அறிவியல் ஆர்வலர்களுக்கு…

எண்கள், தூரம், காலம் போன்ற அளவைகளைப் பற்றிய அறிவு பேசுவதற்கு முன்பே குழந்தைகளுக்கு வந்து விடுகிறதாம். ஆச்சர்யமாக இல்லை?

வாகனம் ஓட்டும்போது கைபேசியில் பேசுவது உயிருக்கு மட்டுமல்ல, உறவுக்கும் உலை வைக்கிறதாம்.

மூன்றே மூன்று மரபணுக்கள்– இவற்றில் ஏற்படும் மாற்றம் தற்கொலை எண்ணங்களைத் தூண்டுகிறது- என்கிறார்கள்.

கீரிகளுக்கும் மரபு, கலாசாரம், பண்பாடு என்று ஒன்று உண்டென்றால் நம்புவீர்களா? உகாண்டாவில் இருக்கிற கீரிகள் இவற்றை பாதுகாப்பது மட்டுமல்ல, குழந்தைகளுக்குக் கற்றும் கொடுக்கின்றனவாம்.

சென்னையில் எத்தனை நாட்கள் இருக்கும் என்று தெரியாது- ஆனால் நிலவில் நாம் நினைத்ததைவிட நூறு மடங்கு அதிகமாக நீர் இருக்கிறதாம்.

கடல் நத்தையின் விஷத்திலிருந்து இப்போது இருக்கிறதைவிட நூறு மடங்கு கூடுதல் பலமுள்ள வலி நிவாரணியைத் தயாரித்திருக்கிறார்கள்.

விட்டமின் டி எலும்புகளுக்கு மட்டுமல்ல- புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

தென்கொரியா யந்திரன்கள் களத்தில் குதித்தார்கள்- டேக்வோண்டோ சண்டை போடுகிறார்களாம்.

இது தேவைதான்- ஜப்பானில் கைக்குழந்தைகளின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள கைக்குழந்தைகளைப் போலவே நடந்து கொள்ளும் யந்திரன்களை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஆக்சிடாசின் செய்தி– இந்த ஹார்மோன் நம்மை தியாகம் செய்யவும் எதிரிகளை மிரட்டவும் தூண்டுகிறதாம்.

 • எனக்கெல்லாம் பிறந்த நாள் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது- இன்று என் மகனின் பதினொன்றாவது பிறந்தநாள். ஒரு வாரத்துக்குமேல் போராடி, வேண்டிய நண்பர்களைத் திரட்டி, பிடிவாதமான பிடிவாதம் பிடித்து இன்று கேக் வெட்டி தன் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி விட்டான். இரவு பத்து மணி வரை ஆரவாரம்…
  Advertisements
 • 3 thoughts on “அறிவியல் ஆர்வலர்களுக்கு…

  1. நீங்க கிரியோட சிறப்பை மட்டும்தான் உலகத்துக்கு பறை சாற்றரீங்கன்னு நெனச்சேன். இப்போ கீரியுன் சேந்துடுச்சா லிஸ்டுல?

  2. உங்க மகருக்கு என் தாமத வாழ்த்தை சொல்லிடுங்க சார். அவனாவது நல்ல அறிவா வளர வாழ்த்துக்கள். (நீங்க நம்ம சாதிங்கரதால நம்ம லிஸ்டுல சேர்த்தேன், தப்பா?)

  3. நான் வண்டியில போகும்போது போன் பேச மாட்டேன் ஆனாலும் ஆபீஸ்ல விசைப்பலகைய தட்டிட்டே பேசுவேன். இங்க சொல்ற அதே ரீஆக்ஷன் எனக்கு ஏற்படறதா நான் பார்க்கறேன்.

   நல்ல லிங்க் குடுத்து எங்க லிங்க்க காப்பாத்தினீங்க சார்.

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

  Connecting to %s