மண்ணாசை கொண்ட குரங்குகள்

மொழி: நமது உணர்வின் வெளிப்பாடு மட்டுமல்ல, நமது அறிவின் திறவுகோல். நமக்குத் தெரிந்த மொழிகளின் வளமை நம் வாழ்வில் செழுமை சேர்க்கிறது. தெளிவாகச் சொன்னால், தமிழை மட்டும் அறிந்தவர்கள் பார்க்கிற உலகம் வேறு- வேற்று மொழியாளர்கள் காண்கிற உலகம் வேறு.

தெரியாத விஷயமா? கோபத்தைக் கட்டுப்படுத்தி வைப்பவர்கள் சரக்கடித்ததும் பொங்கி வெடிக்கிறார்களாம்.

ச்கீஜோப்ரேனியா என்றழைக்கப்படும் மனச்சிதைவின் அறிகுறிகளை குழந்தைப் பருவத்திலேயே குழந்தைகளின் மூளையில் கண்டறிய முடியுமாம்- நம்பிக்கை தரும் செய்தி.

குரங்குகளும் மண்ணாசை கொண்டவையே: அவையும் அக்கம்பக்கத்திலிருக்கிற குரங்குக் கூட்டங்களைத் தாக்கிக் கொலையும் செய்து அவற்றின் நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்கின்றனவாம். உகாண்டாவில் பத்தாண்டு காலம் ஆராய்ச்சி செய்து இதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மனிதன் மாறவில்லை: மரத்திலேயே இருந்திருக்கலாம், இல்லையா!

இதை சொன்னால் பயந்து விடுவீர்கள், ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாது: நாம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தும் bisphenol A என்றழைக்கப்படும் BPA கருவிலிருக்கும் குழந்தைகளின் விரைகளின் செயல்பாட்டை பாதிக்கும்- என்கிறார்கள். பிளாஸ்டிக் பாத்திரங்களில் சாப்பாடு கொண்டு செல்வது, அதிலிருந்து தண்ணீர் குளிர்பானங்கள் அருந்துவது- குறையுங்கள். இது நம்மால் முடியும். அப்புறம் இன்னொன்று.
polycystic ovary syndrome இருக்கிற பெண்களின் ரத்தத்தில் இந்த BPA அதிகம் இருக்கிறதாம்.

பதின்மப் பருவத்தில் சமய ஈடுபாடு இருக்கிறவர்கள் குடிபோதைக்கு பலியாவதிலிருந்து சிலபல காலம் தப்புகிறார்கள்.

அப்படிதான் நீங்கள் குடிபோதைக்கு அடிமையாகி விட்டீர்களா? அதிலிருந்து மீள வழி இருக்கிறது: உடற்பயிற்சி!

ரொம்ப முக்கியம்- பேன்களின் மரபணுத்தொகுப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விட்டது.

அணுகுண்டை அமேரிக்கா  தயார் செய்ய நடத்திய ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவர் ராபர்ட் ஒப்பன்ஹைமர்.

அவர் தனது  இருபத்து மூன்றாவது வயதில் முனைவர் பட்டம் பெற்றார். அப்போது நேர்முகத் தேர்வில் ஜேம்ஸ் பிரான்க் என்பவர்தான்  அவரை கேள்வி கேட்ட பேராசிரியர்.

தேர்வு நேரம் முடிந்ததும் நேர்முகத்தேர்வு நடந்த அறையிலிருந்து ஆடிப் போனவராக வெளி வந்தாராம் பிரான்க்.

“நல்ல வேலை, சரியான சமயத்தில் தப்பித்தேன்- அவன் என்னை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டான்!”, என்றாராம் முகத்தில் வழிந்த வியர்வையைக் கைகுட்டையால் துடைத்தவாறே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s