இங்கிலாந்து ஜெர்மன் எக்ஸ்பிரசில் மோதுகிறது…

இங்கே நாம லைவ் ப்ளாகிங்கை ஆரம்பித்து விட வேண்டியதுதான்…

வீட்டில் யாரும் இல்லை. அதனால் நாமேதான் சமைத்து நாமேதான் சாப்பிடவேண்டும். வெளியில் போய் சாப்பிடலாமேன்றால் சோம்பேறித்தனம், காலையில் அலுவலகத்துக்கூப் போக வேண்டி இருந்தது. ஞாயிற்றுக் கிழமை வேலைக்குப் போவதை விட பெரிய கொடுமை எதுவும் இல்லை- அதிலேயே சுத்தமும் ஒடுங்கி விட்டது.

அது தவிர பக்கத்தில் இருக்கிற சரவணா பவனில் போய் சாப்பிடலாமேன்றால் இந்த மாசத்து வாடகையை ஒரு வேலை சாப்பிடவென்று இழக்கிற அளவுக்கு என் கையில் பணமில்லை.

ஜேர்மனி கோல் போட்டிருக்க வேண்டியது- இங்கிலாந்து கோலி கையைக் காலை கோணங்கித்தனமாக வைத்துக் கொண்டு குறுக்க வந்து தடுத்து விட்டார். அதிர்ஷ்டசாலி.

இந்த வுவுசெலக்களின் தேன்கூடு சத்தம் நாராசமாக இருக்கிறது. என்ன செய்வது, கேட்டுதான் தொலைக்க வேண்டும்.

எங்கே விட்டேன்?

ஆமாம் நானே சமைத்து நானே சாப்பிட வேண்டும். வேறு வழியில்லை. தளத்தில் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிற அன்பர்கள் கருணை கூர்ந்து ஒரு சின்ன இடைவேளை- வெங்காயம் நறுக்கவும், ஓட்ஸை வாணலியில் இடவும்- எடுத்துக் கொள்வேன். அப்போது தயவு செய்து எங்கும் போய் விட வேண்டாம்.

ஒன்பது நிமிடங்கள் ஆகி விட்டன. இதுவரை எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதை மெத்த பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பந்தை இங்கிட்டும் அங்கிட்டும் ஓங்கி உதைத்துவிட்டு துரத்தி ஓடுகிறார்கள் இரு அணியினரும். ரூனி கொஞ்சம் பாய்ச்சல் காட்டுகிறார். ஜெர்மானிக் காரர் ஒருவர் அவரிடமிருந்து பந்தைப் பிடுங்கிக் கொண்டு கோல் அடிக்கிற பெட்டி வரை ஓட்டிச் சென்று எதிரில் நிற்பவர் காலில் ஒரு உதய் விட்டார் (பந்தால்தான்).

ஆச்சு, பதினோரு நிமிடங்கள் போனதே தெரியவில்லை.

மெய்யாலுமா?

@mtnbke – just from what I’ve seen from the first minutes, #ENG I’d playing at a much higher level than they were. #WorldCupSun Jun 27 14:15:24 via Echofon

இருபத்து ஒன்றாவது நிமிடம்- பாவிகள் முதல் கோலை இறக்கி விட்டார்கள். எதிர்பார்த்ததுதான்.
ஆனமட்டும் கையைப் பிடித்து காலைப் பிடித்து அப்டன் தடுக்கப்பார்த்தார்- க்லோசெர் பின்னிப் பெடலெடுத்து விட்டார். நல்ல கோல்.

ஆமாம் , நல்லா சொன்னீங்க அம்மிணி…

Oh fuck a duck. #worldcupSun Jun 27 14:20:18 via Osfoora


இங்கிலாந்து ஒன்றும் கோல் போடுகிற மாதிரி தெரியவில்லை- இப்போதுதான் அட்டகாசமாக தூரத்திலிருந்து கோலை நோக்கி பலமாக இனொரு பந்து வந்தது- நல்லவேளை வழியில் நம்ம கோழி இருந்தார். நெஞ்சுக்கு நேராக வந்ததால் பிடித்து விட்டார். நல்ல பண்ணினீங்க எஜமான்!

இருபத்தாறு நிமிடம் ஆகிவிட்டது. இந்த ங்கை ங்கை சத்தத்தை நிறுத்துங்கப்பா. எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல் இருக்கிறது. பசி வேறு வயிற்றைக் கிள்ள ஆரம்பித்து விட்டது.

ரூநியிடம் பந்து அவ்வப்ப்போது வருகிறது. அவர் சுதாரித்து அத தொடுவதற்குமுன் ஏழெட்டு ஜெர்மன்கள் அவரை மொய்த்து ஏழு வயது சிருமியிடமிருந்து சாக்லேட்டைப் பிடுங்கிக் கொண்டு போவதுபோல் பந்தை கடத்திக் கொண்டு போய் விடுகிறார்கள்.

மெத்தப் படித்தவர்களே சொல்கிறார்கள் பாருங்கள்:

Germany-England Poor Rooney http://nyti.ms/dcUS36 #worldcup #GER #ENGSun Jun 27 14:24:09 via API


க்ளோசர் இன்னொன்றும் போட்டிருக்க வேண்டும்- நம் கோழி வழித்யில் குறுக்கு வேட்டைப் படுத்து விட்டார்- பந்து அவர் வயிற்றில் பட்டுத் தப்பிப் பொய் விட்டது.

ஆகா! அட்டகாசம்! டேபோ கொள் அடித்து விட்டார் என்றே நினைத்தேன். பந்து கோல் போஸ்ட்டில் பட்டுத் தெறித்தது- உள்ளே விழுந்திருந்தாலும் இங்கிலாந்துக்கு பிரயோசனப்படிருக்காது. ஆப் சைடாம்.

ஆனால் பொடோல்ஸ்கி ஆப் சைடில் இல்லாமல் நேர் வழியாக வந்து க்லோசெர் கொடுத்த ஒரு பாசை அழகாக உள்ளே தள்ளி விட்டார். ஜெர்மனி இரண்டு இங்கிலாந்து ஒன்று- ஒன்றும் இல்லை.

தென்னமேரிக்கக்காரர்களுக்கு கொண்டாட்டம்-

Aguafiestas RT @goomez @tuesta @gonzalotorres mens patrocinado: en la #worldcup d la pob infantil estamos en 5to puesto http://bit.ly/9yiuJYSun Jun 27 14:33:05 via Twitterrific

அதற்குள் என்னன்னெமோ நடந்து விட்டது.
இங்கிலாந்து ஒரு கோல் அடித்திருக்க வேண்டும் , ஜேர்மனி இரண்டு கோல் அடித்திருக்க வேண்டும். நான் சாப்பிட்டிருக்க வேண்டும்- குறைந்தது வெங்காயமாவது வெட்டியிருக்க வேண்டும்.

பரபரப்பாக பந்தை இங்கும் அங்கும் முடுக்கிகொண்டு இருக்கிறார்கள்- திரு லலிதா ராம் அடங்கொக்காமக்கா !

அப்டன் அனாயாசமாக பின்னால் சாய்ந்து இங்கிலாந்துக்கு ஒரு கோல் அடித்தார். அடுத்தது என்ன நடந்தது! கொடுமை. லம்பார்ட் அடித்த ஒரு கோளை நடுவர் நிராகரித்தார். இது அநியாயம். வன்மையான கண்டனங்கள்.

ஏழு வயது பெண்ணிடமிருந்து வாயிலிருக்கிற சாக்லேட்டைப் பிடுங்குகிற மாதிரி கோலைப் பறித்து விட்டார்கள்.

இவர் ரொம்ப சரியாக சொல்கிறார் மக்களீர்:

சரி விடுங்க,

OKAY KEEP IT UP #ENG MOVE ON MOVE ON MOVE ON WE NEED MORE GOALS NOT MORE WHINING #WORLDCUPSun Jun 27 14:41:12 via Echofon

ஹாப் டைம் ஆகப் போகிறது. தேனீக்களில் ரீங்காரம் ஒடுங்கி ஆங்கில அணியின் ரசிகர்களின் பறை ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. அயராமல் கொட்டு முரசே, வெற்றி நமக்கென்று கொட்டு முரசே…

There’ll be war if England lose now #worldcup #poorchoiceofwordsSun Jun 27 14:43:07 via web

இப்போது எனக்கு எல்லாம் இனிமையாக இருக்கிறது- இங்க்லீஷ்காரர்கள் பூச்சி மாதிரி செத்து மடிவார்கள் என்று நினைத்தேன்- மானமுள்ள சிங்கங்கள் என்று நிருபித்து விட்டார்கள். இனி தோற்றாலும் பரவாயில்லை- பழியைப் போட நடுவர் இருக்கிறாரே.

ஹாப் டைம் விசில் அடித்து விட்டார் நடுவர்.

அப்போ நான் வெங்காயம் வெட்ட உத்தரவு வாங்கிக்கறேன்!

ஒரு பத்து நிமிட இடைவெளி. மூச்சா கிச்சா போறவங்க ஓடிப்போய் வேலையை முடிச்சுக்கிட்டு வந்திருங்க.

இடைவேளைன்னு ஸ்க்ரீன் போட்டாச்சு, ஓகேயா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s