போனோபாவின் கையைக் குலுக்கல்…

முன்னமே சொன்ன மாதிரி என் மகனுக்கு வகுப்புகள் துவங்கி விட்டன. இனி முன் மாதிரி உலவ இயலுமா என்பது ஐயம்தான். தினம் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரகால அவகாசம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். எப்போது சாத்தியப்படுகிறதோ அப்போது பதிவு செய்கிறேன்.

க்லேரின் என்ற பசி ஹார்மோன் உணவுக்கான வேட்கையை அதிகரித்து அளவுக்கு மேல் தின்னச் செய்கிறது என்பது மட்டுமல்ல- அது மிகையாக கலோரிகள் இருக்கிற தின்பண்டங்களை நோக்கி நம்மை செலுத்துகிறது – குதிரை குழியைப் பறித்ததொடல்லாமல் கீழேயும் தள்ளியது என்கிற மாதிரி இருக்கிறது க்லேரின் செய்கிற வேலை.

போனோபோக்கள் வித்தியாசமான குரங்குகள்: அவற்றுக்கென ஒரு மொழி, ஒரு  கலாசாரம் இருக்கிறது.  பழக்கமில்லாத நபர்களுடன் போனோபோக்கள் எதுவும் வைத்துக் கொள்வதில்லை: அதிலும் அவை மனிதப் பெண்களிடம்தான் நெருங்கிப் பழகுகின்றன. பழகலாம் வாங்க என்று போனோபோக்களை அழைக்க அவற்றிடம் கை குலுக்க வேண்டுமாம்- கை என்றால் கை அல்ல வேறு ஒரு முக்கியமான உறுப்பை!

எடை மிகுந்திருப்பவர்கள் அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு போன்ற நோய்கள் வரவேண்டுமென்பதில்லை.

காலம் கெட்டுப் போச்சு காலம் கெட்டுப் போச்சு என்று புலம்புகிற பெரிசுகளிடம் தைரியமாகச் சொல்லுங்கள்: உங்களால்தான் கெட்டுப் போச்சு என்று. ஆதாரம் கிடைத்துவிட்டது. நம்மை விட நம் முன்னோர்களிடைதான் கள்ளக்காதல் மிகுந்திருந்ததாம்!

பாக்டீரியாக்கள் போடும் சண்டையில் நாம்தான் பலியாடு: அவை பிரயோகிக்கும் ஆயுதங்களின் பக்க விளைவுகள்தான் நிமோனியா, மேனிஞ்சிடிஸ் மற்றும் பல- என்பது உண்மையாக இருக்கலாம்… வசீகரமான விஷயம்.

Advertisements

4 thoughts on “போனோபாவின் கையைக் குலுக்கல்…

  1. எடை மிகுந்திருப்பவர்கள் குறித்த உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. என்னோட முந்தைய பாஸ் பத்தி சொன்னேனே அவர் இதைத்தான் சொல்லுவார். அவர் கொஞ்சம் தாட்டியா இருப்பாரு, ஆனா ஆரோக்யமானவரு. அவர் தம்பி ஒல்லியா சிக்குன்னு இருப்பாரு ஆனா ஊர்ல இருக்கற அத்தனை வியாதியும் அவருக்கு வகைதொகை இல்லாம உண்டாம்.

    1. உடல் வாகுன்னு ஒண்ணு இருக்குன்னு சொல்றாங்க. இது குறித்த வேறு பல சுட்டிகள் கிடைத்தால் தருகிறேன்.
      மொத்தத்தில் நம்பிக்கை ஊட்டும் ஒரு விஷயம்…

  2. /// நம்மை விட நம் முன்னோர்களிடைதான் …..////

    அப்டியா…. அடடா…முன்னமே பொறக்காம போயிட்டேனே…. நெறைய வாழ்க்கைல மிஸ் பன்னியிருப்பெனோ? இந்த வயசுல அந்த மூணாவது வீட்டு பாட்டி இப்படி இருக்குதே…அந்த வயசுல எப்படி இருந்திருக்கும்…. அடடா…அர்த்த ராத்திரி ஒரு மணிக்கு கற்பனை எப்படியெல்லாம் போகுது பாருங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s