புதிய பாடங்கள்: யுப்னோ குடியினரின் கணித முறை

ஊருக்கு ஊர் நிலப்பரப்பு வன விலங்குகள் மற்றும் செடி கொடிகள் மாறுகிற மாதிரி மனிதர்களின் எண்ணங்களும் மாறும் போலிருக்கிறது. நமக்கு சரியாக இருப்பது மற்றவர்களுக்கு சரியாக இருப்பதில்லை, நாம் செய்வது நமக்கு இயல்பாக இருக்கிறது என்றால் அதற்கு மாறாக மற்றவர்கள் வேறு ஏதாவது செய்தால், அது நமக்கு சிரிப்பாக இருக்கிறது.

என் மகன் ஆரம்ப காலத்தில் விரல் விட்டுத்தான் எண்ணுவான். பத்துக்கு அப்புறம் கால்களில் இருக்கிற விரல்களைக் கொண்டு கணக்கு போட ஆரம்பித்து விடுவான். ஒன்றாவது வந்தவுடன் ஷூ போடச் சொன்னார்கள்- அதனால் அவனுக்கு கூட்டல் கழித்தலில் கொஞ்சம் பிரச்சினை வந்தது, அப்புறம் சரியாகி விட்டது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், பாப்புவா நியூ கினியாவிலே யுப்னோ என்றொரு குடி இருக்கிறதாம். அவர்களும் நம்மைப் போல் ஒற்றை இல்லக்கங்களை விரல்களில் எண்ணத் துவங்கி, இருபது தாண்டியதும் மூக்கு, கண்கள், நிப்பிள்கள், தொப்புள் என்று உடலில் உள்ள சகல உறுப்புகளையும் கணிதக் கருவிகளாக்கி விடுகிறார்கள் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இடது மற்றும் வலது விரைகள் எண் முப்பத்து ஒன்று மற்றும் முப்பத்து இரண்டைக் குறிக்குமாம். முப்பத்து மூன்றின் குறி என்பதை நீங்களே அடுத்து ஊகித்து விடுவீர்கள்.

இதில் விந்தை என்னவென்றால், பெண்கள் எப்படி கூட்டல் கழித்தல் செய்கிறார்கள் என்பதை நம் ஆய்வாளர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை: காரணம் அவர்கள் குடியில் உள்ள சாஸ்திரங்களின்படி பெண்களுக்கு கணிதம் கற்றுக் கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது- அது தவிர எண்களைப் பற்றிக் கேள்வி கேட்டால் அதற்குப் பதில் சொல்ல அந்த ஊர் பெண்கள் அனைவரும் மறுத்து விட்டார்களாம்.

இதை நான் கார்டியனில் படித்தேன்.

இதே கட்டுரையில் இந்த கணினி உலகின் முதுகெலும்பாயிருக்கிற பைனரி எண்களை லீப்னிட்ஸ் வடிவமைப்பதற்கு காரணமாயிருந்த அவரது அழகுணர்வு மற்றும் இறையுணர்வு பற்றிய அரிய குறிப்பும் காணக்கிடைக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s