தொலைக்காட்சியும் மூளை மழுங்கிய குழந்தைகளும்…

பீபீசீயில் இந்த ருசிகரமான/ அதிர்ச்சியூட்டும் தகவல் காணக் கிடைக்கிறது:

சிறு வயதில் அதிகம் தொலைகாட்சி பார்க்கும் சிறுவர்கள் வளரும்போது பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். முக்கியமாக, படிப்பு.

இரண்டு வயதிலேயே அதிகம் தொலைகாட்சி பார்க்கின்ற பழக்கத்துக்கு அடிமையாகி விட்ட சிறுவர்கள், பின்னாளில் பள்ளிக்கு செல்கையில், வகுப்பறையில் கவனம் செலுத்த இயலாதவர்களாக இருக்கிறார்களாம், அதை விட மோசம், அவர்கள் கணிதத்தில் குறைந்த மதிப்பெண்களே எடுக்கிறார்கள்.

இந்தக் குழந்தைகள் விளையாட்டில் நாட்டமில்லாதவர்களாகவும், மற்ற குழந்தைகளை விட எடை மிகுந்து கண்டகண்டதையும் தின்கிற, ஏப்பம் விடுகிற,  கும்பகர்ணன்களாக  வளர்கிறார்கள்.

இதைத் தவிர இவர்கள் கொலை மற்றும் கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடுகிறவர்களாக வளரும் வாய்ப்பிருக்கிறது. இதை  அவர்கள் சொல்லவில்லை, நானாக சொல்கிறேன். பீபீசீ போட்டிருக்கிற அட்டவணையில்  அது ஒன்றுதான் இல்லாமல் இருக்கிறது.

மூளை வளர்கிற  காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டியால் அவர்கள் மூளை மழுங்கடிக்கப்படுகிறதால்தான் இந்த விளைவு என்று ஊகிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

“நம்மை விட்டால் போதும்,” என்று நம் குழந்தைகளை கார்டூன் சானல் முன் சாணி மாதிரி போட்டுவிட்டு நாம் பாட்டுக்கு நம் வேலையைப் பார்க்கப் போகிறோம். ஆனால் டாம் அண்ட் ஜெரி  பார்க்கிற நம் குழந்தைகள் ஸ்னோபெல்லாக மாறி விடுவதை நாம் உணரும்போது காலம் பொய் விடுகிறது, இல்லையா?

அப்புறம் அதற்கு என்று மருந்து மாத்திரை, பிரத்யேக வகுப்புகள்- இப்படி போகிறது கதை!

One thought on “தொலைக்காட்சியும் மூளை மழுங்கிய குழந்தைகளும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s