தமிலிஷில் டெட் ஹ்யூஸ் கவிதைகள்

தமிழ் வாசகர்கள் நல்ல இலக்கியத்தைப் பெற தவித்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் வந்துவிட்டது- நாம்தான் நமது ரசனையை குறைவாக மதிப்பிடுகிறோம் என்று நினைக்கிறேன்:

ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்ததென்றால் நேற்று நான் விளையாட்டு போல இந்த தொடுப்பை தமிலிஷ் என்ற திரட்டிக்குக் கொடுத்தேன்: டெட் ஹுஸ் கவிதைகள்:

அதில், “எனக்குப் பெரிதாக ஒன்றும் புரியவில்லை- ஆனால், ted hughes கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கத் துணிந்ததற்காக நிச்சயம் பாராட்ட வேண்டும்.”- என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

நான் உண்மையைத்தான் சொன்னேன், ஆங்கிலத்தில் படித்தபோது புரிந்த அளவைவிட சற்றுக் கடினமாகத்தான் தமிழ் மொழி பெயர்ப்பு இருந்தது. அதை சொல்லும்போதே, அவ்வளவுதான், இதை எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன்.

ஆனால் என்ன ஆச்சரியம், இன்று காலை பார்த்தால் அந்தப் பதிவை  மேலும் பத்து பேர் அங்கீகரித்திருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்- அ. டெட் ஹ்யூஸ் கவிதைகளைப் படிப்பதற்கு ரசனை உள்ள  வாசகர்கள் தயாராக இருக்கிறார்கள்.  ஆ. எனக்கு ஒரு கவிதை புரியவில்லை என்ற விஷயத்தை வாசகர்கள் பொருட்படுத்தவில்லை.

எது எப்படியிருந்தாலும், நான் கொடுத்த  தொடுப்பு சோடை போகவில்லை என்பது நிறைவளிக்கிறது.

Advertisements

2 thoughts on “தமிலிஷில் டெட் ஹ்யூஸ் கவிதைகள்

  1. நல்ல கவிதைகள். சரளமான மொழிபெயர்ப்பு. புரியும்படியாகத்தானே இருக்கிறது? அறிமுகத்துக்கு நன்றி. இல்லையென்றால் தவறவிட்டிருப்பேன்.

  2. தங்கள் கருத்தைத் தெரிவித்ததற்கு நன்றி.
    உண்மையை சொன்னால், எனக்கு அவர் ஆங்கிலத்தில் எழுதினதே அவ்வளவு சரியாகப் புரியவில்லை (நான் அவரது வேறு சில கவிதைகளைப் படித்திருக்கிறேன்: மனிதனைத் தவிர வேறு உயிரினங்களை ஒவ்வொன்றையும் அவரளவுக்கு ரசித்துப் பாடிய சமகாலக் கவிஞர்கள் இல்லை என்று நினைக்கிறேன்: ஆனால் அவற்றைப் போலில்லாமல் இந்த கவிதைகள் சற்று தத்துவ விசாரணைகளை உள்ளடக்கியிருக்கிறதோ என்று யோசிக்க வைக்கிறது).
    நீங்கள், “புரியும்படியாகத்தானே இருக்கிறது?” என்று சொன்னமைக்காக இரு மொழிகளிலும் அந்தக் கவிதைகளைத் திரும்பப் படித்துப் பார்க்கிறேன்.
    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s