மாயமும் யதார்த்தமும்

அழியாச் சுடர்களில் விக்ரமாதித்யன் நம்பி, தமிழில் மாயக்கவிதைகள் எழுதப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதை இன்று படித்தேன்.  “பொங்கும் மனவுணர்வுகள் பொது. உணர்வுகளின் மாயத்தைச் சொற்களில் கொண்டு வருபவனே சிறந்த கவிஞன்,” என்று சொல்கிறார் அவர். மாயக்கவிதைகளை யதார்த்தக் கவிதைகளுக்கு மாற்றாக முன்வைத்திருப்பது எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

கவிதை என்றாலே, அங்கு ஏதேனும் ஒரு வகையில் மாயம் நிகழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். யதார்த்தத்தை யதார்த்தமாக சொல்கிற கவிதைகளில் கவித்துவம் எந்த அளவுக்கு பிரசாரத்தன்மையின் தாக்குதலைப் பிழைத்து உயிர்த்திருக்க முடியும் என்று சந்தேகமாக இருக்கிறது.

—-

தினமும் நமக்கு இந்த மாதிரி எண்ணங்கள் நூற்றி எட்டு முறை தோன்றும். அதை எல்லாம் நாம் குறிப்பெடுத்து பதிவு பண்ணி வைப்பதில்லை- அந்த அளவுக்கு அவை முக்கியமானதாக இல்லாத காரணத்தால்.

ஆனால் நான் ஏன் அதை இப்போது நினைவு கூர்கிறேனேன்றால்,  எதிர்பாராத விதமாக, Roger Ebert அவர்களின் வலைதளத்தில் The Illusionist என்ற திரைப்படம் குறித்துப் படித்தேன். அதன் ருஷ்ய மொழி ட்ரைலர் (முன்னோட்டம்?) பாருங்கள்:

இத்திரைப்படம் இப்போது நடந்து கொண்டிருக்கும் Cannes திரை விழாவில் முதல் முறையாகத் திரை இடப்பட்டிருக்கிறதாம்.

ஒரு சிறிய அளவில் தேர்ந்த மாயக்காரனாக இருக்கிற ஒருவன், ரசிப்பாரில்லாமல் புலம் பெயர்ந்து ஒரு சிறு கடையின் வாசலில் மாய வேலைகளை கேளிக்கைக்காக செய்து காட்டுகிற  நிலைக்குத் தள்ளப்படுகிறான். கதையின் முடிவு என்ன என்று தெரியவில்லை- அனேகமாக அது அந்த மாயக்காரனுக்கு மகிழ்வூட்டுவதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி படங்களில் சோகமான முடிவுகள் இருப்பதில்லை.

இந்த திரைப்படத்துக்கு Palme d’Or கிடைக்கும் வாய்ப்பிருப்பதாக எபர்ட் கூறுகிறார்.

எதற்கு இதையும் இங்கே சொல்கிறேனென்றால் நாமும் அந்த மாயக்காரன் வெற்றி பெறுவதையே விரும்புவோம். யதார்த்தவாதியை நாயகனாக வைத்து எடுக்கிற படத்தில் சோகமான முடிவையே எதிர்பார்ப்போம், இல்லையா?

உதாரணத்துக்கு The Emperor ‘s New Clothes என்ற கதையை எடுத்துக் கொண்டாலும் கூட, அதில் யதார்த்தவாதியான சிறுவன் வெற்றி பெற்று விட்டதாகவும், மாய வேலை  தோற்று விட்டதாகவும் தோன்றும்.  ஆனால் கொஞ்சம் ஆற அமர யோசனை செய்து பார்த்தால், ராஜாவும் மந்திரி முதற்கொண்டு குடிகள் வரை எல்லாரும் மாயக்காட்சியை நிஜமெனக் கொண்டாடி   ஏமாந்தது அவர்களுக்கு  யதார்த்தத்தின் மீது இருக்கிற பிடிப்பினால்தான் என்பதும், அந்த சிறுவன் ராஜா ஆடை இல்லாமல் உலா வருகிறார் என்பதை உரக்கக் கூவியது அவன் எதிர்பார்த்த மாயம் நிகழாத ஆச்சர்ய உணர்வால் என்பதும் விளங்க வரும்.

மாயம் தான் யதார்த்தம் என்ற  வேஷம் போடாமல், தன்னை மாயம் என்றே அறிவித்துக் கொள்கையில் அதற்கு  யதார்த்த உண்மையைப் புலப்படுத்துகிற சாத்தியம் இருக்கிறது. அதே போல், யதார்த்தம் தன்னை யதார்த்தம் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, தன்னில் இருக்கிற முரண்பாடுகளை பின்தள்ளி, தன விவரிப்புதான் உண்மை என்று கோலோச்சும்போது, அது ஒரு மாய வெளியாகி மனித மனங்களை ஏயக்கத் துவங்கி விடுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s