Karen Armstrong எழுதிய “Muhammad- Prophet For Our Time”- நூல் விமரிசனம்

(இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமான பதிவு என்று தோன்றுகிறது. நான் சொல்வதில் தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பார்களாக…)

நம்மில் பலர் இசுலாம் தீவிரவாதக் கோட்பாடுகளுக்க்குத் துணை போகும் சமயம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். நானும் கூட அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாமலேயே செய்தித்தாள்களில் கேள்விப்பட்டதைக் கொண்டு அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் நான் படித்த Karen Armstrong எழுதிய “Muhammad- Prophet For Our Time” என்ற புத்தகம் எனது ஒருதலைப்பட்சமான, பிழையான எண்ணங்களைத் தவிடுபொடி ஆக்கியது.

இந்தப் பதிவு அந்தப் புத்தகத்திலுள்ள விஷயங்களைப் பற்றியது- ஆங்கில மேற்கோள்கள் இதில் பெருமளவுக்கு இருக்கும். ஆனால் அது தவிர்க்க முடியாதது என்று நினைக்கிறேன். காரணம், ஆங்கில மூலத்திலிருந்து மேற்கோள் காட்டும்போது, அதைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் பிழைகள் நேரலாம்.

நான் அறிந்து கொண்ட விபரங்களை எழுதுகிறேன்.

Karen Armstrong நபிகள் இசுலாமிய சமயத்தைத் தோற்றுவித்த காலகட்டம், வன்முறைகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் மிகுந்திருந்த காலம், எனவே, அவரது வாழ்வும் வாக்கும் அதுதொட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளை வரைமுறைப்படுத்துவதாக இருந்தது என்கிறார். அதற்கு நபிகள் தேர்ந்தடுத்த பாதை அன்பும் அமைதியுமே ஆகும். உதாரணத்துக்கு அவரது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்:

“On one occasion, Muhammed overheard some of the Qurayshan chiefs jeering at him contemptuously while he was circumambulating the Kabah. For a while he was able to keep his rising anger in check, but by the time he had completed the third circuit, his face was as black as thunder. He stopped in his tracks, faced the kafirun, and, instead of wishing them “Peace,” as the Qur’an enjoined, said grimly: “Will you listen to me, O Qurayah. By him who holds my life in His hand, I bring you slaughter!” He uttered the last word so threateningly that the chiefs were silenced. But the next day, they had recovered their nerve. They leapt on Muhammed when he arrived in the Haram, encircled him menacingly, and started to rough him up, pulling him about by his robe. This time, Muhammed did not respond aggressively, but allowed the chiefs to manhandle him, until Abu Bakr intervened, weeping, “Would you kill a man for saying Allah is my lord?” (Pages 81-82).

Kafirun என்ற சொல்லைப் பார்த்தோமில்லையா? அது என்ன?

“Kafir derives from the root KFR (“ingratitude”), which implies a discourteous refusal of something that is offered with great kindness and generosity. When God had revealed himself to the people of Mecca, some of them had, as it were, spat contemptuously in his face. The Qur’an does not berate the kafirun for their lack of religious conviction, but for their arrogance. They are haughty and supercilious; they imagine that they are superior to the poorer, humbler people of Mecca, whom they consider second-class citizens and therefore worthy of contempt. Instead of realizing their utter dependence upon God, they still regard themselves as istighna’- self-reliant – and refuse to bow to Allah or anybody else” (Page 79)

இவர்களின் குணக்கேடுகளில் பிரதானமானதாக ஒன்றைக் குறிப்பிடுகிறார், Karen Armstrong- Jahilliyah.

“The chief vice of the kafirun was jahilliyah. Muslims have traditionally used this term to refer to the pre-Islamic period in Arabia and so it is usually translated “the Time of Ignorance.” But although the root JHL has some connotations of “ignorance,” its primary meaning is “irascibility”: an acute sensitivity to honour and prestige, arrogance, excess, and above all, a chronic tendency to violence and retaliation…” (Page 79)

இத்தகைய மனப்போக்கை நபிகள் நிராகரித்தார்: தன்னை அவமானப்படுத்தியவர்களை எதிர்த்துத் தாக்காமல் அமைதி வழியில் அவர் ஏன் எதிர்கொண்டார் என்பது புரிகிறது, இல்லையா? ஒவ்வொரு இசுலாமியருக்கும் இத்தன்மை இருக்க வேண்டுமென வலியுறுத்தினார் என்று தெரிகிறது.

“Instead of succumbing to the jahili spirit, the Qur’an urges Muslims to behave with hilm, a traditional Arab virtue. Men and women of hilm were forbearing, patient and merciful. They could control their anger and remain calm in the most difficult circumstances instead of exploding with rage; they were slow to retaliate; they did not hit back when they suffered injury, but left revenge to Allah….” (Page 80)

அடுத்து வருவது ஒரு பிரச்சினைக்குரிய அறிதல்: நபிகள் கடவுள் என்று குறிப்பிடுவது யாரை? இசுலாம் தீவிரமாக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை மட்டும் வழிபடச்சொல்லி வலியுறுத்துகிறது என்பது சரியான மதிப்பீடு இல்லை என்கிறார் Karen Armstrong.

“When Abraham and Ishmael had rebuilt the Kabah together, they had not developed an exclusive theology, but had simply wanted to give their lives entirely to Allah. “O our Sustainer!” they had prayed, “Make us surrender ourselves unto Thee, and show us our ways of worship”. Muslims had been driven out of Mecca because of religious intolerance, so they must avoid all exclusivity. Instead of stridently insisting that they alone had the monopoly of truth, the true Muslim merely said: “Behold, my prayer, and (all) my acts of worship and my living and my dying are for God (alone), the Sustainer of all the worlds.” It was idolatry to take pride in belonging to a particular religious tradition rather than concentrating upon Allah alone.” (Page 122)

Page 100- “There was no thought of forcing everybody into the Muslim ummah. Each of the revealed traditions had its own din, its own practices, and insights. “Unto every one of you have We appointed a (different) law and way of life,” God told Muhammed:

“And if God had so willed, He could surely have made you all one single community: but (He willed it otherwise) in order to test you by means of what he has vouchsafed unto you. Vie, then, with one another in doing good works! Unto God you must all return; and then He will make you truly understand all that on which you were wont to differ.”

நபிகளும் யாரையும் கட்டாயப்படுத்தி இசுலாமிய மார்க்கத்துக்கு மாற்றியதாகச் சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இசுலாமின் அடிப்படைக் கோட்பாடாகத் தெரிகிற சமயசார்பின்மையை, Karen Armstrong வேறொரு இடத்தில் சுட்டிக் காட்டுகிறார்:

“You could not be a muslim unless you also revered Moses and Jesus. True faith required surrender to God, not to an established faith. Indeed, exclusive loyalty to only one tradition could become shirk, an idolatry which puts a human institution on the same level to God. This is one of the first passages in the Qur’an to emphasize the words, “islam” and “muslim,” which both derive from the verb, aslama: “surrendering oneself entirely to someone else’s will”. The verse continues,
“For if one goes in search of a religion other than self-surrender (islam) unto God, it will never be accepted from him, and in the life to come, he shall be among the lost”

This verse is often quoted to “prove” that the Qur’an claims that Islam is the one, true faith and that ony Muslims will be saved. But “Islam” was not yet the official name for Muhammed’s religion, and when this verse is read correctly in its pluralistic context, it clearly means the opposite” (Page 98-99).

இவரை மட்டும்தான் வழிபட வேண்டும் என்று எந்தக் கடவுளையும் உருவகப்படுத்தவில்லை நபிகள்- அது மட்டுமல்ல இன்ன முறையிலான வழிபாடு மட்டும்தான் நிகழ்த்தப்பட வேண்டும் என்றுகூட அவர் வலியுறுத்தவில்லை என்று தோன்றுகிறது: அவரது காலத்தில் மாற்று சமயநெறியைப் பின்பற்றியவர்களுக்கு அவர்களது மதநம்பிக்கையின் காரணமாக அவர் எந்த ஒரு தீங்கும் இழைக்கவில்லை- சொல்லப்போனால் அவர்களுக்கு பாதுகாப்பு தரப்பட்டது என்பதும் தெரிகிறது.

எனது வாசிப்பில் பிழைகள் இருக்கலாம்- ஆனால் நான் சொல்ல வருவது இதுதான்: இசுலாம் சகிப்புத்தன்மை அற்ற, வன்முறைக்கு ஊக்கம் கொடுக்கிற சமயம் என்ற எண்ணம யாருக்காவது இருக்குமானால் அவர்கள் Karen Armstrongன் புத்தகத்தைப் படிக்கலாம். அந்த எண்ணம எவ்வளவு தவறானது என்பதை அவர்கள் அறிய வருவார்கள்.

இறுதியாக ஒன்று: அப்படி நடந்ததே, இப்படி நடந்ததே- இதை எல்லாம் எப்படி நியாயப்படுத்துகிறீர்கள் என்று கேட்பவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்: எந்த சமயத்தின் பெயரால் வன்முறைகளும் அநியாயங்களும் நடக்கவில்லை, அவை நியாயப்படுத்தப்படவில்லை? தற்போதிருக்கும் காலகட்டத்தில் சமயநல்லிணக்கம் பேணப்பட வேண்டும் என்றால், வெறுப்பை வளர்க்கும் விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்காமல், அவற்றினிடை ஊடாடும் சமதர்ம சிந்தனை, அமைதிக்கான அழைப்பு இவற்றை இனங்கண்டு அதன் மேன்மையை போற்றுவதே சரியான முயற்சியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Karen Armstrong, Charter for Compassion என்ற அமைப்பை நிறுவி இருக்கிறார்- நேய உணர்வுள்ள அன்பர்கள் அதை பாவிப்பது நலம் பயக்கும்.

Advertisements

One thought on “Karen Armstrong எழுதிய “Muhammad- Prophet For Our Time”- நூல் விமரிசனம்

  1. வில்லிருக்க அம்பை நோவதேன் என்பார்கள். இங்கே வில் சரியாகவே இருக்கிறது. சில அம்புகள் செய்யும் தவறு ஒரு சமூகத்திற்கே அவப்பெயர் பெற்றுத் தருகிறது.

    நல்ல பதிவு சார். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s