நைஜீரியாவும் குஜராத்தும் ஒண்ணுங்கோ!

ஜெயமோகனின் இந்த பதிவு குறித்து ஒருத்தரு எதிர்வினை ஆற்றி இருக்காரு…

நைஜீரியப் படுகொலைகளையும் மோடியின் குஜராத் படுகொலைகளையும் தொடர்பு படுத்தித் திட்டித் தீக்க பார்வையின் வீச்சு என்ன ஒரு லெவெல்ல இருக்கணும் சொல்லுங்க?

அங்கே போய் என் கருத்துகளைப் பதிவு பண்ணினேன்: அப்புறம் மனசு கேக்காம இங்கயும் வந்து ஏதோ என் ஆத்தாமையை தீத்துக்க மறுபடியும் நகலெடுத்து ஒட்டி வெக்கிறேன்:

மோடி கிடைச்சதுக்கு உங்க மாதிரி நடுநிலை ஆய்வாளர்கள் எல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கணும்…

எங்க யாரைப் பத்தி எதைச் சொன்னாலும் கடைசியிலே அங்கே கொண்டு வந்து வெச்சு காலரைத் தூக்கிக்க முடியுதே…

அவனை சொல்லறியே, இவனை சொன்னியா’ங்கறது அருமையான லா- பாயிண்டு.

ஒரு அநியாயம் கண்ணுக்கு முன்னால நடந்தா போதும்- அதை வெச்சு கணக்கில்லாத அநியாயங்களை நியாயப்படுத்திடலாம்.


9 thoughts on “நைஜீரியாவும் குஜராத்தும் ஒண்ணுங்கோ!

  1. அதுக்கு பதிலடியாதான் ஒண்ணுக்கு நாலா குஜராத் படம் போட்டு அந்த இன்னொருத்தரு புண்ணியம் தேடிகிட்டாரே… நீங்க அவரைத் திட்டினீங்களா?

  1. என்னன்னு சொல்லுவேன்? தரங்கெட்ட எதிர்வினைன்னு நினைச்சுகிட்டோ என்னமோ அந்த பதிவர் அதை அங்கீஹாரம் பண்ண மறுத்துட்டார்! இவிங்கதான் சனநாயகத்தை தூக்கி நிறுத்தப் போறாங்களாம்! எப்பிடியோ இனி அந்த பக்கம் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்: மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு சொம்மாவா சொன்னாங்க பெரியவங்க!

  2. மன்னிக்கணும். நான் அவசரப்பட்டு உளறிட்டேன்: அவரு நான் எழுதினதை பதிவு பண்ணிட்டாரு. நான் லூசுத்தனமா எழுதினதை நினைச்சு வருத்தப்படறேன்: கொஞ்சம் பொறுத்திருந்து பாத்திருக்கலாம். எழுதினது எழுதினதுதான் என்ன பண்ணுறது? நம்ம முட்டாள்தனம்தான் வெளிச்ச்சமாயிருச்சு….

 1. அவர் நினைப்பதை அவர் சொன்னால் , அவரது கருத்து சுதந்திரம்…. இன்னொருவரை திருப்தி படுத்த , ஜெயமோஹனை விமர்சித்தால் , அது தவறு…
  உண்மை அவர் மன சாட்சிக்கு மட்டும் தான் தெரியும்.,…

  1. நம்மால மத்தவங்களோட மனசுக்குள்ள போய்ப் பாக்க முடியாது: அப்படி அடுத்தவங்களோட நோக்கங்களை விமரிசிக்கறது அபத்தமான காரியமாத்தான் இருக்கும்: உதாரணத்துக்கு எடுத்துட்டீங்கன்னா, இருக்கற உறவுகளிலேயே மிக முக்கியமானதா இருக்கற கணவன்-மனைவி உறவுலே, ஒருத்தர் ஒருத்தர் புரிஞ்சிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு.

   “நீ இத மனசுல வெச்சிக்கிட்டுதான் இப்படி பண்ணினே”, அப்படின்னு அவரு சொல்லுவாரு. “ஐயோ! அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க- நீங்கதான் இப்படி நினைச்சுகிட்டு அப்படி பண்ணிப்புட்டீங்க” அப்படீம்பாங்க அந்த அம்மா. கல்யாணம் ஆயி முப்பது வருஷம் ஆகி இருக்கும், இருந்தாலும் இப்போ ரெண்டு பேரு சொல்லறதும் தப்பா இருக்கும்: சண்டை பாட்டுக்கு பெருசா போய்க்கிட்டிருக்கும்- இடையிலே தூப தீபம் காட்டி குளிர் காய வேலையத்த வெட்டிப் பசங்க (வேற யாரு, மாமியார், மச்சான், மச்சினி; அடுத்த வீட்டுக்காரன், கீரைக்காரி- தெருவோரமா போற நாயி கூட ரெண்டு கொல கொலைச்சுட்டுப் போகும், இவுங்க போடற சத்தத்தைப் பாத்து).

   “ஏய்! நீ ஒரு லூசு”ன்னு சொல்லுங்க அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு. ஏன்னா வலைப்பதிவு பண்ணும்போதே நானும் பப்ளிக் பிகர் ஆயிடறேன். யாரு வேணா என்ன வேணாம் சொல்லலாம், கேள்வி கேக்கறது தப்பு. ஆனா, “நீ இன்ன காரணங்களால லூசுன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்”, அப்படின்னு ஒருத்தரு சொன்னா, “ஏ, அப்பா, இதெல்லாம் ஒரு காரணம்னு நீ கண்டுபிடிச்சிட்டதா சொல்லுறியே, உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா?”ன்னு, தர்க்க ரீதியான கேள்விகள் எழும்ப வாய்ப்பிருக்கு.

   நாம அவரு பண்ணின மாதிரியே உள்நோக்கங்கள ஆராயக் கிளம்பறது தப்பு: அதை விட முட்டாள்தனம் வேற இல்லை. ஆனா, அவர் பேசற லா பாயின்ட் எல்லாம் உண்மையிலயே பொருத்தமானதுதானான்னு யோசிக்கறது நியாயம்னு தோணுது… அது தப்பா என்னன்னு நீங்கதான் சொல்லணும்.

   (ரொம்ப பெரிய பதிலாப் போயிருச்சு இது: என்ன பண்ணறது, இங்க கிரி மாறன் சாய்ன்னு மூணு பேருதான் இதுவரை அவங்க எண்ணத்தை பகிர்ந்துகிட்டிருக்காங்க. அதிலயும் ரெண்டு பேரு எனக்கு மிக நெருக்கமா தெரிஞ்சவங்க. நீங்க வேற பெரிய ஒரு மரியாதைக்குரிய வலைப்பதிவர் ஆச்சுங்களா, உங்க பேரை இங்க பாத்ததும் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்பட்டுட்டேன், மன்னிச்சுக்குங்க. இங்க வந்ததுக்கு மிக நன்றி.)

 2. Gujarat, We actually dont know what happened and at what circumstances. Everything was did by a high emotional wave of communal fire from both the sides. Without any opposition and equal forces an event of such and such magnitude would not have happened. We are very much alienated from that region and we are still not aware of what happened there. Unless otherwise Mr. Modi expresses his views openly we may not know them fully. Thanks for inviting.

  1. திரு மாறன், உங்க கருத்துகளை நிச்சயமா நான் மதிக்கிறேன். நாம சொல்லறதையே திரும்ப சொல்லுறவங்ககிட்டேயிருந்து ஒண்ணும் கத்துக்க முடியாது: ஆனா எதிரா பேசுறவங்கதான் நமக்கு நல்ல ஆசிரியரா இருக்காங்க. அதனாலே, உங்களுக்கு என்ன தோணுதோ, அதை வெளிப்படையா இங்க சொல்லலாம்: அதை கேக்கும்போது எனக்கு சில சமயம் வலிக்கலாம்: அது முக்கியம் இல்ல- ஏன்னா, அத வெச்சுதான் நான் என்னோட insecurityகளைத் தெரிஞ்சுக்க முடியும். வலையுலகத்துல, அடிச்சாலும் புடிச்சாலும் நாம எல்லாரும் அண்ணன் தம்பிங்கதான்: அதனால உங்க வருகை எனக்கு எப்பவும் உவப்பானதுதாங்கறதிலே சந்தேகமே இல்லை.

   குஜராத்- மோடி விஷயத்துல, அங்க நடந்த படுகொலைகள் குறித்து வெக்கப்படவேண்டி இருக்குங்கறதுல சந்தேகமே இல்லை. காரணங்கள் எதுவா வேணாம் இருக்கலாம், ஆனா அவைகள் நியாயங்கள் ஆகாது. அவருக்கு தெரிஞ்சே அந்த கொடுமை நடந்திருந்தா பெரிய தப்பு: அவரை மீறி நடந்ததுன்னு சொன்னா, சரியான நிர்வாகம் தரலைங்கற வகையிலேயும் அவரது ஆட்சி களங்கப்பட்ட ஒன்றே: எப்படிப் பாத்தாலும் அவர் பதவி விலகி இருக்கணும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s