உண்மையிலயே உயர்வான மனிதர், இல்லிங்களா?

எனது அலுவலகத்தில் ஒரு நண்பர் ரெகுலராக ரத்த தானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் மீது அந்த ஒரு காரணத்துக்காகவே நான் ரொம்ப மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் ஒரு தடவை என்னுடன் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார், “நீங்க கூட ப்ளட் டொனேட் பண்ணலாம்- மத்தவங்களுக்காக இல்லேன்னாலும், அவங்க ஒவ்வொரு தடவ ரத்தம் எடுக்கும் போதும் உங்களுக்கு நிறையா டெஸ்ட் பண்ணுவாங்க. காசு குடுக்காமியே நீங்க உங்க ஆரோக்கியத்தை தெரிஞ்சுக்கலாம், இல்லியா?”.

எனக்கு ஏன் அவரது நினைவு வந்ததுன்னா, நான் ஜேம்ஸ் ஹாரிசன் என்கிறவரைப் பத்தி படிக்க நேர்ந்தது. அவருக்கு பதினாலு வயசு இருந்தப்போ, ஒரு இருதய அறுவை சிகிச்சைக்காக பதினைந்து லிட்டர் ரத்தம் அவருக்கு தானமா கிடைத்ததாம். அப்பவே, அவர் தன் வாழ்நாள் முழுசும் ரத்த தானம் பண்ணனும்னு முடிவுபண்ணிட்டாராம்.

அவருக்கு பதினெட்டு வயசு இருந்தப்போ அவரது ரத்தத்தை சோதனை பண்ணினப்போ அவரது ரத்தத்துல Rhesus disease என்கிற குழந்தையோட ரத்தத்துக்கும் அம்மாவோட ரத்தத்துக்கும் ஒவ்வாத நிலையில குழந்தைகள இளம்பிள்ளைகளா இருக்கறப்பவே கொல்லற ஒரு வியாதிக்கான எதிர்ப்பு சக்தி இருக்குன்னு கண்டு பிடிச்சாங்களாம். அதுக்கப்புறம் என்ன?- அம்பத்தாறு வருஷமா அவரு ரத்த தானம் பண்ணிக்கிட்டிருக்காரு. அவரோட ரத்தத்துல இருந்து அந்த நோய்க்கான தடுப்பு மருந்து தயாரிச்சிருக்காங்க.

இது வரைக்கும் குறைந்த பட்சம் ரெண்டேகால் மில்லியன் குழந்தைகளை அவரோட ரத்தம் காப்பாத்தி இருக்காம். வாழ்ந்தால் இவரைப் போல வாழணும்…

இந்த செய்திய இங்க படிங்க:  One Man Saves over 2 Million Babies

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s