கம்பா நதி- ஒரு பார்வை

கம்பா நதி கிழக்கு பதிப்பகம்

எனது நண்பர் ஒருவர் வண்ண நிலவனின் கம்பா நதியை என் கையில் கொடுத்து படித்து பார்த்து விட்டு என் கருத்துகளை இந்த இடத்தில் பதிவு செய்யும்படி சொன்னார். இப்போதுதான் அவரிடம் அந்தப் புத்தகத்தைத் திருப்பித் தந்துவிட்டு வருகிறேன்.

வண்ண நிலவன் எழுதுவது எந்த விதமான அலங்காரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத ஒரு அமைதியான பார்வையில். இது நான் படித்தவரை மிக அபூர்வமாகவே காணக் கிடைக்கிறது. அந்த ஒரு வாசிப்பு அனுபவத்துக்காகவே இந்தப் புத்தகத்தை ஒரு தடவை படித்துப் பார்க்கலாம்.

அலங்காரமில்லாத ஆரவாரமில்லாத பார்வை. இந்தக் கதையில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் (கெட்டுப் போனவர்களும்) இருக்கிறார்கள் – நல்லவர்கள் கெட்ட விஷயங்களால் பாதிக்கப் படுகிறார்கள்- ஆனால், வண்ண நிலவன் இது குறித்து வலிய எந்த வாதமும் முன்வைக்காமல் “இதுதான் வாழ்க்கை- இதுதான் இவர்களுக்கு வாய்த்தது” என்கிற மாதிரி போகிற போக்கில் அவற்றை சொல்லி கொண்டு போகிறார். இது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.

முடங்கிப் போன வாழ்க்கையை விருப்பு வெறுப்பில்லாமல், ஆனால் சுவாரஸ்யமாக, விவரிக்கிற கதைதான் கம்பா நதி (கதை என்பதை விட வார்த்தைகளால் வடிக்கப்பட்ட ஒரு நிழலோவியம் என்பது சரியாக இருக்கும்)

(புத்தகத்தைக் கொடுத்த நண்பர் சிவசங்கரனுக்கு நன்றி!- இதை படித்து விட்டு யாரையாவது அடிக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் இந்தப் பதிவுக்கு காரணமாக இருந்த அவரைப் பிடியுங்கள்: தங்கள் முகவரியைத் தெரிவிப்போருக்கு அவரது முகவரியும், உபரியாக, கோடிக் கணக்கில் சொத்துக்களை விட்டுச் சென்ற கென்யா மாமா ஒருவரது வலைத் தளத்தின் முகவரியும் தரப்படும்).

நன்றி: Unturned Pages

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s