இயக்கங்களுக்குத் தேவை தலைவனா, தொண்டனா?

தலைமை தாங்குதலுக்கு  மிக முக்கிய தேவை என்ன? ஆமாம், தொண்டர்கள்!

தலைமை தாங்குதலைப்  பத்தி நண்பர் பாலாஜி இந்த தளத்துல ஒரு ஆச்சாரமான பதிவு செய்திருந்தார். அதை உங்களில் எத்தனை பேர் படித்தீர்கள் என்று தெரியவில்லை: நான் தினம் ஒருத்தரைக் கொண்டு வருகிற பொன் முட்டையிடுகிற வாத்தாகத்தான்  நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கிற அந்தப் பதிவைப் பார்க்கிறேன்- நன்றி, பாலாஜி.

தலைமையைப் பத்தி இருந்தாலும், இது வேற மாதிரியான பதிவு. TED Talks எனக்கு மிகவும் பிடித்த, நான் விரும்பிப் பார்க்கிற தளம்.  அதில Derek Sivers என்பவர் தலைமைப் பொறுப்பு என்பதைவிட, இயக்கங்களின் இயல்பை மிக அழகாக, ரசிக்கும் விதமாக சொல்லியிருக்கிறார்.

விஷயம் இதுதான்:

எல்லா தலைவர்களுக்கும் அவனைத் தூக்கி விட ஒரு தொண்டன் தேவைப் படுகிறான். ஏனென்றால், அந்த ஒருவனைப் பார்த்துதான் மற்றவர்கள் வந்து சேர்ந்து கொள்கிறார்கள். Sivers வெளிப்படையாக சொல்கிற மாதிரி, முதல்  தொண்டன்தான் தனியாய்த் திரிந்து  கொண்டிருக்கிற கிறுக்கனைத் தலைவனாக்குகிறான்! அது மட்டுமல்ல, தொண்டர்கள் ஒருத்தரை ஒருத்தர் பின்பற்றவும் செய்கிறார்கள். அப்படி வந்து சேர்கிற தொண்டர்களை மரியாதை கொடுத்து, மதிப்புடன் நடத்தி கூட்டத்தைக் கட்டுக்கோப்பாய் வைத்துக் கொள்வது வேறு கலை.

தொண்டர்கள் தலைவனாக ஒருத்தனை  உருவாக்கி, ஒருத்தரை ஒருத்தர் பின்பற்றி ஒரு இயக்கத்தை அமைக்கிறார்கள் என்று சொன்னால்- இயக்கங்களின் வளர்ச்சியைவிட, வீழ்ச்சிக்கே பெரும்பாலான தலைவர்கள் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s