காத்திருக்கிறது காலம்- போர்ஹேவின் கவிதை

பலமுறை நான் என்னைக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன், எக்காரணங்கள்
தொட்டு நான் என் அந்திப்பொழுது சாயும்போது கற்கத் துவங்கினேன்,
நிறைவுறுமென்று குறிப்பாய் எந்தவொரு நம்பிக்கையுமில்லாமல்,
கூர்மழுங்கிய நாவுடைய ஆங்கிலோ-சாக்ஸன்களின் மொழியை.
ஆண்டுகள் ஆண்டழித்த காரணத்தால் என் நினைவின்
பிடிநழுவிப் போகின்றன நான் வீணே திரும்பத் திரும்பப்
படித்துப் பழகிய சொற்கள். அவ்வாறே என் வாழ்வும்
புனைந்து கலைக்கிறது தன களைத்த சரித்திரத்தை.
அப்போது நானே சொல்லிக் கொள்கின்றேன்: தக்கவொரு
ரகசிய வழி இருக்கக்கூடும்- ஆன்மாவுக்குத் தன்
இறவாமையை உணர,  அதன் அகண்ட பராக்கிரம வட்டம்
அனைத்தையும் உட்கொள்ளும், அத்துணையும் சாதிக்கும்.
என் கவலைகளுக்கப்பால், இந்த எழுத்துக்கப்பால்
காத்திருக்கிறது காலம், வரையற்று, வரவேற்று.
Jorge Luis Borges தன வசமிருந்த  Beowulf என்ற புத்தகத்தில், “At various times I have asked myself what reasons ” என்று துவங்கும் இந்தக் கவிதையை எழுதி வைத்திருந்தாராம்.  இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை  செய்திருப்பவர்  Alastair Reid.
Borges   Old Englishஐ  1955ல், தனது ஐம்பதுகளின் மத்திம
பருவத்தில், கற்கத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s