இன்னொரு நாளைக்கு வாழ்கிறார்கள்…

நேற்று என் மகனுக்கு வீட்டுப் பாடத்தை சொல்லிக் கொடுக்க வேண்டி இருந்தது. அதனால் இந்த போட்டியில் ஒரு கண்ணும் அவனது புத்தகத்தில் மறு கண்ணுமாய் பார்த்ததில் என்ன பார்த்தேன் என்பதே மறந்து விட்டது- இன்று மாலை “நேத்திக்கு நீ என்னப்பா சொல்லிக் கொடுத்தே? ஒண்ணும் புரியல..” என்று சொல்லிக் கொண்டு என் மகன் வரப் போகிறான்.

ஸ்லோவீனியாவை மிக எளிதாக வென்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அமெரிக்கர்களுக்கு நேற்று நடந்த ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. ஸ்லோவேனியா நன்றாக ஆடியது, அமெரிக்க பாதுகாப்பு வளையம் இயங்குவதற்கு கொஞ்சம் தாமதமானது, நடுவர் கொடுத்த ஒரு தீர்ப்பு- எல்லாம் அவர்கள் நெஞ்சில் வலியாக மாறியிருக்கிறது.

அமெரிக்கர்கள் மறுக்கப்பட்ட கோலைக் குறித்து புலம்புகிறார்கள் பாருங்கள்-

நான் பார்த்தவரை முதல் பாதியில் திறந்து வைத்த பலகாரப் பாத்திரத்தை ஈ மொய்க்கிற மாதிரி அமெரிக்க கோலை முற்றுகை இட்டார்கள் ஸ்லோவேனியா அணியினர். அதிலும் அந்த முதல் கோல்: அமெரிக்க கோலி “ஐயோ கண்ணைக் கட்டுதே!” என்று செய்வகை தெரியாமல் சிலை போல நின்று விட்டார். நான் இந்த உலகக் கோப்பையில் பார்த்த கோல்களில் சிறந்த கோல் இதுதான். இரண்டாவது கோலும் மட்டமில்லை.

ஆனால் இரண்டாவது பாதியில் அடைத்து வைத்தக் கூண்டின் கதவுகளைத் திறந்து விட்டபின் சீறி வருகிற சிங்கம் மாதிரி செம வேகமாக ஆடினார்கள் அமெரிக்கர்கள். ஸ்லோவேனியா அணியினருக்கு காலை உதைப்பது, சட்டையைப் பிடித்து இழுப்பது, கழுத்தை நெரிப்பது போன்ற தப்பாட்டம் ஆடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

அமெரிக்கா அடித்த முதல் கோல் கலக்கல்- க்ராஸ் செய்வதற்கு யாரும் கிடைக்காத நிலையில் ப்ராட்லீ கோல் கீப்பரை நெருங்கி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடத்தினார் – கையைத் தலைக்குமேல் தூக்கக்கூட அவகாசம் இல்லாமல் காதுக்குள் இடி இடித்த மாதிரி தலையைப் பின் பக்கம் சாய்த்து தன உயிரைக் காப்பாற்றிக் கொண்டார் சுலோவீனியா கோலி- இத்தனைக்கும் அவரது தலைக்கு மேல் ஒரு அடி உயரே போகிற மாதிரிதான் பந்தை உதைத்திருந்தார் ப்ராட்லீ. கோல் விழுந்தால் என்ன, இன்னொரு நாளைக்கு வாழலாம் இல்லையா!

அதே பக்கத்திலிருந்துதான் இரண்டாவது கோலையும் அடித்தார்கள். ஒரு கிராஸ் வழியாகக் கிடைத்த பந்தை சமயோசிதமாக சந்தித்து அலட்டிக்கொள்ளாமல் கோலுக்குள் தட்டிவிட்டார் டோனோவன்.

நேர்த்தியாகப் போடப்பட்ட மூன்றாவது கோல் அமெரிக்கர்களைத் துள்ளி குதிக்க செய்திருக்கும்- ஆனால் அவர்களுக்கு அதற்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை.

தோற்றிருக்க வேண்டிய ஆட்டம்- இரண்டாவது ஆட்டத்தில் நன்றாக ஆடி இன்னொரு நாளைக்கும் வாழ்கிற வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

நான் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்ட இங்கிலாந்து அணியினர் இன்னும் மண்ணைக் குழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது சட்டி பானை செய்யப்போகிறார்கள் தெரியவில்லை- அல்ஜீரியாவிடம் சமன் செய்த அவர்களும் இன்னொரு நாளைக்கு வாழ்கிறார்கள்.

அல்ஜீரியாவும்தான்.

மொத்தத்தில் இந்த க்ரூப் விவகாரம் பிடித்த க்ரூப்பாக இருக்கிறது. யார் ஜெயிப்பார்கள் யார் தோற்பார்கள் என்பதைத்தான் வழக்கமாக சொல்ல முடியாது- இங்கு என்னடாவென்றால் யார் நன்றாக ஆடுவார்கள் யார் நன்றாக ஆட மாட்டார்கள் என்பதைக் கூட சொல்ல முடியவில்லை.

என்ன நடக்கிறது பார்ப்போம்- அந்த இன்னொரு நாளும் வரத்தானே போகிறது.

நீங்களும் வாங்க.

Advertisements

2 thoughts on “இன்னொரு நாளைக்கு வாழ்கிறார்கள்…

  1. அந்த மறுக்கப் பட்ட கோல் ஒரு போங்கு சார். பாவம் அமெரிக்கர்கள். அந்த இடத்துல அவங்க தப்பு ஏதும் இருந்ததா என் கண்ணுக்குப் படலை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s