காந்தியடிகளும் மார்டின் லூதர் கிங்கும்…

எது வன்முறைன்னு இங்க இருக்கிற ஒரு பதிவிலே நண்பர் மாறன் சில சிந்திக்கத் தக்க வினாக்களை எழுப்பி இருக்கிறார். அதுகெல்லாம் சரியான பதில் சொல்லக்கூடிய நிலமையில நான் இல்லை, அறிவுப்பூர்வமாவோ, அனுபவப்பூர்வமாவோ, எனக்கு அந்தத் தகுதி இல்லை. இருந்தாலும் எனக்குத் தெரிஞ்ச வகையில் ஏதோ சப்பைக் கட்டு கட்டினேன்.

ஆனா மத்தவங்க இந்த விஷயமா சொல்றதை எடுத்துக் காட்ட முடியும், இல்லையா? அந்த வகையிலே, Tricycleல வந்த இந்தக் கட்டுரையைப் படிச்சுப் பாருங்க.

இந்தக் கட்டுரையில் எனக்கு பிடிச்ச விஷயங்கள்:

+”நாம சாதிக்க வேண்டியவற்றை இயேசு சொல்லியிருக்கிறார்; அதை அடைவதற்கான வழிமுறைகளை காந்தி சொல்லியிருக்கிறார்” இப்படி Martin Luther King சொன்னது.

+ஒரு தடவை வெள்ளைக்கார காவலதிகாரிகளுக்கும் ஆயுதங்கள் தாங்கிய கறுப்பர்களுக்கும் அவரது நெருப்பு வைக்கப்பட்ட வீட்டின் முன் மோதல் நடக்கக்கூடிய சூழல் இருந்தபோது அவர், “நீங்கள் உங்கள் வீட்டுக்குப் போய் உங்கள் ஆயுதங்களை விட வேணுமாய் நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையை பதிலுக்கு பதில் தாக்கி வன்முறையின் மூலமாக நாம் தீர்த்து விட முடியாது. வன்முறையை அஹிம்சையால் எதிர்கொள்ள வேண்டும்… வெறுப்பை அன்பால் எதிர்கொள்ள வேண்டும்” என்று சொன்னது.

காந்தியவாதத்தை முழுமையாக அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கு சாட்சியாக கிருத்தவ தேவாலயத் தலைவர்களின் துணையோடு எழுதப்பட்ட இதோ இந்த பத்து அம்ச தீர்மானத்தைப் பாருங்கள்:

இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளைக் குறித்து நான் அன்றாடம் தியானம் செய்வேன்.
அஹிம்சா இயக்கம் நீதியையும் நேயத்தையும் நாடுகிறது என்பதை நான் நினைவில் வைத்திருப்பேன்- வெற்றியை யாம் வேண்டுவதில்லை.
அன்பு வழியில் நடப்பேன், அன்புச் சொற்களைப் பேசுவேன்- அன்பே எமது இறைவன் என்பதனால்.
மனிதர்கள் அனைவரும் விடுதலை அடைய ஒரு கருவியாக என்னை கடவுள் கையாள வேண்டுமென தினமும் பிரார்த்தனை செய்வேன்
மனிதர்கள் அனைவரும் விடுதலை அடைய எனது ஆசைகளை தியாகம் செய்வேன்
நண்பன் எதிரி இருவரிடமும் மரியாதையோடு நடந்து கொள்வேன்
உடனிருப்போருக்கும் உலகிலுள்ளோற்கும் எல்லார்க்கும் தொடர்ந்து சேவை செய்யத் துணிவாயுள்ளேன்
கையாலும் நாவாலும் என் இதயத்தாலும் வன்செயல்களில் ஈடுபடாதிருப்பேன்.
உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கப் பாடுபடுவேன்
ஆர்ப்பாட்டங்களில் என் இயக்கத்துக்கும் அதன் தலைவர்களின் வேண்டுகோள்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன்.

இதைப் படிக்கும் பொது Martin Luther King எவ்வளவு பெரிய ஆள் என்று மலைக்காமல் இருக்க முடியவில்லை. அதே போல் உலகில் வாழ்ந்தவர்களில் எவரோ ஒருவரோடு சேர்ந்து உணவு சாப்பிட முடியும் என்றால், நான் அது காந்தியடிகளோடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன், அமெரிக்காவின் வேர்கள் காந்தியடிகளின் இந்தியாவில் இருக்கின்றன, எனக்கு காந்தியடிகளே inspirationஆக இருக்கிறார் என்று பரவசப்படுகிற ஒபாமாவின் மனநிலை புரிகிறது.

அதே சமயம் நமது இந்தியாவில் காந்தியக் கொள்கைகள் மண்ணோடு மண்ணாகத் தேய்படுகிற நிலையும் துயர் தருவதாக உள்ளது. அதையும் சொல்ல வேண்டும் இல்லையா?

Advertisements

One thought on “காந்தியடிகளும் மார்டின் லூதர் கிங்கும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s