கடந்தாலும் கழியாத காதல்…

கடந்த சில நாட்களாக நான் ஒரு அழகிய கவிதையின் தனித்துவ உலகில் வேதனையும் லயிப்பும் கூடிய நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தேன் என்று சொன்னால் மிகையாகதான் இருக்கும்- ஆனால் உணமையில் கற்பனைக்கு இல்லாத ஜோடனைகள் நமது விழிப்பு உலகில் தானாய் அமைந்து விடுகின்றன- யாரும் திட்டமிடாமலேயே, எந்த பொய்க்கும் அவசியமில்லாமல்.

Apollinaireன் இந்த கவிதையை நான் ஆங்கிலத்தில் படித்த கணம் என் மூச்சே நின்று விட்டது- எவ்வளவு அழகான, கருத்தாழமிக்க வரிகள். அப்போதே, சரி இதை தமிழில் மொழிபெயர்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு பண்ணிவிட்டேன். எனக்கு எனது திறமையில் நம்பிக்கை குறைவாகத்தான் இருக்கிறது- மேலும், நான் அறியாத மொழிகளில் பிரஞ்சு மொழியும் ஓன்று. அர்த்தத்தை சிதைத்துவிடாமல் எப்படி இதை தமிழில் தருவது என்று தயங்கினேன்- எதற்கும் இருக்கட்டும் என்று ஆங்கிலத்தில் வெளிவந்த பல்வேறு மொழிபெயர்ப்புகளைப் படித்ததும்தான் நின்ற மூச்சு திரும்ப வந்தது- ஒவ்வொருத்தரும் தோன்றிய மாதிரியெல்லாம் இந்த உன்னதமான கவிதையை மனம் போன போக்கில் திரித்து- ஸாரி- திருத்தி எழுதியிருக்கிறார்கள். இவர்கள் செய்யாத கொலையையா நான் செய்து விடப் போகிறேன் என்ற துணிச்சல் வந்தது.

எதோ ஒரு உந்துதலில் அப்போது ஒரே மூச்சில் எழுதி முடித்து விட்டேன். ஆனால் அதற்கப்புறம் ஒவ்வொரு வரியிலும், ஏன், சொல்லிலும் பிழை இருக்கிற மாதிரி தோன்றியது. இது ஒரு பெரிய உறுத்தலாக இரவும் பகலும் என்னை வதைத்தது. ஒரு தடவை ராத்திரி இரண்டு மணிக்கு எழுந்து உட்கார்ந்து இந்தக் கவிதையை நூற்று என்னாவது தடவையாகப் படித்துப் பார்த்து ஒரே ஒரு சொல்லை மட்டும் திருத்தினேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?

எது எப்படியோ, இதற்கு மேல் இந்த வலி தாங்காது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். படித்துப் பாருங்கள்- உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்காத வார்த்தைகளை மாற்றி எழுதி உங்கள் தளத்தில் பதிப்பித்துக் கொள்ளுங்கள்- கவிதை கைமீறிப் போய்விட்ட நிலையில் சொல்லுக்கும் கற்பனைக்கும் நிரந்தர தட்டுப்பாடு இருக்கிற நிலையில் கஷ்டப்படுகிற ஒரு ஏழைக் கவிஞன் வேறு என்ன சொல்ல முடியும்?

மிஹாபூ பாலத்தின்கீழ் செல்கிறது சென்
அதையொத்து இசைகிறது நம் காதல்கள்
மறவாதிருக்க நான் நினைவுறுத்திக் கொள்கின்றேன்
எப்போதும் துன்பம் கடந்தபின் இன்பம்

தொடரும் இரவுகள் மணியோசை ஒலிக்க
செல்கின்றன நாட்கள் இருக்கின்றேன் நான்

கையோடு கை கோர்த்து முகத்தை முகம் நோக்கி
நாம் நிற்கையில் நம் கைகள்
பிணைத்த பாலம் கீழ்
களைத்த அலைகள் முடிவற்ற காட்சி

தொடரும் இரவுகள் மணியோசை ஒலிக்க
செல்கின்றன நாட்கள் இருக்கின்றேன் நான்

ஓடும நதி போல் விட்டுப் போகிறது காதல்
காதல் போகிறது
மெல்ல அடங்கும் நம் வாழ்க்கை
உக்கிரமாய்த் தாக்கும் நம்பிக்கை

தொடரும் இரவுகள் மணியோசை ஒலிக்க
செல்கின்றன நாட்கள் இருக்கின்றேன் நான்

நாட்கள் போம் வாரங்கள் போம்
இழந்த காலம் கழிவது கிடையாது
திரும்புவதில்லை கடந்து போன காதல்கள்
மிஹாபூ பாலத்தினடி செல்கிறது சென்.

இதன் ஆங்கில வடிவங்கள் இங்கே இருக்கின்றன:John Irons, Richard Wilbur, Donald Revell , William A. Sigler,  Richard Wilbur, Peter Dean, James Kirkup, A.S. Kline, Oliver Bernard and  Charles Bernstein,  A.Z. Foreman, literal translation and discussion with poetic version-  C. John Holcombe.

இதை எழுதியவரே படிப்பதை இங்கே கேளுங்கள்: LepontMirabeau.ogg via wikisource

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s