தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய பாதை

இலங்கை/ ஈழத்தில் நடந்திருக்கிற கோர யுத்தம் யாருக்கும் எந்த பயனும் தரவில்லை- எவரும் கடந்த இருபது முப்பதாண்டு கால வரலாற்றிலிருந்து எந்த பாடமும் கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த துன்பியல் நிகழ்வின் ஒரு பயன் என்னவென்றால், தமிழ் இலக்கியத்தில் ஒரு புது தடம் உருவாவதற்கான தளத்தை அது அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதுதான்.

சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது என் நண்பனொருவன், “நான், ஸ்ரீரங்கத்து தேவதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன். படிக்கப் படிக்க ஸ்ரீரங்கம் என் கண் முன் விரிகிறது” என்று சொன்னான். அவன் ஸ்ரீரங்கத்துக்குப் பெருமாளை தரிசிக்க எதோ ஓரிரு முறைதான் போயிருப்பான். அவனது ஸ்ரீரங்கம் சுஜாதாவின் கதை வாயிலாகக் கற்று கற்பனையில் தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. தமிழில் ஒரு சாரார் எழுதுகிற ‘என் இளம் வயதில் என் மனதை ஈர்த்த பெண்கள்” வகையிலான அனுபவக் குறிப்புக்குள் எல்லாவற்றிலும் சுஜாதாவின் முத்திரை பதிக்கப் பட்டிருக்கும். அப்படி எதுவும் இல்லாவிட்டாலும் அங்கே சுஜாதாவின் இருப்போ இல்லாமையோ நினைவுக்கு வரும். உதாரணத்துக்கு என் நண்பர் கிரி எழுதிய இந்த பதிவைப் பாருங்கள்.

இதை எதற்கு சொல்ல வருகிறேனென்றால், எல்லா படைப்புகளுக்கும் பின்புலமாக இன்னொரு படைப்பு இருக்க வேண்டும். ஏற்கனவே இன்னொருத்தர் இலக்கியத்தில் ஆக்கியிருக்கின்ற தளத்தை பின்புலமாக வைத்துதான் பெரும்பாலான படைப்புகள் உருவாகின்றன. இதை நாம் மொழிபெயர்ப்புக் கதைகளைப் படிக்கும் பொது உணர முடியும். ஆரம்பத்தில் அன்னியமாக இருக்கிற ஒரு வட்டத்து இலக்கியம் பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் படிக்கப் படிக்கப் பழகிப் போய், நமக்கு நன்கு அறிமுகமான, நம் உணர்வுகளைப் பிரதிபலிக்கிற ஒன்றாக ஆகி விடுகிறது.

அந்த வகையில் ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு genre என்று சொல்ல வேண்டும். அது அந்த மாதிரியான மற்றக் கதைகளை ஏற்றுக் கொள்கிற பின்புலத்தை தமிழ் எழுத்தாளர்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது.

இது வரை Graham Greene, Len Deighton, John Le Carre வகையிலான Spy Fiction தமிழில் இல்லாமல் போனதற்கு இந்த நம்பகத் தன்மை இல்லாததுதான் காரணம். ஆனால் இந்த இலங்கை/ ஈழப் போர், அந்த வகையிலான படைப்புகளுக்கு அருமையான சூழலை அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஜெயமோகனின் உலோகம் மிக நேர்த்தியாக, ஆங்கிலத்தில் எழுதப்படுகிற நாவல்களுக்கு இணையாக வந்துக் கொண்டிருக்கிறது. இது தமிழில் ஒரு Genreஐ நிறுவும் என்று எதிர்பார்க்கிறேன்.

இனி தமிழில் James Bond, Robert Ludlum வகையிலான கதைகளை எழுதுவது சுலபம். வாசகர்களும் அதை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள். இது இலக்கியத்தில் எப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்கும் என்பது விவாதத்துக்குரியதாக இருந்தாலும் கூட, தமிழ் பதிப்பாளர்களுக்கு நல்ல செய்தி.

ஜெயமோகனின் அடியையொற்றி இன்னும் பலர் எழுதுவார்களேயானால், இன்னும் ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளில், தங்கள் பதிப்புகளின் லட்சக் கணக்கான பிரதிகளை விற்ற எழுத்தாளர்கள் Stenographers Guild Pitmanக்கு சிலை வைத்த மாதிரி ஜெயமோகனுக்கும் ஒரு சிலை வைப்பார்கள் என்று எதிபார்க்கிறேன், பார்க்கலாம்.

28.12.2010- இந்தப் புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடவிருக்கிறது. வாசக அன்பர்கள் பெருமளவில் இம்முயற்சியை ஆதரிக்க வேண்டுகிறேன்.

8 thoughts on “தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய பாதை

 1. படைப்புகளின் பின்புலத்த வெச்சு ஒரு பதிவை எழுதிட்டீங்க. சூப்பர்! நீங்க உண்மையிலேயே ஒரு நல்ல படைப்பாளி, நாங்க எல்லாம் வெறும் துடைப்பாளிதான்.

  By the way, என் படைப்புக்கான அறிமுகத்துக்கு நன்றி. ஏதோ ஒரு வேகத்துல அந்தப் பதிவை எழுதினேன், எங்க ஏரியாவாசிகள் யாரும் அதைப் படிச்சிடக் கூடாதுங்கறது என் வேண்டுதல். ஹா ஹா ஹா…!!!

 2. ஐயோ! நீங்கதான் படைப்பாளி! அதிலே சந்தேகமே இல்லே…
  இதுல உங்க அபிப்ராயம் என்ன? ஜெயமோகன் புண்ணியத்துல இன்னொரு தமிழ்வாணன் இன்னொரு சங்கர்லால் வருவாங்கங்கறீங்களா?

 3. நான் இன்னும் உலோகம் படிக்க ஆரம்பிக்கலை. இருந்தாலும் சொல்றேன். ஜெயமோகன் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் இல்லை. அவர் என்னைப் போல உங்களைப் போல ஏதோ குறையோ நிறையோ இருக்கறவங்களுக்கான எழுத்தாளர். நானும் படிக்கறேன்னு படிக்கரவங்களுக்காக எழுதறவங்களுக்கும் இப்போ எழுத்து உலகத்துல பெரிய வரவேற்பு இல்லை. இந்தக் கால பாடகர்கள் கணக்கா நெறைய பேரு வர்றாங்க போறாங்க. அதனால சுஜாதா அளவுக்கு பிரபல எழுத்தாளர் யாராவது வருவங்களான்னா அது என் கருத்துல டவுட்டு தான். Means, உலோகத்தை உதாரணமா வெச்சுக்கிட்டு சொல்றேன்.

  எழுத ஆர்வம் இருந்து பிரயோஜனம் இல்லையே. அத படிக்க ஆளுங்க வேணுமே.

 4. I think what makes it difficult to read jeyamohan’s ulogam is the font in the blog: the post itself is rather long, and some of the paragraphs stretch on and on. Some of my other friends too have said this, and one friend specifically complained that the paragraphs are too long. The kind of writing that looks good on paper does not work as well on a computer screen.

  However, please instal this Readability Bookmarklet on your browser. When you land in a page that is not easy on the eyes, all you need to do is click this bookmarklet and then the page loads in a format chosen by you. I use this a lot, and this has enhanced my reading experience.

  As for jeyamohan’s writing, I agree with you that he is not for the casual reader. But that is not because his language is dense, it is just that we are not familiar with the kind of writing that he does. The more we read, the better it gets.

  However, I am more hopeful- I think this work of Jeyamohan is sure sure to take writing in tamil in a new direction. We need to take care not to stifle this burst of creativity with carping criticism, though. If ordinary people like you and me take to blogs and show our appreciation, may be it would help 🙂

 5. ”இலங்கை/ ஈழத்தில் நடந்திருக்கிற கோர யுத்தம் யாருக்கும் எந்த பயனும் தரவில்லை- எவரும் கடந்த இருபது முப்பதாண்டு கால வரலாற்றிலிருந்து எந்த பாடமும் கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த துன்பியல் நிகழ்வின் ஒரு பயன் என்னவென்றால், தமிழ் இலக்கியத்தில் ஒரு புது தடம் உருவாவதற்கான தளத்தை அது அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதுதான்”

  எழுத்துக்களூடாகதெரியும் உலகம்

 6. ஐயோ! நீங்கல்லாம் இதைப் படிப்பீங்கன்னுத் தெரிஞ்சிருந்தா நான் இப்படி எழுதி இருக்கவே மாட்டேன். இப்போ படிச்சுப் பாத்தா எவ்வளவு இன்சென்சிடிவா இருக்கு நான் எழுதினது. யாரோ ஒருத்தர் லட்லம் மாதிரி எழுதணும்னா இத்தனையும் நடந்தது! மன்னிச்சுக்குங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s