தெரியாது, ஆனா தெரியும்!

பசிக் கொடுமை: பிள்ளைப் பிராயத்து வறுமை வருங்காலத் தலைமுறைகளைக்கூட பாதிக்கும்- கெடுக உலகியற்றியான் என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்?

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பவரை, அவர் தடவுகிறார், என்று சொல்கிறோமில்லையா?– உண்மைதான்: கரடுமுரடான பொருட்களைத் தொடுகையில் மற்றவர்கள்பால் முரட்டுத்தனமாகவும், கனமான பொருட்களை வைத்திருக்கையில் கனமான தீர்மானங்களையும் செய்கிறோம். அதனால்தான் ஆண்கள் பெண்களிடம் அடங்கிப் போகிறார்கள் போலிருக்கிறது.

கிரி மறுபடியும் திட்டப் போகிறார்- நீரிழிவு இருப்பவர்களுக்கு ரத்தக் குழாய் தொடர்பான சிக்கல்கள் வரும் வாய்ப்பு இரட்டிக்கிறதாம்: இதய நோய், பக்கவாதம் இந்த மாதிரி.

என்ன எழவுடா இது! சிம்பன்சீக்களும் பிரபலமான சிம்பன்சீக்களுக்கு ரசிகர்களாக இருந்து அவர்கள் செய்வதையே தாங்களும் செய்கின்றனவாம்.

மண்ணுக்கும் நீந்தி செல்லக்கூடிய எந்திரன் தயார்! (மண் என்றால் மண்ணல்ல, மண்ணோடு மண்ணாகிப்போன இடிபாடுகள்)

இதை நான் நம்ப மாட்டேன்- கருவுற்று இருபத்து நான்கு வாரங்கள் வரை வயிற்றில் வளரும் சிசுவுக்கு வலி தெரியாது.

விளையனூர் ராமச்சந்திரன் இது குறித்து என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும்: பிளைன்ட்சைட் தெரியுமில்லையா?- கண் தெரியாது, ஆனால் தெரியும்- இது எப்படி என்று விஞ்ஞானிகளால் இப்போது விளக்க முடியுமாம்.

Advertisements

6 thoughts on “தெரியாது, ஆனா தெரியும்!

  1. //என்ன எழவுடா இது! சிம்பன்சீக்களும் பிரபலமான சிம்பன்சீக்களுக்கு ரசிகர்களாக இருந்து அவர்கள் செய்வதையே தாங்களும் செய்கின்றனவாம்.//

    மனுசனோட சேர்ந்து அதுங்களும் கெட்டுப் போயிடிச்சுங்க… எல்லாம் கலிகாலம்!

    • ஆமாமா, அவங்களும் இப்போ மரத்துக்கு மேலே கட் அவுட் வெச்சு வாழைப்பழத்தை ஊட்டி விடறாங்களாமே, காங்கோ தந்தியில் படிச்சேன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s