வெற்றியின் ரகசியம்

எழுத்தாளர்களானாலும் யாரானாலும் சுயமாய் தொழில் முனைவோர், தோல்விகளைத் தாங்கிக் கொள்ளப் பழக வேண்டும். இலக்கியத்துக்கு சம்பந்தமே இல்லாத, கருத்தடையை எது வரை அனுமதிக்க வேண்டும் என்பதை விவாதிக்கும் Jacob Appel ஒரு எழுத்தாளராக  இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நிராகரிப்புகளை சந்தித்த பின்னரும் எப்படி தான் தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்தார் என்பதை சொல்கிறார்: நல்ல புத்தகத்தைப் படிக்கப் பழகும் பதிப்பகத்துக் கத்துக்குட்டி வாசகர்களைத் தாண்டி செல்வதுதான் வெளியீட்டின்  ரகசியமே. இதற்கு உதாரணமாக, தானே முன்பொரு காலத்தில் பதிப்பகமொன்றில் வேலை பழகிக் கொண்டிருந்த நாட்களில், தான்  Allen Ginsbergஇன் அழைப்பைத் துண்டித்ததைக் குறிப்பிடுகிறார்:

கின்ஸ்பெர்கின் ஊளையை (Howl) மறக்க முடியுமா!-

என் தலைமுறையின் சிறந்த மனங்கள்
சித்தம் கலங்கி  அழியக் கண்டேன்,
பசி பைத்தியம் நிர்வாணமாய்
அதிகாலை வேளையில்  நீக்ரோ வீதிகள் வழியே
பிணவுடலை வளித்துச் சென்றார்கள்
சினந்த ஊசியால் ஆற்றுப்பட்டடங்க…

மேதைமை என்ன குரலிலும் முகத்திலும் கையெழுத்திலும் ஒட்டியா  வைத்திருக்கிறது?- கண்டவர்களெல்லாம் அதை இனங்கண்டு கொள்வதற்கு!

யாரானாலும் சரி, முயற்சிதான் உயர்வைத் தரும்- நிராகரித்தல்களுக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதைக் காட்டிலும், நிராகரிப்பாளர்களின் பரிதாப நிலைமைக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டு, நம் அடுத்த முயற்சியைத் துவங்குவோமானால் நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது-

என்ன, சரிதானே நான் சொல்வது?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s