பதிவர் கிரிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்…

என் அன்பிற்கும் அவதானத்திற்கும் உரிய நண்பர் கிரி அவர்களுக்கு,

அந்த நாள் இன்னும் நினைவிலிருக்கிறது. நவம்பர் 29 2009 என்று நினைக்கிறேன். அன்றுதான் முதல் முதலாக பொறி உருண்டை செய்வது எப்படி என்று படித்தேன். அதற்கடுத்த நாள் நடந்த நெஞ்சை குளிர்விக்கும் இனிய நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது. என் மனைவி வேலைக்குக் கிளம்பிச் சென்றதும், நான் தாங்கள் தங்கள் தளத்தில் இடுகையிட்டிருந்த செய்வகையின்  துணையோடு பொறி உருண்டை செய்து வைத்து, அவள் வந்ததும் அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, அப்புறம் அவள் அந்த சந்தோஷத்தில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்த… இதற்கு மேல் சொல்ல முடியாது, சொன்னால் லீனா மணிமேகலைக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்… பேர் ரிப்பேர் ஆகி விடும்.

அரை கிலோ வெல்லம்). வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, அழுக்கு போக வடிகட்டி, பாகு பிடித்து, பொரி கலந்து, உருண்டை பிடித்து….. அப்புறம் என்ன… சாப்பிடுங்க…

இதை விட  சுருக்கமாக இந்த இனிய சங்கதியை, ஒரே வரியில், நெஞ்சத்து அழுக்கை எல்லாம் வடிகட்டித் தாங்கள் சாரத்தை  மட்டும் தெளிவாக்கித் தந்திருக்கிற மாதிரி வேறு யாராலும் செய்திருக்க முடியாது- இந்த வரியை நினைக்க நினைக்க என் நாவில் ஜோல்லூரி, என்னுடைய தூக்கம் கெடுகிறது. உங்களால் மட்டும் எப்படி இப்படி எழுத முடிகிறது என்று வியக்கும் வேளை\களாய் எனது இரவு பொழுதுகள் கழிந்து, பகற்பொழுது ஒரு வகையிலான ஜுஜூபி நிலையில், மன்னிக்கவும் சுஷூப்தி நிலையில்- வாராது வந்து போகிறது.

பொறி உருண்டைதான் இப்படி என்றால், தவளை அடை செய்வது குறித்து எழுதி இருந்தீர்களே! (Jan 3, 2010 )  – “சென்ற முறை செய்து பார்த்த பொரியுருண்டை போல அல்ல இந்த முறை. தவலடை நீங்கள் செய்தும் உண்டும் மகிழலாம். நான் கேரண்டி.” காவியுடை உடுத்தி பொக்கைப் பல் தெரிய குழந்தை போல் சிரிப்பாளே, சுப்புப் பாட்டி- அவளது உன்னத மரபில் கல்வி கற்று, கலை தேர்ந்தவரல்லவா நீங்கள்: உங்கள் ஒவ்வாரு சொல்லுக்கும் பட்டினத்தாரின் ஓட்டிலிட்ட அப்பத்துக்கு இருக்கிற சக்தி இருக்கிறது என்பதை என் அனுபவத்தில் உணர்த்திக் காட்டினீர்கள்.

ஆமாம், கிரி சார், “அரைத்த ரவையை, உப்புமா கிண்டுவது போல தயார் செய்து கொள்ள வேண்டும்“, என்று தெளிவாகத் தாங்கள் சொல்லியிருந்தும் எனது அரை வேக்காட்டு மேதாவித்தனத்தில், உப்புமா கிண்டாமல் அலட்சியப்படுத்தியதில், அது எண்ணெய்யில் போரிக்காமலேயே உறைந்து கிடந்தது: ஏறத்தாழ மைசூர் பாகை நினைவு படுத்தியது எனலாம். அப்புறம் என்ன ஞான மரபில் வந்த தங்கள் வாக்கு பொய்க்குமா என்ன? நீங்கள் சொன்னபடியே, நான்தான் அந்த தவளை வடையை “ செய்தும் உண்டும் மகிழ்ந்தேன்.”

ஆமாம்,  என்  ஆதர்ச ஆசிரியனின் வாக்கு மெய்ப்படுமெனின் வேக வைத்த  தவளை அடை என்ன,  வேகாத தவளைத்  தோடையைக் கூட நான் சந்தோஷமாகக் கடித்து குதறுவேன்.

என்னமோ நினைத்து என்னமோ எழுதிக் கொண்டிருக்கிறேன்:எப்படியோ தெரிவதில்லை, உங்களுக்கு எழுதும்போது மட்டும் வார்த்தைகளுக்கு தட்டுப்பாடே வருவதில்லை- வாக்கியங்கள் தட்டுத் தடுமாறினாலும், முற்று  பெரும் வழி தெரியாமல் நீண்டு  கொண்டே போகின்றன…

சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன்: அன்றொரு நாள், சாட் செய்யும் போதும், பின்னொரு நாள் எனது குறுஞ்செய்திக்கு பதிலளிக்கும்  போதும், கோங்குரா செய்யும் வகையை அறிவிக்கிறேன் என்று சொன்னீர்களே, அது எப்போது நான் அறியக்கூடும்? ஆரிய பவனில் சாப்பிட்டு விட்டேன், ஆனந்த பவனில் சாப்பிட்டுப் பார்த்தேன், ஏன், ஆந்திர பவனில் கூட தேடித் பார்த்தேன்- என் நாவுக்கினிய வகையில் யாரும் கொங்குராவை செய்யக் காணோம்.

இந்தத் தமிழ் நாட்டில் கொங்குராவின் செய்வகையினை நிர்ணயம் செய்வதற்கு உங்களைத் தவிர வேறு யாராலும் முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது: அதற்கு அன்றொரு நாள் நீங்கள் சொன்னபடி நான் பொறி உருண்டை செய்து அதனால் நான் அனுபவித்த அதிர்வின் அலைகள் இன்றும் நினைத்த மாத்திரத்திலேயே என் முதுகெலும்பின் கீழ் குருத்தில் கிளம்பி, தோள்கள் வழியாகச் சுற்றி வந்து, இதயத்தில் இறங்கி, தொண்டை நாடிகள் மூலமாக என் நாவை அசைத்து அதில் அமிர்தமென இனிய தரங்கமாய் சுரப்பதே சாட்சி.

கொங்குராவின் மர்ம முடிச்சுகள் அவிழ்வதானால், அது தங்களால்தான் இயலும்…

அன்பன்,

பாஸ்கர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s