நான் தினமும் குறைந்தது மூணு முறையாவது டீ குடிக்கிறேன். நான் குடிக்கிற டீ மட்டமானதுதான்- வெளி நாடுகளுக்கு போய் விட்டு வந்தவர்கள், இது டீயே இல்லை, டீத்தூளின் குப்பையைத்தான் இங்கே தருகிறார்கள் என்று சொல்கிறார்கள்- அது உண்மையாகவும் கூட இருக்கலாம். ஆனால், நான் டீ குடிக்கிற இடம் சாலையோர பங்க் கடை என்பதையும் அதன் விலை மூணு ரூபாய்தான் என்பதையும் பார்க்கும் போது, இதை விட நிறைவான டீ இந்த விலைக்குக் கிடைக்காது என்பதை நான் ஒப்புக் கொள்ளவே வேண்டும்.
இதை என் சொல்கிறேன் என்றால், இந்த வீடியோவைப் பார்த்ததும், எனக்கு டீ குடிக்கிற ஆசை வந்து விட்டது.
நீங்களும் பாருங்கள்.
Advertisements
எனக்குக் கூட தெருவோர டீக்கடைகளில் குடிக்கும் டீயின் சுவையே பிடித்திருக்கிறது. சரவண பவன் முதற்கொண்டு எந்த பெரிய ஹோட்டலுக்குச் சென்றாலும் அங்கு காப்பி மட்டுமே குடிப்பேன். டீ என்றால் அது நாயர் கடை டீ தான் சார், மத்ததெல்லாம் வேஸ்ட்டு….