உதாரணங்களுடன் ஆறு குறிப்பிடத்தக்க இயற்கைத் தோற்றங்கள்

ஆறு குறிப்பிடத்தக்க இயற்கைத் தோற்றங்கள்

I
சீனாவில்
பைன் மர நிழலொன்றில்
அமர்ந்திருக்கிறான் ஒரு கிழவன்.
நிழலின் விளிம்பில்
ஒரு லார்க்ஸ்பர்,
நீலமும் வெண்மையுமாய்,
காற்றோ டாடக் கண்டு.
அவனது தாடி ஆடுகிறது காற்றோடு.
பைன் மரம் ஆடுகிறது காற்றோடு.
அவ்வண்ணமே ஓடுகிறது நீரும்
களைகளின் மேல்.

II

இரவின் நிறம்
பெண்ணின் கரத்தின் வண்ணம்.
இரவு ஒரு பெண்,
அறிவதற்கில்லாதவள்
நறுமணம் கொண்டவள், தளர்கிறாள்,
தன்னை மறைத்துக் கொள்கிறாள்.
குளமொன்று ஒளிர்கிறது
நடனமாடுகையில்  குலுக்கப்பட்ட
வளை போல்.

III

நீண்டுயர்ந்த மரத்தின்நேர்
என்னை நான் அளக்கிறேன்.
அதனினும் மிகை என் உயரம.
கண்ணால்
சூரியனைத் தொடுகிறேன்.
செவியால்
கடலின் கரை சேர்கிறேன்.
இருப்பினும் நான் வெறுக்கிறேன்,
என் நிழலினுட்புகுந்து
எறும்புகள் வெளியேறும் விதத்தை.

IV

நிலவை என் கனவு நெருங்கியபோது,
அதன் ஆடையின் வெண்ணிற மடிப்புகள்
மஞ்சள் வண்ணத்தால் நிறைந்தன.
அதன் உள்ளங்கால்கள
சிவந்தன.
அதன் முடி நிறைக்கப்பட்டது-
தொலைவொன்றும் தூரமாயில்லாத
நட்சத்திரங்களின் சிலப்
பிரத்யேக நீலவண்ணப் படிகங்களால்.

V

உலகிலுள்ள விளக்குக் கம்பங்களின் கத்திகளனைத்தும்,
நீண்ட சாலைகளின் உளிகளனைத்தும்,
உயர்ந்த கோபுரங்கள்
கூண்டுகளின் சம்மட்டிகள்,
எதனாலும் செதுக்க முடியாது-
திராட்சை இலைகளூடே சுடர்விட்டு
ஒற்றை நட்சத்திரம் செதுக்கக்கூடியதை.

VI

சதுரத் தொப்பி அணிந்த பகுத்தறிவாளர்கள்
சதுர அறைகளில் சிந்திக்கிறார்கள்
தரையைப் பார்த்தபடி,
கூரையைப் பார்த்தபடி.
செங்கோண முக்கோணங்களுக்குள்
தங்களை பூட்டிக் கொள்கிறார்கள்.
அவர்கள் ரோம்போட்களை முயன்றால்,
கூம்புகளை, அலையோடும் கோடுகளை, எலிப்ஸ்களை–
உதாரணத்துக்கு, அரை நிலவின் எலிப்ஸை-
பகுத்தறிவாளர்கள் சொம்ப்ரீரோக்கள் அணிவார்கள்.

Six Remarkable Landscapes
– Wallace Stevens

அகராதி:-

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s