நாடாளும் கவிஞன்

குளத்தின் நீரை

மாற்றியவர்கள் செத்த மீன்களை

விட்டுச் சென்றார்கள்.

பறவைகளின் கானம்

குளத்தைச் சுற்றி இசைநூலிழை

கரைகிறது காகம்.

இடுகாட்டில் மர உச்சிகளில்

உயிர்க்கிறது வாழ்க்கை

கல்லறைகளின் மேலே

இதுவெல்லாம் என்ன என்று பார்க்கிறீர்களா? ஐரோப்பியன் யூனியன் ஜனாதிபதியாக இருக்கிற  ஹெர்மன் வான் ரோம்போயோ ( Herman Van Rompuy) எழுதிய ஹைக்கூக்கள்தான் இவை.

ஹைக்கூக்கள் எழுதுவதால் தான் இப்போது நல்ல அரசியல்வாதியாக இருப்பதாக அவர் கூறுகிறார்,

” ஒரு ஹைக்கூ கவிஞன், அரசியலில் ஈடுபடுகையில், அளவரியாதவனாக இருக்க முடியாது, அதிக ஆணவத்தையும் வளர்த்துக் கொள்ள முடியாது, தீவிர நியாயங்கள் பேசுபவனாகவும் இருப்பதற்கில்லை. அவன் சமநோக்கோடு செயல் புரிபவனாக இருக்க வேண்டும், எளிமையையும் இசைவையும் நாடுபவனாக இருக்க வேண்டும், ஒரு பெரிய பகுதியின் சிறிய பங்குதான் தானென்று உணர்ந்திருக்க வேண்டும்.”

27  நாடுகளுக்கு ஜனாதிபதியாக இருக்கிற அவரது ஹைக்கூக்கள் ஜப்பானிலும் ரசிக்கப் படுகின்றனவாம்.

வாழ்த்துக்கள்- அவரது கவிதைகளைக் குறித்து என்ன சொன்னாலும், அவர் ஒரு அரசியல்வாதிக்குரிய குணங்களாகக் கருதுவன குறித்து இரு பேச்சுக்கு இடமில்லை.

நன்றி: Guardian

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s