தந்திரன் செய்திகள்

கர்ப்பமாயிருக்கும்போது தண்ணி அடித்தால் பிறக்கப் போகும் பிள்ளையின் இனவிருத்தித் திறன் நீர்த்துப் போகுமாம்.

மெக்சிக மொலீக்கள் (மீன்கள்) பெண் மீன்களைக் கவர ஆண்பிள்ளையா லட்சணமா மீசை வளர்க்க ஆரம்பித்து விட்டனவாம்! (இந்த செய்தியை இப்போதுதானா நான் படிக்க வேண்டும்!)

image credit: Bildverstehen: Studentische Arbeiten

எந்திரன் செய்தி: கொழுந்து விட்டெரியும் காட்டுத்தீக்குள் கூட்டம் கூட்டமாகப் பறந்து சென்று, மரங்களில் இறங்கி நெருப்பை அணைக்கும் பறக்கும் படை தயாராகிறது (காணொளி காண்க)

இன்னொரு எந்திரன் செய்தி: விஞ்ஞானிகள் ஒரு எந்திர மீனை வடிவமைத்திருக்கிறார்கள்- அதை மற்ற மீன்கள் தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்கின்றனவாம்.

தந்திரன் செய்தி: மூளைக்குள் கணினி சிப்பை வைப்பார்களாம்- எங்கே எப்போது எதற்கு மூளையைத் தூண்ட வேண்டுமோ, அப்போது அதைத் தூண்டி செய்ய வேண்டியதை செய்து முடிப்பார்களாம்.

எந்திரப் பூனை: இங்கிலாந்தில் ஒரு பூனையின் பின்னங்கால்கள் துண்டாகி விட்டன- அங்கு எதோ ஒரு சமாசாரத்தை வைத்து அந்த இடத்தில் திடமான எலும்பு வளர்ந்து காலாக உருப்பெற வழி செய்திருக்கிறார்கள்.

பீட்ரூட் ஜூஸ் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அடர் நிற சாக்லேட்டுகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகக் கூடும்.

போட்டி என்று வந்தால் சாமானிய மனிதன் உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்கள் போனோபோவினது போல் இருக்கிறதாம்- ஸ்டேட்டஸ், அந்தஸ்து பார்க்கிறவன்  உடலில் சிம்பன்சீக்களுக்கு நேருகிற மாற்றம் நிகழ்கிறதாம்- மொத்தத்தில் எவனும் மனிதன் இல்லை.

இப்போதிருப்பதனினும் நூறு மடங்கு விரைவான வைய விரைவு வலை- வருகிறது.

கூடாயிருக்கிற நுரையீரல்களில் செல் விதைத்து அதற்குப் புத்துயிர் தந்திருக்கிறார்கள்.

image credit:  cas.umkc.edu

பரத் ஸ்ரீனிவாசன் சக பயோகெமிஸ்ட்ரி மாணவர்களுடன் பௌதிகம் குறித்து விவாத்தித்துக் கொண்டிருக்கையில் ஆளாளுக்கு ஒன்று சொல்லவே அவருக்குப் பொறுமை போய் விட்டது.

“நமது கேள்விக்கு ரிச்சர்ட் பீன்மான் அவர்களால் மட்டும்தான் பதில் தர முடியும்,” என்று சொல்லிவிட்டு பீன்மானைத் தொலை பேசியில் அழைத்தாராம் ஸ்ரீனிவாசன்.

“காலத்துக்கான அளவை வெக்டரா ஸ்காலாரா?” என்று கேட்டார் ஸ்ரீனிவாசன்.

“மிகவும் அருமையான கேள்வி…” என்றுத் துவங்கிய பீன்மான், ஸ்ரீனிவாசனிடம் நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா என்று கேட்டார். அவர்கள் இந்தியாவைப் பற்றிப் பேசினார்கள். இன்னும் பல விஷயங்களைப் பேசினார்கள். இன்னும் இன்னும் என்று நீண்டு கொண்டே போன உரையாடலை, “எனக்கு ஒரு வேலை இருக்கிறது- விடை பெறட்டுமா?”,  இரண்டு மணி நேரம் கழித்து முடித்துக் கொண்டாராம் பீன்மான்.

“ஐயா, உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. எனக்காக இவ்வளவு நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி. நான் மறுபடியும் தங்களை அழைக்கலாமில்லையா?” என்று கேட்டார் ஸ்ரீனிவாசன்.

“நோ!” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை வெட்டினார்  பீன்மான்.

http://www.feynman.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s