ஜெர்மன் எக்ஸ்பிரசில் மோதி சுக்குநூறானது இங்கிலாந்து!!!

இதோ அந்த துக்க கணம்-

இங்கிலாந்துக்கு என்ன ஒரு துரதிருஷ்டம்…

இன்று  நம் கோழிகள் பச்சடி ஆவதென்று பிரம தேவன் எழுதி விட்டான் போலிருக்கிறது.

இரண்டாவது பாதியை செமத்தியாக துவுங்கியிருக்கிரார்கள் இங்கிலாந்து அணியினர். அரை கிலோமீட்டர் தூரத்திலிருந்து படு வேகமாக லாம்பார்ட் ஒரு உதய் விட்டார்- கோல் போஸ்ட் கிடுகிடுத்து விட்டது- நல்ல அடி. போஸ்ட்டில் பட்டிருக்காவிட்டால் கோல் தான்.

ஐம்பத்து நன்கு நிமிடங்கள். சிவா செல்லில் கூப்பிட்டுப் பேசியதால் வெங்காயம் வெட்ட முடியவில்லை. பசி நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கிறது.

ஜெர்மனி இரண்டு கொள் போட்டிருக்க வேண்டும். இங்கிலாந்து மூன்று. இரு முனைக்கும் வேட்டையாடபடுகிற சிறுத்தை மாதிரி தப்பி ஓடுகிறது பந்து.

அறுபது நிமிடங்கள் ஆகிறது- இரு அணியும் மாறி மாறி எதிர் முனையைத் தாக்குகிறார்கள். கொலீக்கள் சுசுருப்பாகத் தடுக்கிறார்கள். ஜேர்மனி பத்து கோல் போட்டிருக்க வேண்டும். இங்கிலாந்து பன்னிரெண்டு. விறுவிறுப்பான ஆட்டம்.

இப்போது திபோ கோல் அடித்திருக்க வேண்டும். கோளுக்கு அரை அடி தூரத்தில் அவரது காலடியிலிருந்து பந்தைத் திருடி விட்டார்கள்.

உடனே, இங்கிலாந்து பக்கம் கொண்டு போகிறார்கள்.ச்வைன்ச்டைகர் பளீரென்று கோளை நோக்கி அடித்தார்- கொஞ்சம் வெளியே போனது. இப்போது இன்னொருத்தர், மறுபடியும் முயற்சி செய்கிறார். கோல் போஸ்ட் இரண்டு மாடி உயரம் இருந்திருந்தால் நிச்சயம் கோல்தான்.

பாழாய்ப் போன மனசுதான் ஆற மாட்டேன் என்கிறது…

It really is time for a violent, bloody revolution against #FIFA. #ENG, #USA, and #IRE are all in. #worldcupSun Jun 27 15:17:06 via UberTwitter

ஏன் என்று கேட்கிறீர்களா? பதிமூணாம் நம்பர் பனியன் போட்ட முல்லர் மூன்றாவது கொலை இறக்கிவிட்டார்.

GOOOOOOOOOLAAAAAÇOOOO da Alemanha!! #ger 3×1 #eng #worldcupSun Jun 27 15:23:14 via UberTwitter

போங்கப்பா!

விரலெல்லாம் வலிக்குது…

இங்கிலாந்து ஒரு கோல் போட்டு முன்னிலை வகிக்கும் வரை இந்த ப்ளாக் க்ளோஸ்.

பசி கூடவே தலைவலி வேற வந்திருச்சி.

தமிழுக்கு இப்படி விழுந்து விழுந்து சேவை செய்யலைன்னு யாரு அழுதது?

ஜெர்மனிக்காரங்க வேற நாலாவது கொலை இறக்கிட்டாங்க.

அன்னிக்கே சொன்னேன் போகாதீங்கடா போகாதீங்க, அங்க ஒரு எக்ஸ்பிரஸ் வருது அடிபட்டு செத்திருவீங்கன்னு.

மோதறாங்கலாமா!

ஜெர்மனி இந்த ரேட்டுல ஆடினா பிரேசில் அர்ஜென்டினா ரெண்டு பேரையுமே ஒரே மாட்ச்சுல காலி பண்ணிருவாங்க.

போங்கப்பா வயிற்றெரிச்சலா இருக்கு.

Get them on the phone. Time for some unconstitutional language. #eng #worldcupSun Jun 27 14:53:48 via TweetDeck

ராணியே திட்டிட்டாங்க… நானும் போறேன்- இனி இந்த ஆட்டத்துல நமக்கு ஒண்ணுமில்ல.

Jesus this isn’t even a game anymore. #ENG spirit has been broken and they won’t recover from this. #WorldCupSun Jun 27 15:26:37 via TweetDeck

I don’t like football that much anyway. #worldcup #guttedSun Jun 27 15:26:37 via web

Advertisements

16 thoughts on “ஜெர்மன் எக்ஸ்பிரசில் மோதி சுக்குநூறானது இங்கிலாந்து!!!

  1. எங்கடா காணோமேன்னு பாத்தேன்- வந்துட்டீங்களா, வெந்த புண்ணில வேலைப் பாய்ச்ச!

   இப்போ நான் ஸ்டார் கிரிக்கெட் போயிட்டேன்.. அங்க நம்ம ஆளுங்க ஆஸ்திரேலியாவை புரட்டிப் புரட்டி எடுக்கிறாங்க, வந்து பாருங்க.

   1. அட, நீங்க எப்போ UK பிறப்புரிமை வாங்கினீங்க? நம்ம ஆளுங்களாமில்ல? நான் பேசினாலும் நியாயம் இருக்கு. வெள்ளைக்காரனுக்கு கை கட்டி வேலை பார்க்கிற வழியில உரிமை எனக்கு இருக்கு.

 1. என்ன சார், google wave -இல் லைவ் பிளாக்கிங் பண்றேன் பேர்வழின்னு… ஆளையே காணோம்? ஏன் வேவுக்கு என்னாச்சி?

  1. அதுக்கும் நீங்கதான் வழி பண்ணனும் (உலவியையே வடிவமைச்ச உங்களுக்கு இதெல்லாம் சின்னப்புள்ளத்தனமா இருக்கும்)- கூகுள் வேவை ப்ளாகரில் எம்பெட் பண்றது சுலபமா இருக்கு- ஆனா, இந்த வர்ட்ப்ரஸ்ல எப்படி எம்பெட் பண்றதுன்னு ஆனா மட்டும் முட்டிப் பாத்தேன், கண்டுபிடிக்க முடியல.

   ஒரு வேண்டுகோள்: ப்ளாகர் மற்றும் வர்ட்ப்ரசில் எப்படி கூகுள் வேவை லைவ் ப்ளாகிங் செய்ய பயன்படுத்தலாம் என்று நீங்கள் விவரமாக ஸ்க்ரீன்ஷாட்களோடு ஒரு விவரமான பதிவு செய்தால் எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்…

   1. சார், நான் இன்னும் பிளாக்கிங் எல்லாம் ஆரம்பிக்கவில்லை. ஏதோ நீங்க கேட்டீங்களேன்னுதான் முதல் பதிவு போட்டுப் பார்த்தேன். மற்றும்படி நான் டூ பிஸி. (அட ப்ளாக் எழுத வயசு பத்தலைங்க… பத்தாம் வகுப்பு எக்ஸாம் வேற வருது)

    எனக்கு வோர்ட்பிரஸ் இல் அதிகமாகத் தெரியாது. எதற்கும் google இல் தேடித் பாருங்களேன்.

    1. அடடா, தெரியாம உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். படிப்புதான் முக்கியம். மாநிலத்துலேயே முதல் மாணவனாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.

     (இந்த தளத்துல அப்டிகா இப்டிகா சில மேட்டர் இருக்கும்- தயவு செஞ்சு அதைப் படிச்சு கெட்டுப் போயிராதீங்க)..

     1. அட அது ஒரு பிரச்சினையே இல்ல சார். பத்தாம் வகுப்பு எக்ஸாம்ங்கிறது வருசத்துக்கு மூணு தடவை வருமே, அதுல பத்தாம் வகுப்புல ரெண்டாவது.(தமிழ்நாட்லகூட ஏதோ சொல்லுவீங்களே… ஆங்.. அரையாண்டுப் பரீட்சை) அதுதான். வேறோன்னுமில்ல. தமிழ்நாட்ல பத்தாம் வகுப்புப் பரீட்சைங்கிறது இங்க (இலங்கை) பதினோராம் ஆண்டுதான் வரும். அதுக்கே எவனும் படிக்கரதில்ல (அகில உலக மாணவர்கள் புத்தி) அதனால எனக்கு இதெல்லாம் பிரச்சினையில்ல.

      அப்புறம் அந்த அப்டிகா இப்டிகா மேட்டர்… நான் படிக்கவே மாட்டேனே. ஐ ஆம் அ குட் பாய்!

      1. //தமிழ்நாட்ல பத்தாம் வகுப்புப் பரீட்சைங்கிறது இங்க (இலங்கை) பதினோராம் ஆண்டுதான் வரும்.//

       அப்ப அதை ஏன் பத்தாம் வகுப்புப் பரீட்சைன்னு சொல்லறீங்க? புரியலையே.

       சொல்றேன்னு முகத்தைத் திருப்பிக்கிடாதீங்க, பருவத்தே பயிர் செய், அப்படின்னு நம்ம முன்னோர் சொல்லி இருக்காங்க.

       விளையாட்டா சில படிப்பினைகள் பெறலாம், ஆனா படிப்பை விளையாட்டா வெச்சிக்கலாமா, சொல்லுங்க?

       அதனால எந்தப் பரீட்சையா இறந்தாலும் உங்க பேரைக் காப்பாத்திக்குங்க- அ + பர + ஜிதன் = எதிரிகளால் வெல்லப்படமுடியாதவன்.

       நமக்கு நம்மை விட்டா யாரு எதிரி? அதனால விளையாட்டுத்தனைத்தை எல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு நல்ல புள்ளையா படிச்சு சாதனை பல படைச்சுக் காட்டுங்க.

       பதினஞ்சு வயசுலயே இந்த போடு போடறீங்க, முயற்சி பண்ணினா நீங்க பீன்மன் ரேஞ்சுக்கு வந்தாலும் வந்திருவீங்க…. அப்போ நம்மளை எல்லாம் ஞாபகம் வெச்சிக்குங்க.

       அட்வைஸ் பண்ணினதுக்கு மன்னிச்சுக்குங்க.

       1. சரி சார். இவ்வளவு கஷ்டப்பட்டு டைப் பண்றீங்களே! கவலைப்படாதீங்க.. உங்கள மறக்க முடியுமா??? நான் நல்லாப் படிப்பேன்.

        உங்க கேள்வி… அது என்னான்னா… தமிழ்நாட்ல பத்தாம் ஆண்டு வர்ற பொதுப்பரீட்சை இங்க பதினோராம் ஆண்டுதான் வரும். இப்ப சரியா…

        1. மறக்க முடியுமான்னு மூணு கேள்விக் குறி போட்டிருக்கீங்களே, அவ்வளவு சந்தேகமா? நடுவில ஒரு ஆச்சரியக் குறி போட்டிருந்தா மனசுக்கு ஆறுதலா இருந்திருக்கும்…

         ஹூம்…

         நல்லாப் படிச்சு முதன்மை மாணவரா வர வாழ்த்துக்கள்.

 2. Giri :

  அட, நீங்க எப்போ UK பிறப்புரிமை வாங்கினீங்க? நம்ம ஆளுங்களாமில்ல? நான் பேசினாலும் நியாயம் இருக்கு. வெள்ளைக்காரனுக்கு கை கட்டி வேலை பார்க்கிற வழியில உரிமை எனக்கு இருக்கு.

  என்னமோ போங்க…

  e

 3. நாட்பாஸ்: நீங்க லைவா பிளாக் செய்தது தெரியவிலலை. நான் லைவாக செய்து போரடித்ததால் நேற்று ஆட்டத்தின் போது கணினியைத் திறக்கவே இல்லை. என்னைவிட நீங்கள் சிறப்பாக லைவ் அப்டேட் செய்கிறீர்கள்.

 4. எனக்கு லைவ் அப்டேட் பண்ண இன்ஸ்பிரேஷனா இருக்கற குரு நீங்க… நீங்களே இப்படி சொன்னா எப்படி!

  லைவ் அப்டேட் பண்றதுல ஒரு போர் என்னன்னா மாட்ச்சை ரசிச்சு பாக்க முடியாம எழுத வேண்டிய தேவை தடுத்துருது…

  மேட்ச் முடிஞ்ச அப்புறம் யார் கூடவோ ரொம்ப நேரம் சண்டை போட்ட மாதிரி மூலைல வசவசன்னு ஒரு பீலிங்…

  நீங்கல்லாம் எப்படிதான் செய்யறீங்களோ!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s