காதலர்களின் ஆதர்ச பிம்பங்கள்

இந்த வலைத் தளத்தில் இது வரை ‘அந்த’ மாதிரியான விஷயம் ஏதும் எழுதப்படவில்லை என்பது எனக்கு ஆறாத் துயரளிக்கிறது. எனவே, இந்த இடுகையில் கொஞ்சம் கலவி கற்போம் (valentine’s day எப்போ?).

Ciliates என்ற வகையிலான ஒரு நுண்ணுயிர் ‘அந்த’ விஷயத்தில் பயங்கரமான ஜித்தனாக இருக்கும் போலிருக்கிறது.

Olivia Judson, New York Timesல் எழுதியிருக்கிற இந்த கட்டுரையில் கீழ்கண்ட செய்திகள் காணக் கிடைக்கின்றன:

Ciliates கண்ணிமைகளைப் போல இருக்கும் ஒற்றை செல் கொண்ட நுண்ணியிர்கள். அவை இனப்பெருக்கம் செய்வது அகலவி முறையில்- அதாவது அவர்களிடையில் பிள்ளைப் பேற்றுக்காக பின்னிப் பிணைகிற பிசினெஸ் கிடையாது. அப்படியென்றால் அவை முற்றும் துறந்த முனிவர்களா? அதுதான் கிடையாது- அவை ‘அந்த’ விஷயத்தில் மிக மோசமானவர்கள்:  இல்லை, நீங்கள், “காதல் ‘அதை’யும் தாண்டி புனிதமானது”, என்று கருதுகிற ஜன்மங்களாக இருந்தால், அவை காதலர்களின் ஆதர்ச பிம்பங்கள்.

ரொம்ப பில்ட்-அப் கொடுக்குறேனோ? விஷயம் இதுதான்.

௧. Ciliates, முன் சொன்ன மாதிரி காதலையும் இனப்பெருக்கத்தையும் குழப்பிக் கொள்வது கிடையாது. இனப்பெருக்கம் செய்ய வேண்டுமானால், தானே இரண்டாகப் பிரிந்து, ஒவ்வொருத்தரும் தங்கள் வழியில் தனித் தனியாகப் போய் விடுவார்கள். அது உத்தமம்.

௨. சரி- கலவியில்  ஈடுபடுகிறார்களே, அப்போது என்ன செய்கிறார்கள்? ஒன்றுமில்லை சார், தனது மரபணுவின் பிரதியை அடுத்தவரிடத்தில் ஒப்படைத்து விடுகிறார்கள் ( இதயமும் இதயமும் இடம் மாறுகிற மாதிரி). அதன் விளைவு என்னவென்றால், இரண்டு பேரும் அச்சு அடித்ததைப் போல (ஓருயிர் ஈருடல் என்கிறார்களே அந்த மாதிரி) ஒருத்தரைப் போல் ஒருத்தர் மாறி விடுகிறார்கள்!- இதுதானே உண்மைக் காதல்? சரி, இதை மிதமம் என்று வைத்துக் கொள்வோம் (அப்போதுதானே அதமத்தைப் பற்றிப் பேச முடியும்).

௩. ‘அந்த’ விஷயத்தில் இவர்கள் அநியாயத்துக்கு அக்கிரமம் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள் (அல்லது இந்த நல்ல உள்ளங்களுக்கு இயற்கை தந்த கொடையோ என்ன இழவோ)- Ciliateகளில் ஆண், பெண் போல (செத்து விடாதீங்கப்பா!) நூறு பால்கள் இருக்கின்றனவாம்!

எங்கே கற்பனைக் குதிரையையை நானூறு கால்களில் பாயும் வண்ணம் தட்டி விடுங்கள்!

அம்மம்மா!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s