அறிவியல் துணுக்குகள்

பெரிய பெரிய கணினி நிறுவனங்களில் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் என்று வைக்கிறார்கள் இல்லையா? இனி உங்கள் குரலிலிருந்தே நீங்கள் பிரச்சினைகளை கலவரமடையாமல் கையாள்பவரா என்று கண்டுபிடித்து விடுவார்கள். இயந்திரன் தயார்.

சுறா மீன்கள் (ஷார்க்?) மோப்பம் பிடித்து வேட்டையாடுவதில் கில்லாடிகள்.

எப்படிப்பட்ட அவசரமாக இருந்தாலும் சரி, முயல்கள் கைபேசியைப் பயன்படுத்தக் கூடாது- அது அவர்களது இனவிருத்திக்கு கெடுதல் செய்கிறது.

ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் ஜாக் குஸ்டோ (Jacques Cousteau ) கடற்பயணம் செய்வதைக் காட்டிக் கொண்டே இருப்பார்கள், நினைவிருக்கிறதா? இது அவரது நூற்றாண்டு.

ஆயுள் காப்பீட்டைப் போல் நல்ல மருந்தில்லை– எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் தங்கள் உயிரை இன்சூர் செய்யாதவர்கள்தான் அதிக அளவில் இறக்கிறார்களாம்.


எனக்கு முன்னும் பின்னும் வருகின்ற நித்தியத்துவத்தில் எனது இந்த குறுகிய வாழும் பொழுது கரைந்து போகும் என்பதைக் கருதுகையில், நான் காணும், எனக்கென இருக்கும் இந்த சிறு இடம் நான் அறியாத, என்னை அறியாத அளவில்லாத பேரண்டவெளிகளால் விழுங்கப்படும் என் எண்ணுகையில், எனக்கு அச்சமேற்படுகிறது, நான் அங்கு இல்லாமல் இங்கு இருப்பதைக் காண்கையில் திகைக்கிறேன்: நான் அங்கில்லாமல் இங்கிருப்பதற்கானக் காரணம் என்ன, அன்றில்லாமல் இன்றிருப்பதற்கானத் தேவை என்ன? எவர் என்னை இங்கு இட்டது? எவருடைய ஆணையாலும் செயலாலும் இந்த இடமும் காலமும் எனக்கு அளிக்கப்பட்டன?
– பாஸ்கல்.

Advertisements

2 thoughts on “அறிவியல் துணுக்குகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s