ஜோசே சாரமாகோ


சிலர் வாழ்நாள் முழுதும் படிக்கிறார்கள், ஆனால் ஒரு பக்கத்தில் காணப்படும் சொற்களைப் படிப்பதைத் தாண்டி எப்போதும் செல்வது கிடையாது. வேகமாக விரையும் ஆற்றில் இட்டு வைத்திருக்கிற நடைகற்கள்தான் சொற்கள் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை- மறு கரையை அடைவதற்காகவே அவை அங்கே இருக்கின்றன என்பதை அறிவது இல்லை. அப்பாலுள்ள கரையில்தான் இருக்கிறது விஷயம்.
– ஜோசே சாரமாகோ

தீவிர கம்யூனிஸ்டு, கடவுள் மறுப்பாளர், 1998 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்- ஜூசே சாரமாகோ (Jose Saramago ) நேற்று காலமானார்.

இவர் பெரும் சர்ச்சைக்குள்ளான இயேசுவின் மறையை எழுதியவர் – இந்த பதிவை செய்தபின் சாரமாகோ எழுதிய எந்த ஒரு புத்தகம் பற்றியாவாது யாராவது தமிழில் வலைக்குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்களா என்று தேடினேன்: அவரது ஒரு புதினம் திரைப்படமாக வெளிவந்தது குறித்து சில அறிவுஜீவிகளின் திரை விமரிசனம், பின்நவீனத்துவத்தில் அவரது பங்கீடு (இந்த பதிவு பரவாயில்லை- சும்மா சொல்லக்கூடாது)- அப்புறம் கிருத்தவம் குறித்து சாரமாகோ தன கதை வாயிலாக  எழுதிய கண்டனங்கள் குறித்த செய்திகளை மீள்பதிவு செய்து திருப்திப்பட்டுக்கொண்ட  இந்து / இசுலாமிய இணைய தளங்கள் (சாரமாகோ சொன்னது வேத வாக்காகி விட்டது).

இவைதான்.  நம்மாளுங்க ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு சாகத்தான் லாயக்கு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருவர் கூட இந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் ஒரே ஒரு புதினம் குறித்துகூட முழுமையாக, உருப்படியாய் எதுவும் எழுதவில்லை!!!

அவரது நோபல் பரிசு உரையை இங்கே காணலாம்.

அவரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன் என்று சொல்லுமளவுக்கு எனக்கு அவரிடம் ஈடுபாடு கிடையாது- அன்னாரது சுற்றத்தினருக்கும் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது அனுதாபங்கள்.

பி.கு.: சொல்வனத்தில் சேதுபதி அருணாசலம் சரமாகோ குறித்து எழுதியிருக்கிறார்- சரமாகோ குறித்த நம் பார்வையை தீர்மானிக்ககூடிய சிறப்பான அறிமுகம்.

Advertisements

One thought on “ஜோசே சாரமாகோ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s