செஸ் உலகக்கோப்பை 2010

நான் சதுரங்க விளையாட்டை ஓரளவுக்கு விளையாடுவேன், பத்து வயதுக்குட்பட்ட பழகு நிலையில் இருக்கிற சிறுவர்களோடு.

ஆனால்  இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வந்துக் கொண்டிருந்த சதுரங்க விளையாட்டுக் குறிப்புகளை வெட்டியெடுத்து விளையாடிப் பார்த்ததுண்டு: அதன் சிக்கல்கள் புரியாமலேயே.

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற உலகக் கோப்பை பந்தயத்தில் நம்ம ஊர் ஆனந்த் டோபோலோவோடு மோதுகிறார். டோபோலோவ்தான் ஜெயிப்பார் என்று எனக்கு உள்ளுணர்வு சொல்கிறது,  ஆனந்த் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு சமயம் அவர் தோற்றுப்போய்விட்டால் வரக்கூடிய  வருத்தத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவதற்காகத்தான் உள்ளுணர்வு இப்படி எதிரிடையாக  வேலை செய்கிறது என்று தோன்றுகிறது.

அது கிடக்கட்டும்:

இந்த செஸ் உலகக்கோப்பையின் ஒவ்வொரு ஆட்டத்தைப் பற்றியும் கூட்டாஞ்சோறில் படிக்கலாம். இட்லிவடையிலும் லலிதா  ராம் என்பவர்  அவ்வப்போது எழுதுகிறார். ஆங்கிலத்தில் TCWJ என்ற தளத்தில் விவரமான அலசல் வந்துக் கொண்டிருந்தது- மட்டையடி வீரர்கள் களத்தில் குதித்ததும் சதுரங்க அட்டையை மூட்டை கட்டி வைத்துவிட்டு Soulberry என்ற பெயருடைய அந்த பதிவர்  துரதிருஷ்டவசமாக மேற்கிந்தியத் தீவுகளின் பக்கம் தன பார்வையை மாற்றிக் கொண்டு விட்டார்.

SUSAN POLGARஇன் வலைத்தளம்.

சொல்வனத்தில் இது குறித்த சம்-அப்.

ஆனந்த்-டோபோலோவ் ஆடிய அத்தனை ஆட்டங்களும் இங்கே– பயனாளர்களுக்கு நட்பாக 🙂

திரு லலிதா ராம் அவர்கள் இந்த உலகக் கோப்பையை பிரமாதமாகப் பதிவு செய்திருக்கிறார்: அவை இங்கே– கிரிக்கெட் தவிர.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s