சோம்பல் கலைஞர்கள்

நேற்று ஒரு சோக நிகழ்வு தோல்விகரமாக நடந்தேறியது- நான் இங்கிலாந்தின் தோல்வியையோ யோ கடவுர்க் கையர் மாரடோனாவின் அர்ஜெண்டினா வெற்றியையோ சொல்லவில்லை.  இது ஒரு தனிப்பட்ட இழப்பு, என் சுய அடையாளத்துக்கு வைக்கப்பட்ட வேட்டு.

நான் சோம்பேறி என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விஷயம்தானே. ஒரு வேலையை செய்யாமல் இருப்பதற்கோ, அல்லது செய்துதான் தீர வேண்டும் என்ற நிலையில், அதைத் தாமதப்படுத்தவோ எவ்வளவுக்கு முடியுமோ, அவ்வளவுக்கு என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறவன் நான்.

தினமும் மழித்துக் கொள்ள சோம்பலாக இருப்பதனால், மாதம் ஒரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையோ, முடி வெட்டிக்கொள்ளும் வரை தாடி மீசையை அப்படியே அதுகள் போக்கிலேயே சுதந்திரமாக வளர விட்டு விடுவேன் என்பதும் நீங்கள் அறிந்த விஷயம்தான். அதிலும், “என்னப்பா, மதுரைக்காரைங்க மாதிரி தாடியை வளத்துக்கிட்டே போறியே?” என்று நண்பர்கள் கேட்கும்போதுதான் டார்ச்சர் அதிகமாகிவிட்டது என்று சலூனை நோக்கி தங்கித் தங்கி  விரைவேன்.

சரி விஷயத்துக்கு வருகிறேன்- நேற்று அலுவலகம் போனேனில்லையா? வீட்டுக்குப் போகிற வழியிலேயே முடி வெட்டிக் கொண்டு விடலாம், நேரம் மிச்சமாகும் என்று நினைத்தபடி கே கே நகரில்  பிளாட்பார்மில் இருக்கிற ஒரு கடையில் நுழைந்தேன்.

என்னைப் பற்றி கேவலமாக நினைத்து விடாதீர்கள் நண்பர்களே, அது ஒரு ஏசி சலூன். இப்போதெல்லாம் நிறைய பணக்காரர்கள் பிளாட்பாரத்தில்தான் வாழ்கிறார்கள்.  என்னை மாதிரி இலக்கிய சேவை செய்கிறவர்கள் மட்டும்தான் அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கு பார்த்து கொண்டு, பதிப்பிக்க ஆள் மாட்டுவார்களா என்று தேடிக் கொண்டு பாழாய்ப்  போன தமிழகத்தில் சம்பளத்துக்கு வேலைக்குப் போய் பிழைப்பு நடத்த வேண்டி இருக்கிறது (முடி திருத்தியபின்தான் தெரிந்தது- கட்டணம் எழுபது ரூபாயாம்- இது தெரிந்திருந்தால் அதே பிளாட்பாரத்தில் காற்றோட்டமாக ஐம்பது மீட்டர் தள்ளி இருக்கிற ஒருவரிடம் திறந்தவெளியிலேயே திருத்திக் கொண்டிருப்பேன்)

விஷயத்துக்கு வருவோம்.

அதற்குமுன் இன்னொன்று- லெதர் போட்டு மொண்ணை  பிளேடால் ரத்தம் வருகிற வரை வரட் வரட்டென்று இழுப்பார்களில்லையா, அதை எப்போதும் தவிர்த்து விடுவேன்- ஜீரோவில் யந்திரத்தை வைத்து தாடியை மழித்து விட்டு, ஒன்றில் வைத்து மீசையைத் திருத்துவது வழக்கம். மாடல் நடிகர்கள் போல் நல்ல ஒரு ஆண்மீக லுக் இருக்கிறதென்று திருப்திப்பட்டுக் கொள்வது வழக்கம்.

புது கஷ்டமர், இல்லையா? நான் சொன்னதை எல்லாம் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்ட திருத்தக நிபுணர், நான் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ஜீரோவிலேயே வைத்து என் மீசையிலும் யந்திரத்தை ஒரு ஓட்டு ஓட்டி விட்டார்- நிமிர்த்து பார்க்கிறேன், எதிரில்  கிரிஷ் கர்னாட் வேஷம் போட்ட சந்திர பாபு மாதிரி ஒருத்தர் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். அழுகையே வந்து விட்டது.

ஆனால் சக சோம்பல் கலைஞரை இனம் கண்டு கொண்டுவிட்ட திருப்தி கிடைத்தது என்று வையுங்கள்.  அலுவலகத்தில் யாராவது கேட்டால் இங்கிலாந்து தோற்றதற்காக ஒரு பந்தயத்தில் மீசையைக் காவு கொடுத்து விட்டேன், என்று இதை விழுப்புண்ணாக மாற்றி விட வேண்டியதுதான்.

தமிழனுக்கு மீசை இல்லாதது கேவலம்தான், உண்மை. ஆனால் வீரத்தழும்பு என்று ஓன்று இருந்தால் அது எல்லா குறைகளையும் போக்கி விடும் இல்லையா?

சரி, இனி விஷயத்துக்கு வருவோம்-

ஜெர்சியில் ஒரு பூனைக்கு யந்திர பாதங்கள் பொருத்தி இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஒரு பதினாறரை அடி நீள முதலை சுறா ஒன்றை இரண்டு  துண்டுகளாகக் கடித்துத் துப்பியதாம்.

லூயிசியானாவில் எண்ணை மழை கொட்டுகிறதாம்- என்ன கிரி, பாஸ்போர்ட் எடுத்து விட்டீர்களா? சீயக்காயத்தூள் கொண்டு போக மறக்காதீங்க.

ஒலியிளிருந்துய் ஒளி பிறக்கிறது (உடனே ஓம் ஓம் என்று கிளம்பி விடுவார்களே நம் மனேஜ்மண்ட் குருக்கள்!)

Advertisements

2 thoughts on “சோம்பல் கலைஞர்கள்

  1. ///தினமும் மழித்துக் கொள்ள சோம்பலாக இருப்பதனால், மாதம் ஒரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையோ, முடி வெட்டிக்கொள்ளும் வரை தாடி மீசையை அப்படியே அதுகள் போக்கிலேயே சுதந்திரமாக வளர விட்டு விடுவேன் என்பதும் நீங்கள் அறிந்த விஷயம்தான்///

    எப்படி எங்களப் போல ஆட்களுக்குத் தெரியும்? என்னவோ பெரிய அந்துமணி ரேஞ்சுக்கு மொகத்த மறைச்சு வெச்சா? அட இப்பயாவது profile ‘ல உங்க வழக்கத்துக்கு மாறான படத்த சேருங்க தலை.

  2. கமென்ட் ௨:
    நாங்களும் அப்படித்தான். சோம்பல் கலைஞர்’ன்னு சொல்ல வந்தேன். என்னோட சோம்பல் வரலாறு எழுத ஒரு புத்தகம் போதாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s