வடசென்னை வரவேற்பு II

இதன் முதல் பகுதி இங்கே – வட சென்னை வரவேற்பு 1

நான் நேற்று இப்பதிவின் முதல் பகுதியை எழுதிவிட்டுப் பார்க்கிறேன், நம்மைச் சீண்டும் விதமாக இப்படி ஒரு செய்தி வெளியிட்டுள்ளது இன்றைய நாளிதழ் ஒன்று. இப்படிச் செய்வது பொதுவான மனித இயல்பு, சுபாவம். இதற்கு வடசென்னை சாயம் பூசினால் என்ன செய்ய?

சரி அதை விடுங்கள்…நேற்று விட்ட இடத்தில் தொடர்வோம் வாருங்கள்…..
____________________

எம்.ஜி.ஆர். காலம் தொட்டு விஜய் காலம் வரை ஏழைப் பங்காளியாக கதாநாயகன் தோன்றுகையில் பணக்கார வில்லன் எதிரே கூறும் வசனம் ஒன்று உண்டு. ஞாபகம் வருகிறதா இந்த வசனம்?

(எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய் மூவர் குரலிலும் மாற்றி மாற்றி படித்துக் கொள்ளுங்கள்)

” (ஆள் காட்டிவிரலால் மூளை சுட்டிக் காட்டப்படுகிறது) நான் இதக் கேட்டு எதையும் செய்ய மாட்டேன். .
(உள்ளங்கையால் மூன்றுமுறை நெஞ்சில் அறைந்தவாறே) இத…இத…இதக் கேட்டுத்தான் எதையும் செய்வேன்”

இந்த வசனம் வடசென்னை மக்களுக்கு முற்றிலும் பொருந்தும். பெரிதாக லாஜிக் பார்த்தெல்லாம் இங்கே வேலை நடக்காது. “ஹார்ட் ஸ்பீக் மாமு, அயம் டூ” என்பார் நண்பனின் அப்பா.

கொஞ்சம் சினிமாத்தனமாய் இருக்கும், இருந்தாலும், உறவுகளை விட நட்புக்கு இங்கு மரியாதை கொஞ்சம் நிறையவே ஜாஸ்தி. பிரதிபலன் பாராமல் நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் எந்த வித உதவிக்கும் வரிந்து கொண்டு வந்து நிற்பார்கள் இங்கே. இப்போது கொஞ்சம் அங்கே இங்கே மாறிப் போனாலும், கிராமங்களைப்போலவே கல்யாண வீடுகளில் உணவு பரிமாற தனியே ஆள் வைக்கும் வழக்கம் வடசென்னையில் கிடையாது. நண்பன் வீட்டுக் கல்யாணத்தில் விருந்தினருக்கு உணவு பரிமாறுதல் ஒரு பெருமைமிகு செயல் இங்கே.

தென் தமிழக நகர் ஒன்றின் உபசரிப்பு பற்றி இப்படிச் சொல்வார்கள். ஒருவர் மற்றவர் வீட்டிற்குச் செல்கிறார். இப்படிப்போகிறது அங்கு நிகழும் விருந்து உபசரிப்பும் அதற்கான எதிர் பதில்களும்.

“வாங்க சாப்பிடறீங்களா? இருந்தாலும் நீங்க எல்லாம் எங்க வீட்டுல சாப்பிடுவீங்களா?”
“நான் சாப்பிடாம போனாலும் நீங்க விட்டுடுவீங்களா”
“அட, வற்புறுத்தினா மட்டும் சாப்பிட்டுடவா போறீங்க?”

வடசென்னை மக்கள் அப்படி அல்ல. “வா நைனா, துன்னு”, என்னும் கனிவான வார்த்தைகள் இதயத்தில் இருந்து வருபவை. “வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்” என்று நா.முத்துக்குமார் சிவாஜி படத்தில் எழுதியது தமிழக கிராமங்களின் பண்பாடு மட்டுமில்லீங்க, வடசென்னை மக்களின் பாரம்பரியமும் கூட.

பணம், அதன் மதிப்பு, சேமித்து வைப்பது பற்றியெல்லாம் யோசிக்கத் தெரியாத அன்னாடங் காய்ச்சிகள்தான் பெரும்பாலான மக்கள் இங்கே. ஆனாலும்…. “ஸ்டாப் இட் ஸ்டாப் இட்…..என்ன ரொம்ப பீலிங்க்ஸ் ஆப் இந்தியாவா இருக்கு” அப்படின்னு கேக்கறீங்களா? உண்மைதான். இது என் இதயத்தின் பீலிங்க்ஸ்.

எங்கள் குடும்பம் கஷ்டப்பட்ட காலத்தில் நான் டிகிரி வரை படித்துக் கரை சேரவும், சில நேரங்களில் மூன்று வேளைகள் நாங்கள் உண்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும் என, தானே முன் வந்து உதவியவர்கள் ஏராளம். இப்படிப்பட்ட உதவிகளை ஒருங்கே ஒருவனுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தர வடசென்னை மக்களால் மட்டுமே முடியும்.

எனக்கு +2’வில் படிக்க பணம் கட்டிப் படிக்க உதவிய வரதன் மேஸ்திரியும், கஷ்ட ஜீவனத்தில் எங்கள் குடும்பம் இருக்கையில் ரேஷன் கார்டுடன் பணமும் தந்து அரிசி வாங்கிக் கொள்ளச் சொன்ன எங்கள் தெருப் பாட்டி ஒருவரும், தான் படிக்கவில்லை என்றாலும் என்னை டிகிரி படிக்க வைத்து மகிழ்ந்த என் உடன்பிறவா அண்ணன் வெங்கட்டும், நள்ளிரவிலும் பலநாட்கள் கண் விழித்து எனக்கு Statistics கற்றுத் தந்து என்னைக் கரையேற்றிய சேகர் சாரும்… இன்னமும் என் முன்னேற்றத்தில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பங்காற்றிய பலரும் வட சென்னைவாசிகளே. இத்தனை உதவிகளும் ஒருங்கே ஒருவனுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கிடைக்கும் என்றால் அந்த இடம் உலகத்திலேயே வடசென்னையாக மட்டுமே இருக்க இயலும்.

அதுசரி, வடசென்னை வரவேற்புன்னு தலைப்பு எதுக்குபா என்று கேட்பவர்களுக்கு….

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s