அறிவியல் குறிப்புகள்

பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேதியிலிருந்து பருவ மழை குறித்த விபரங்களை ஆவணப்படுத்தி இருக்கின்றனராம் சீனர்கள்! (நான் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறேனா?)

அதிபயங்கரமான தேனீ விஷத்திலிருந்து எலிகளைக் காப்பற்றியதாம் பிளாஸ்டிக்கால் செய்த எதிர்ப்பு அணுக்கள் (ஆண்ட்டிபாடீஸ்)

Quintessence என்றழைக்கப்படும் தூங்கும் படலம் (sleeping field ) விழித்ததால் பேரண்ட வெடிப்பின் பின் விரிந்த உலகம் கூடுதல் விரைவெய்தியதா? இருக்கலாமாம்.

பகற்பொழுதில் தூங்கி வழியும் பதின்மப்பருவத்தினர் பின்னாளின் மனச்சோர்வு நோய்க்கு ஆளாகக் கூடும்.

இலைகள் சூரிய ஒளியிலிருந்து சக்தி திரட்டுவதைக் கண்டு கதிரொளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க பாட்டரி வடிவமைத்த விஞ்ஞானிக்கு $960,௦௦௦௦௦௦௦௦௦000 மதிப்புள்ள மில்லினியம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாட்டரியை கண்ணாடி ஜன்னல்களில், மர சாமான்களில்- எங்கும் பதிக்கலாமாம்.

இப்படியொரு மாக்கள் உண்டா? ஸ்காட்லாண்டு நாட்டினர் மரணத்தோடு விளையாடுகின்றனர், தவறான வாழ்வு முறையினால்- அவர்களில் 97 .5 சதவிகிதத்தினர் புகை பிடிக்கின்றனர் +/ குடிக்கின்றனர் +/ உடலை வருத்துவதில்லை +/ குண்டாக இருக்கின்றனர் +/ சத்தான உணவு சாப்பிடுவதில்லை.

எடை கூடுதலாக இருப்பதற்கும் விட்டமின் டி குறைவாக இருப்பதற்கும் தொடர்புண்டாம்.

ஆக்சிடாக்சின் பற்றி எவ்வளவும் சொல்லலாம்- அது காக்கவும் தாக்கவும் தூண்டுகிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

நீரிழிவு இருக்கிற பெண்களுக்கு கான்சர் வரும் வாய்ப்பு இரட்டிப்பாகிறது.

பால் டிராக் விசேடமான நடத்தைக்குப் பேர் போனவர். அவர் யூஜீன் விக்னரின் தமக்கையைத்தான் மணந்திருந்தார்.

ஒரு முறை, தம்பதியர் இருவரும் ஒரு விருந்துக்குப் போயிருந்தனர். அப்போது டிராக் அங்கிருந்த ஒருவரிடம் தன மனைவியை அறிமுகப்படுத்தும் முகமாகக் கூறினாராம், “இது… விக்னரின் தமக்கை!’ என்று.

Advertisements

5 thoughts on “அறிவியல் குறிப்புகள்

  1. சர்வேன்னு ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க- அங்க என்னடான்னா ஆய்வு பண்ணினவங்க ஏறத்தாழ ஒரு லட்சம் பேரை எட்டு வருஷத்துக்கும் மேலா கண்காணிச்சு இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்காங்க.
    பாதிக்கப்படற உறுப்புகள் கர்ப்பப்பை, ஓவரீக்கள், மலக்குடல். இங்கு நோய் வருவதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்- டைப் டூ டையபடிஸ்தான் இந்த விளைவுகளை ஏற்படுத்துது- சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மற்றும் தேவைப்பட்ட மருந்துகளை சாப்பிடுவதால் இதை எளிதில் கட்டுக்குக் கொண்டு வந்து விடலாம்.
    பொதுவா பெண்கள் மார்பக/ கர்ப்பப்பை குறித்து விழிப்புணர்வோட இருக்கணும்- எளிதில் இங்கு வரக்கூடிய கான்சரைக் கண்டு பிடிச்சிடலாம்- செலவும் பெரிசா ஆகாது. நீரிழிவு நோய் இருக்கிற பெண்கள் இது குறித்து தெரிந்து கொள்வதில் தப்பில்லையே?

  2. இன்னொரு விஷயம்- colorectal cancer நூத்துக்கு ஏழு பேருக்குதான் வருது; ovarian cancer நூத்துக்கு ஒருத்தருக்குத்தான் வருது. அதனால் பீதியடையத் தேவை இல்லைன்னு தோணுது.
    இது பற்றியெல்லாம் மருத்துவர்கள்தான் பேசுவதற்குத் தகுதியான ஆட்கள்- நாம எல்லாம் கேள்விப்பட்ட விஷயத்தைப் பரிமாறிக்கறோம், அவ்வளவுதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s