புதுத் துணி உடுத்தி அழகு பாக்குறாங்க!

இந்தப் பதிவு தேவையில்லாத ஒன்றுதான்: இருந்தாலும் இந்த செய்தியைப் படித்த காரணத்தால் எழுதுகிறேன்: European Art Offends Muslims

சமீபத்தில் இசுலாமியர்களின் உணர்வுகள் புண்படும் வகையில் ஓவியம் வரைந்த Lars Vilks என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரை கொலை செய்வதற்காகப் பென்சில்வேனியாவிலிருந்துப்  புறப்பட்ட ஜீஹாத் ஜேன் கைதானது உங்களுக்கு நினைவிலிருக்கும். தலைக்கு விலை வைக்கப்பட்ட வில்க்ஸ் சொல்லும் ஞாயம் இதுதான்: நான் எதை வேண்டுமானாலும் வரைவேன், புண்படுத்தக்கூடாது என்று சொல்லுகிற அளவுக்கு புனிதமானது என்று எதுவும் கிடையாது. இந்த சுதந்திரத்தை அவர் தனது ஐரோப்பிய நாகரீகத்தின் அடையாளமாக சொல்கிறார். மற்றவர்களுக்காக நான் ஏன் என் பண்பாட்டின் சிகரமான கருத்து சுதந்திரத்தை இழந்து  கைகளுக்கும் கருத்துகளுக்கும் பூட்டு பூட்டிக் கொள்ள வேண்டும் என்று இவரைப் போல இன்னும் பலர் கேட்கிறார்கள்.

அண்மைக் காலமாக மருத்துவர் ருத்ரன் தனது வலைத்தளத்தில் எம் எப் ஹூசைனுக்கு வக்காலத்து வாங்கப் போய் தீவிர இந்துக்களின் தாக்குதலுக்குள்ளாகி (கருத்துத் தாக்குதல்தான், இன்னும் அவர் உயிரை விலை பேசுகிற அளவுக்கு இந்து வெறியர்களுக்கு துணிச்சல் வரவில்லை), பதிலுக்கு அவரும் விட்டேனா பார் என்று தீவிரமாக பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

டிசம்பர் 21ஆம் தேதி, அவர் ஆக்கிய, மாதாவின் நினைவுகள் என்ற நேர்மையான பதிவைப் பாருங்கள். அவர் மனதை நெருடிய ஓவியத்தைப் பாருங்கள். அந்த நெருடல் குறித்து அவர் எழுதுவதைப் பாருங்கள்:

என் வீட்டில் என் அம்மாவை நான் அவதூறாகப்பேசுவதும் அவமரியாதை  செய்வதும் வாடிக்கையானாலும், பக்கத்து வீட்டுக்காரன் அவன் அம்மாவை திட்டினால் எனக்கு நெருடும். இப்படித்தான் இதுவும். My cultural chauvinism! காலம் மாற்றுமா பார்ப்போம்.  எனக்கு அவளும் ஸ்ரீமாதா தான்”

மருத்துவர் ருத்ரன் படித்தவர். அவருக்கே ( என் அம்மாவை நான் அவதூறாகப்பேசுவதும் அவமரியாதை  செய்வதும் வாடிக்கை) இப்படி ஒரு உணர்வு தோன்றுகிறதென்றால், தீவிர  இந்துக்கள்  மனதில்  எம் எப் ஹூசைனின் ஓவியங்கள் ஏற்படுத்தும் தாக்கம்  பற்றி நினைத்துப் பாருங்கள்.

எல்லா சுதந்திரங்களும் வரைமுறைகளுக்கு உட்பட்டதே. அது வில்க்சானாலும் சரி ஹூசைனானாலும் சரி: அதன் எல்லைகள் காலத்து தக்கபடி மாறுகின்றன: அந்த மாற்றத்துக்கான விவாதங்கள்தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன: இதுவும் காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒன்றுதான். அது வன்முறையாக மாறாத வரை இரு தரப்பினரும் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வன்முறையாக மாறியபின் கோபங்களுக்கு எளிய நியாயம் கிடைத்து விடுகிறது.

தீவிர சிந்தனையாளர்கள் கொஞ்சம் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: பக்தர்களும்தான். உதாரணத்துக்கு ஹூசைன் வரைவது என் கண்களுக்கு கார்டூன்களாகத்தான்  தெரிகிறது, அரைகுறையாய் வரைந்த அந்தக் கிறுக்கல்களில் கோபபட ஒன்றுமில்லை. அவற்றை ஓவியம் என்று சொல்லி நாம்  பாராட்டுவதே  நமது வருங்கால சந்ததிகளுக்கு ஒரு நாள் புதிராக இருக்கும். அப்போது இந்த ஓவிய உலகின் உன்னதக் கலைஞனின் ஆடைகள் வெளிச்சத்துக்கு வரும்.  (இந்து வெறியர்களின் சாயம் எப்போதோ வெளுத்து விட்டது என்பது சொல்லித் தெரிய வேண்டுவதில்லை).

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s