ஜான் வீலரின் சில மேற்கோள்கள்

இன்றைக்கு ஜான் வீலரின் ஒரு மேற்கோளைத் தேட வேண்டி வந்தது. அப்போது அத்தோடு அவரது மேலும் பல சுவையான மேற்கோள்கள் காணக் கிடைத்தன:

இதுதான் நான் முதலில் தேடிய மேற்கோள்:

  1. “இந்த உலகத்தை விவரிக்கக் கூடிய சமன்பாட்டை (Equation) நீ உன் வீட்டுத் தரையில் ஒரு டைல்ஸில் எழுதுகிறாய் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அடுத்து, இது உலகத்தின் இயல்பைப் பற்றி இன்னும் கொஞ்சம் சரியாக சொல்கிறது என்று இன்னொரு சமன்பாட்டை எழுதுகிறாய். அப்படியே ஒவ்வொன்றாக எழுதிக்கொண்டே உன் வீட்டு வாசற் கதவுக்கு வெளியே நிற்கிற கதவுக்குப் போகிறாய். இப்போது நீ ஒரு மந்திரக் கோளை எடுத்து, தரையில் கிடக்கிற சமன்பாடுகளுக்கு பறக்கும்படி உத்தரவு இடுகிறாய் என்றால், அவற்றில் ஒன்று கூட எழுந்திருந்துப் பறக்காது. இந்த உலகம் பறக்கிறது: எந்த சமன்பாட்டுக்கும்  இல்லாத உயிர் அதற்கென்று இருக்கிறது”
    FXQi Community.

நாம் அறியாமை என்னும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் வாழ்கிறோம். அறிவாகிய தீவு வளர வளர, நமது அறியாமையாகிய கரையும் நீள்கிறது.
Brainy Quote

நீ வித்தியாசமான ஒன்றைக் காணாத நாளென்று ஒன்று இருந்தால், அதைப் எதுவும் நடக்காத நாளென்றே சொல்ல வேண்டும் என்றார் வீலர். அதற்கு ஒரு மாணவன் இந்த உலகவெளி அவ்வளவு மட்டமாக இருக்கும் என்பதை நான் நம்ப மாட்டேன் என்று சொன்னான். வீலர் பதிலளித்தார், நாம் ஒப்புக் கொள்ள மறுப்பனவெல்லாம் நம்மை அது குறித்து சிந்திக்கச் செய்கிறது, சிந்தனையின் விளைவாய் நாம் புரிந்து கொள்கிறோம், புரிந்து கொண்டனவற்றில் நாம் சந்தோசம் அடைகிறோம், நம்மை மகிழ்விப்பனவற்றை நாம் விரும்புகிறோம். இறுதியில் உனது கோட்பாட்டை   நான் விரும்பும் நிலை எனக்கு வந்தாலும் வரலாம்”

உலகம் என்று ஒன்று நமக்கு அன்னியமாக, நமக்கு வெளியே அங்கே இல்லை. நிகழ்வனவற்றை எல்லாம் நிகழ்த்துவதில் நாம் தப்ப முடியாதபடிக்குப் பினைந்திருக்கிறோம். நாம் வெறுமே வேடிக்கை பார்ப்பவர்களல்ல. நமது பங்களிப்பும் இருக்கிறது. ஒரு விந்தையான வகையில், நாம் வாழ்வது நமது உள்ளீடுள்ள உலகில்….”

“புத்தர், இயேசு, மோசஸ், கன்பூசியஸ் போன்றவர்களைப் பற்றி நீங்கள் பேசலாம். ஆனால் அவர்கள் உண்மையில் இருந்திருக்கக்கூடும் என்பதை நான் ஏற்கக் காரணமாக இருந்தது நீல்ஸ் போருடனான உரையாடல்கள்தான்.”
Today in Science History

மூன்றாண்டுகள் முன்னர்தான் மறைந்தார் வீலர். அவர் ஐன்ஸ்டீன், போஹ்ர் போன்ற இயற்பியல் மேதைகளோடு நெருங்கிப் பழகியவர்: பீன்மன், எவரட் போன்ற இயற்பியலின் மாபெரும் ஆளுமைகளுக்கு ஆசிரியராக இருந்தவர்.

Advertisements

2 thoughts on “ஜான் வீலரின் சில மேற்கோள்கள்

    1. நன்றிங்க. இங்கு எழுதிய நூற்றுக்கணக்கான பதிவுகளில் உருப்படியான பத்து பதிவுகள் என்று கணக்கெடுத்தால் அதில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

      தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s