தலைமைப் பொறுப்பும் நிர்வாகத் திறனும்…

நான் மிகவும் மதிக்கும் நண்பரொருவர் இந்த வலைத்தளத்தைப் பார்த்துவிட்டு, என்னப்பா ஒரே அபத்தமாக நிரப்பி வைத்திருக்கிறாய்- உருப்படியாக நாலு பேருக்கு உபயோகப்படுகிற மாதிரியோ அல்லது ரசிக்கிற மாதிரியோ ஏதாவது போடப்படாதா, என்று கேட்டார்.ரொம்ப நேரம் யோசித்து விட்டு, வேறு வழியில்லை என்று முடிவு பண்ணினவனாக, நண்பர் பாலாஜி மற்றும் கிரி இருவரிடமும் பதிவுகள் பண்ணிக் கொடுத்து இந்த வலைத்தளத்தை சிறப்பிக்க வேணுமாய் தெண்டனிட்டு கேட்டுக் கொண்டேன்.

பாலாஜி ரொம்ப நல்லவர். இந்தா இதைக் கொண்டு பிழைத்துப் போ! என்று ஒரு பதிவை அனுப்பி வைத்திருக்கிறார்-  இவனிடம் நம்ம சரக்கு என்ன பாடு படப் போகிறதோ என்னமோ என்று மிக முன்ஜாக்கிரதையாக, சத்தாக இருந்தாலும், சுருக்கமாகத்தான் தந்திருக்கிறார்.

என் மொக்கையை முடித்துக் கொண்டு விஷயத்துக்கு வருகிறேன்.

தலைமைப் பொறுப்பும் நிர்வாகத் திறனும்…

பாலாஜி

நீங்கள் எவ்வகைப் பணிகளையாற்றுபவரைத் தலைவர் என்று சொல்வீர்கள், நிர்வாகத் திறன்கள் அமையப் பெற்றவர் இவர் என்று எப்படி அடையாளம் காண்பீர்கள்? தொழில்முறை அமைப்பில் இவர்கள்  பங்கு என்ன, இவர்கள் ஆற்றும் பணிகள் எவ்வகையான பயன்கள் தருகின்றன?

கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர், தான் சேர வேண்டிய இடம் எது என்பதைத் தெளிவாக அறிந்தவராக இருக்கிறார், அதை அடையும் பாதையில் தக்க ஒரு வழித்துணையாக, முன்னுதாரணமாகத் திகழ்கிறார். எவரும் தான் செய்யாத ஒன்றைப் பிறரின்பால் வலியுறுத்த முடியாது. தலைவர்கள், தாங்கள் வார்த்தைகளால் வலியுறுத்துவதை தங்கள் வாழ்க்கையில் சாதித்துக் காட்டுகிறார்கள்.

காந்தியடிகள் ஒரு மெய்யான தலைவராக இருந்தார். அவரது பேச்சுக்கு அவரது வாழ்வே விளக்கமாக இருந்தது- காந்தியடிகளது  சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே  முரண்பாடுகள் இருக்கவில்லை. தர்ணாவில் அமரும் முதல் ஆள் அவராகத்தான் இருந்தார், மற்றவர்களுக்குப் பணிப்பித்ததனவற்றுக்கு தான்தான் முதலில் அடிபணிந்தார். காந்தியடிகளின்  கொள்கைகளை நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர் சரியான தலைமை அளித்தார் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அவர் எவரையும், இதைச் செய், என்று சொல்லிவிட்டு விலகிப் போனதில்லை. தான் முதலில் செய்யத் துவங்கியதைத்தான் தன் வழியை ஏற்றவர்களிடம்  தொடரும்படிப் பணித்தார்.

தலைமையின் அடையாளம் இதுதான்: ஒரு நல்ல தலைவர் தெளிவான பார்வை உடையவராக இருக்கிறார், தன்னிடம் மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்தவராக இருக்கிறார், என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பனவற்றுக்கு சரியான வழிகாட்டுதல் தருகிறார். அவர் எந்த நிலையிலும் கற்றுக் கொள்வதை நிறுத்துவதில்லை- எல்லா திசைகளிலிருந்தும் அவரது அறிவுக்கு வெளிச்சம் கிடைக்கிறது.

பொதுவாக ஒரு தொழில் நிறுவனத்தின் எதிர்காலம் அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் முடிவுகளால்தான் தீர்மானிக்கப் படுகிறது. அவர்தான் அதை அதன் அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்கிறார்.

நிர்வாகத் திறன்:

ஒரு நல்ல நிர்வாகி வேலையை சரியானபடி முடித்துத் தர வல்லவராக இருக்கிறார். அவரது முடிவுகள் நிறுவனம் நல்லவண்ணம் செயல்படவும் ஏற்றம் காணவும்  துணையாக அமைகிறது. நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் செல்கையில், அது எதிர்கொள்ளும் தடைகளை இனம் கண்டு, அவற்றை நீக்கி தங்கு தடையற்று அதன் முன்னேற்றப் பாதை அமைய வழி செய்கிறார். சரியானபடி சொன்னால், எந்த ஒரு தலைவருக்கும் ஒரு  நல்ல  நிர்வாகி  வலது  கரமாகத்  திகழ்கிறார்.

தலைமை பொறுப்பும் நிர்வாகத் திறனும் ஒன்றுக்கொன்று ஏற்புடையவை அல்ல என்று கருத முடியாது. ஒரு நல்ல தலைவர் சிறந்த நிர்வாகியாகவும், நல்லதொரு நிர்வாகி சிறந்த தலைவராகவும் வெற்றி காண்பதுண்டு.

பாலாஜி இங்கு பதிவுகள் செய்கிறார்:  Leading and Managing Business

One thought on “தலைமைப் பொறுப்பும் நிர்வாகத் திறனும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s