ஸ்லோவேனியா- சில குறிப்புகள்

நாளை இங்கிலாந்தின் தலை எழுத்தை ஸ்லோவேனியா தீர்மானிக்கப்போகிறது: இந்தக் குட்டி நாட்டின் மக்கள் தொகை இருபது லட்சம், வயது இருபது, பதிவு பெற்ற கால்பந்து ஆட்டக்காரர்கள் நானூற்று இருபத்து ஒன்பது! இவ்வளவு தூரம் வந்ததே வியக்க வைக்கும் சாதனைதான், இல்லையா?

இந்த இரண்டு அணிகளுமே 4-4-2 என்ற வியூகத்தில்தான் விளையாடுகின்றன: நாளை ஜோ கோள் ஆடுகிறபட்சத்தில் இந்த வியூகம் மாறலாம். மாற்றச் சொல்லி இங்கிலாந்தின் பயிற்சியாளருக்கு கடும் நிர்பந்தம். மாற்றாமலிருந்து வெற்றி பெறத் தவறினால் அறிவுகெட்டத்தனமாகப் போய் விடும்.

ஸ்லோவேனியா அணியின் கேப்டன் கொஞ்சம் திமிராகவே பேசுகிறார்- வைன் ரூனி இது வரை என்ன செய்திருக்கிறார்? ஒன்றுமில்லை, என்கிறார்- அவரைப் பற்றிக் கவலைப்படவில்லையாம். வெற்றி பெறவே ஆடுவோம்- சமன் செய்ய நினைத்து ஆடுவது தற்கொலைக்கு சமம் என்று அவர் சொல்வது நம்பும்படியாக இல்லை.

ஏனென்றால் இங்கிலாந்து வென்றாக வேண்டும்- ச்லோவேனியாவுக்கு டிரா பண்ணினால் போதும்.

கவனிக்க வேண்டிய இரு விஷயங்கள்:

இந்த மாட்சின் நடுவர் மதிக்கத் தெரியாதவராம். ஜான் டெர்ரி இவரை ஏற்கனவே திட்டி இருக்கிறார். அண்ணன் வுல்ப்காங் ஸ்டார்க் இங்கிலாந்துக்கு எதிராக முடிவுகளைக் கொடுத்து வன்மம் தீர்க்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

ஸ்லோவேனியா கடந்த ஆண்டு செப்டம்பருக்கு அப்புறம் எட்டு சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஏழில் வெற்றி, ஒரு சமன். இந்த எட்டுப் போட்டிகளுக்கு முன் நடந்த போட்டியில் அது தோற்ற அணி – ஆமாம் நண்பர்களே, இங்கிலாந்து!

ஸ்லோவேனியா தனது தோல்விக்கு பழி தீர்க்குமா?
மரியாதை தெரியாதவர் என்று வையப்பட்ட நடுவர் வன்மம் தீர்ப்பாரா?
இங்கிலாந்தின் பயிற்சியாளர் தனது அவப்பெயரை துடைப்பாரா?

நாளை உங்கள் வீட்டு தொலைகாட்சி பெட்டிகளில்- உலக வரலாற்றிலேயே முதல் முறையாக: ஸ்லோவேனியா வஸ் இங்கிலாந்து 2010 போட்டிகள். லைவ்.

காணத்தவறாதீர்கள்.

5 thoughts on “ஸ்லோவேனியா- சில குறிப்புகள்

 1. The whole of England will be shut down at 3pm on wednesday என்றார் என் கிளையன்ட். சுலோவனிய அணி எதுனா அதிர்ச்சி குடுத்தா இங்கிலாந்து தாங்காது சாமி.

 2. எதுவும் நடக்கலாம் என்று எனக்குத் தெரிந்த ஒரு கிளி ஜோசியர் சொன்னார். பார்க்கலாம், நான் இங்கிலாந்து ரசிகன். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

 3. ஸ்லொவெனியாவை சிலாகிப்பவர் என்று நினைத்தால் இங்கிலாந்து ரசிகர் என்று பல்டி அடிக்கிறீரே! இங்கிலாந்து ஆட்டம் எல்லாம் EPL-ல்தான் போலிருக்கிறது. பந்தை வரிப்பதில் சுவாரச்யம் இன்றி கடமைக்கு ஆடுவதாகவே தோன்றுகிறது.

  ரூனி இது வரை வெளியேற்றப்படாமல் இருப்பது ஆச்சர்ய,. அனேகமாய் இன்று எதாவது செய்யக் கூடும்.

  நள்ளிரவு ஆட்டம் என்றால் லை கமெண்ட்ரி என் வலைப்பூவில் கொடுத்திருப்பேன்.

  இங்கிலாந்து ஆட்டத்தை விட ஜெர்மனி-கானா ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். கானா நன்றாக ஆடுகிறது.ச் செர்பியாவிடம் தோற்றதிலிருந்து ஜெர்மனி தடுமாற்றத்தில். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

  The world cup is reaching an exciting phase.

  1. உங்கள் இடுகைக்கு நன்றி. நான் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் ரசித்துப் படிக்கிறேன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

   இன்றைக்கு இங்கிலாந்துக்கு கடும் சோதனைதான்: தங்கத் தலைமுறை என்று கொண்டாடப்பட்ட ஆட்டக்காரர்கள்- எதையும் இதுவரை சாதிக்கவில்லை, அவர்களுக்கு பெருமை பெற இதுதான் கடைசி வாய்ப்பு. ச்லோவேனியாவுக்கு கொஞ்சம் கூட பிரஷர் இல்லை. எதுவும் நடக்கலாம்- ஆனால் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது. இதுவரை நன்றாக ஆடவில்லை, என்றாலும் அடுத்த சுற்றுக்குப் போக தகுதி இருக்கிற அணிதான்- எங்கேயோ தப்பு நடந்திருக்கிறது- அது என்ன என்று தெரியவில்லை.

   ஜெர்மனி தடுமாறினாலும், லினேக்கர் சொன்னதை கவனித்தீர்களா? “கால்பந்து என்ற விளையாட்டில் இருபத்திரெண்டு பேர் ஓடியாடி பந்தோடு விளையாடுவார்கள், நடுவர் குப்பை கூளமாய் தவறான முடிவுகள் தருவார், எப்போதும் இறுதியில் ஜெர்மனி ஜெயிக்கும்” 🙂

   Gary Lineker once said that “Soccer is a game for 22 people that run around, play the ball, and one referee who makes a slew of mistakes, and in the end Germany always wins”.

   மகா மட்டமாக விளையாடினால்கூட ஜெர்மனி பயங்கரமான அணிதான்: ராமபாணம் போல எதிர்ப்புகளைத் துளைத்துக்கொண்டு அங்கு இங்கு சுற்றி இலக்கை நெருங்கி விடும்.

   ஜெர்மனி விஷயத்தில் ஜாக்கிரதையாகத்தான் ஜோசியம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் கானாவுக்கு வாழ்த்துகள்.

  2. லைவ் ப்ளாகிங் செய்வதற்கு சிறந்த இடம் கூகுல் வேவ் என்று தோன்றுகிறது- http://www.readwriteweb.com/archives/how_to_use_google_wave_for_live_blogging.php

   நீங்கள் உங்கள் நண்பர்களுடன் உரையாடுகிற மாதிரி லைவ் ப்ளாகிங் செய்து விட்டு ஒட்டு மொத்தத்தையும் உங்கள் வலைதளத்தில் மிக எளிதாக எம்பெட் செய்யவும் வசதி இருக்கிறது.

   முயற்சி செய்து பாருங்களேன்…

   வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s