அறிவியல் துணுக்குகள்

காபியானாலும் சரி டீயானாலும் சரி மிதமான அளவில் உட்கொண்டால் இதயத்துக்கு நல்லது. ஆனால் அளவுக்கு மீறி டீ குடிக்கிற பெண்களுக்கு ரூமாட்டைட் ஆர்த்ரிட்டிஸ் வருமாம்.

கணினி இருக்கிற வீட்டுக் குழந்தைகள் கணிதத்திலும் வாசிப்புப் பாடத்திலும் குறைந்த மதிப்பெண் எடுக்கிறார்கள்– பொதுவாக. .

இனிய காதல் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க கடலை போடுவதே பெண்களை அசத்த விரும்பும் இளைஞர்களின் வெற்றிக்கு வழி.

குரங்குகளும் தொலைக்காட்சியை ரசித்துப் பார்க்கின்றன.

எத்தனை நண்பர்கள் இருந்தால் என்ன, தனிமைத் துயரால் தவிக்கிறீர்களா? அப்படி என்றால் உங்கள் உடல்நிலையும் மோசமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்- சொல்கிறார்கள்.

தண்ணீரிலிருந்து நைட்ரஜன் கழிவுகளை நீக்கும் வினை ஊக்கிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் டட்ச் விஞ்ஞானிகள்- ஜிதேந்திர குமார் சிந்தகிஞ்சால நெதர்லாந்துக் காரரா என்ன?

ஹிட்டாச்சி கம்பெனி ஸ்கேட்டிங் செல்கிற யந்திரனை வடிவமைத்திருக்கிறது.

எலிகள் பிறக்கும்போதே மூலையில் திசைகாட்டிகளோடு பிறக்கின்றன.

தாமஸ் ஆல்வா எடிசன் வெறித்தனமாக ஆராய்ச்சி செய்பவராம். ஒரு முறை பார்ட்டி ஒன்றுக்கு வலுக்காட்டாயமாக இழுத்து செல்லப்பட்டார். சிறிது நேரத்திலேயே வெட்டிப் பேச்சு விவகாரங்கள் அவருக்கு அலுத்து விட்டது.


யாரும் கவனிக்காதபோது நைசாக நழுவினார் எடிசன். அந்தோ பரிதாபம்! வாசல் கதவைக் கண்டவராக அதை நோக்கி விரைகையில் தோளில் ஒரு கை.


“இப்போ என்ன ஆராச்சி பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் மிஸ்டர் எடிசன்?” என்று கேட்டார், கைக்கு சொந்தக்காரர், பார்ட்டி தருபவர். பதில் சொல்லாமல் இருக்க முடியாது.


“வெளியே போகிற வழியை!” என்று பதில் தந்து விட்டு நடையைக் கட்டினார் எடிசன்.

3 thoughts on “அறிவியல் துணுக்குகள்

 1. எனக்கு ஒரு பாஸ் இருந்தாரு முன்னால. அவர் இப்படித்தான் எடிசன் போல.
  வேலைன்னா வேலை வெறித்தனமா பார்ப்பாரு

  அவரைப்பத்தி கதையே எழுதலாம். அவர் ஒரு dermatologist. நமக்கு சுவாரசியமா தெரியற விஷயம் எல்லாமே அவருக்கு அலுப்பு தரக்கூடியவை. யு கேன் வின் புஸ்தகத்த எல்லாரும் சிலாகிச்ச வேளைல அது ஒரு குப்பைப்பா அப்டின்னு ஓபன் forumla சொல்லுவாரு. அமர்த்யா சென்? அந்த ஆளு ஒரு லூசு அப்டிம்பாரு.

  அவரைப் பொறுத்தவரை காலைல நாலு மணிக்கு எழுவார். நடைப்பயிற்சி, குளியல், டிபன், கார் ஏறி ஏழரை மணிக்கு ஆபீஸ், வேலைன்னா வேலை வெறித்தனமா பார்ப்பாரு. எல்லாத்துலயும் பர்பெக்ஷன் வேணும். நாலு மணியானா கடவுளே வந்து வேலை குடுத்தாலும் வீட்டுக்குப் போகணும்னுட்டு போயிடுவார். BBC , CNN பார்ப்பாரு, பாரின் மூவி சேனல்ஸ் அவருக்கு எப்படி வரும்னு தெரியாது அதை எல்லாம் பார்ப்பாரு. எட்டு மணின்னா எட்டு மணி….எந்த ராஜா எந்த அதுல எப்படி போனாலும் சரி படுக்கைக்கு போயிடுவாரு. மறுநாள் காலை நாலு மணி….

  ஹோட்டல் போனா அவர்தான் பணம் குடுப்பாரு. ஆனா அவர் ஆர்டர் பண்றதுதான் நாம சாப்பிடணும். நம்ம சாய்ஸ் ஒண்ணும் கிடையாது. உதாரணத்துக்கு, காலைல டிபன் வாங்கி கொடுத்தா ரெண்டு இட்லி ஒரு வடை அத்தனைதான். சாப்டுட்டு, பில் பே பண்ணிட்டு போயிட்டே இருப்பாரு. மேற்கொண்டு எதுவும் கலோரி அது இது நமக்குத் தேவை கிடையதும்பாறு. நமக்கும் இன்சிஸ்ட் பண்ணுவாரு.

  நல்ல மனுஷன் போங்க.

  1. உண்மையிலயே குறிப்பிடத்தக்க நபர்தான். இவரைப்பத்தி இன்னும் விபரமா உங்க தளத்துல எழுதுங்களேன், படிக்க வெறித்தனமா காத்துக்கிட்டிருக்கேன்.

   இந்த மாதிரி ஆட்களைப் பாக்கறது அபூர்வம். அவங்க சம்பந்தப்பட்ட விஷயங்களும் வித்தியாசமா இருக்கும். கூட இருக்கறவங்களுக்கு கழுத்தறுப்பு, ஆனா சுத்தி நின்னு பாக்கறவங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு, இல்லியா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s