அறிவுப்பசி தீர்க்க…

மாசுப்பொருட்களின் தடயங்கள் எலும்புகளில் நிலைத்து நிற்கின்றனவாம்.

ரூமாட்டாய்ட் ஆர்த்ரிடிஸ் இருக்கிற பெண்களில் நான்குக்கு மூன்று பேர் மருந்து சாப்பிடுகிறார்கள்- என்றாலும், அவர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் அன்றாடம் வலியால் அவதிப்படுகிறார்கள.

குடிகாரர்களுக்கு ஒரு இனிய செய்தி– சாராயம் குடிப்பது பலவகையான மூட்டு வியாதிகளைத் தடுத்து நிறுத்துகிறது.

தென்கொரியாவில் மாட்டை க்ளோன் செய்திருக்கிறார்கள்.

குரல் சொல்லும் கதைகள்- ஆணின் பலத்தை அவரது குரலைக் கொண்டே சரியாக கணித்து விடலாம்.

ரத்தக் கொதிப்புக்கு சாப்பிடுகிற சில மருந்துகளில் புற்று நோய் வருகிற ஆபத்து இருக்கிறது- என்கிறார்கள்.

எங்கள் மூளை வேலை செய்கிற விதமே வேறு- தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்களின் மூளை மற்றவர்களின் மூளையிலிருந்து மாறுபடுகிறதாம்.

ஒரு வைரசின் உள்ளிருக்கிற விஷயங்களை நீக்கி அதை மருந்தாக்கி இருக்கின்றனராம் டட்ச் விஞ்ஞானிகள்.

இதயம் பலவீனமாக இருப்பவர்கள் நிகழும் உலகக் கோப்பை கால்பந்து பந்தயத்தைப் புறக்கணிப்பது நலம்- கால்பந்தாட்டம் நடக்கிற நாட்களில் வழக்கத்தைவிட அதிகமானவர்கள் நெஞ்சு வலியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருகிறார்களாம்.

எதோ தெரியாத ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டமாதிரி சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்- காக்கைகள் அனுபவத்தைப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்கின்றனவாம். ஒரு ஆய்வில், எட்ட முடியாத பொருட்களை ஒரு கருவியைக் கொண்டுக் கவரலாம் என்று அவைகள் முடிவு பண்ணினதைத் தெரிந்துகொண்டு விட்டனர் விஞ்ஞானிகள்.

பழைய செய்திதான்: மெக்ஸிகோ வளைகுடாவில் படுபயங்கரமான எண்ணைக் கசிவு ஏற்பட்டுள்ளது தெரியும்தானே? அதில் பாதிக்கப்பட்ட பறவைகள் புகைப்படங்கள்: மனசாட்சி உள்ளவர்கள் மனித இனத்தைக் குறித்து வெட்கப்படவே செய்வார்கள்.

நோபல் பரிசு கண்டுகொள்ளாமல் விடும் துறைகளுக்கு காவ்லி பரிசுகள் அதே ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன- இந்த ஆண்டு பரிசு பெற்ற மூவர் குறித்து இங்கே காணலாம்.

வயதானவர்கள் இளைஞர்களை விட மகிழ்ச்சியாய் இருக்கிறார்களாம். இளம் வயதில் நமக்கு பரபரப்பாக இருப்பதுதான் மகிழ்ச்சியைத் தருகிறது என்றால், வயதான காலத்தில் மகிழ்ச்சி என்பது மன அமைதியால் கிடைக்கிறதாம்.

>மனம் விட்டு சிரியுங்கள்– சந்தோஷமாக சிரிப்பவர்கள் மற்றவர்களைவிட நீண்ட நாட்கள் வாழ்கிறார்களாம்- இதைப் பழைய புகைப்படங்களை வைத்த கண்டுபிடித்திருக்கின்றனர் உளவியல் விஞ்ஞானிகள்.

டெஸ்டோஸ்டீரோன் தெரியுமில்லையா? அது மனிதர்களிடையே அவநம்பிக்கையை வளர்க்கிறதாம்- சுலபமாக மற்றவர்களை நம்பி விடுகிறவர்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அது நம்மிடையே எச்சரிக்கை உணர்வைத் தூண்டி ஜீவாதாரப் போட்டியில் வெற்றிபெற அந்த வகையில் உதவுகிறதாம்

ரிஸ்க் எடுக்கறது எங்களக்கு ரஸ்க் சாப்பிடுகிறமாதிரி என்று சின்னப் பிள்ளையால் சொல்லக் கேட்டிருப்பீர்கள்- அதெல்லாம் ஒன்றும் இல்லை. கவலை, ஏமாற்றம், வருத்தம் போன்ற உணர்வுகள் எழுகிற மூளையின் ஆன்டீரியர் இன்சுலாவில்தான் ரிஸ்க்கும் எடுக்கப்படுகிறதாம். இதுவே ரிஸ்க் எடுப்பது சிந்தனை தொடர்பானதல்ல, உணர்வுகள் தொடர்பானது என்பதைக் காட்டுகிறது என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.

பூனைகளிடமிருந்து நமக்கு வருகிற ஒரு கிருமியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்- அதை இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்ளலாம். மூளையைத் தாக்கி அறிவைக் கெடுக்கிற இந்த கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைவிட மூன்று மடங்கு அதிகமாக விபத்துக்களில் சிக்கிக் கொள்கிறார்களாம்!

Advertisements

2 thoughts on “அறிவுப்பசி தீர்க்க…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s