ஹீரோக்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?

உங்களுக்கெல்லாம் Anne Frank ஐத் தெரிந்திருக்கும். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அந்த சின்னப் பெண் எழுதிய நாட் குறிப்பைப் பத்திரப்படுத்தி வைத்த Miep Gies என்ற அம்மையார் அண்மையில் நூறாண்டு காலம் வாழ்ந்திருந்து மறைந்தாராம்- Associated Press.

அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை செருப்பால் அடித்த மாதிரி இருந்தது: தன்னை ஒரு ஹீரோவாக சித்தரிப்பதை அவர் விரும்பவில்லையாம். அதற்குக் காரணமாக அவர் சொல்கிறார்-

“நினைத்துப் பாருங்கள், இளம் பிள்ளைகள் மனிதர்களாக தங்கள் கடமையை செய்யவே ஹீரோவாக இருந்தால்தான் முடியும் என்ற நினைப்பில் வளர்வார்கள். யாரும் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன், யார்தான் ஹீரோ? நானில்லை. நான் ஒரு சாதாரண housewife, secretary.”

 

அந்த அம்மையார் சொன்னது பொன்னெழுத்துக்களில் பொறித்து நம் பேருந்துகளில் வைக்க வேண்டிய வைர வரிகள். சமீபத்தில் ஒரு காவலதிகாரி கத்திக் குத்துப் பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது எல்லாரும் யாரோ ஒரு ஹீரோ வருவார் என்றுதானே எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்?

Advertisements

One thought on “ஹீரோக்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s