆளைத்தான் காணோம்.

அப்படி ஒரு அபூர்வ தமிழரை நீங்க எங்கேயாவது எப்போவாவது பாத்திருக்கீங்களா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s