தர்ம அடி!

ஜெர்மனி அர்ஜென்டினாவை ஜெயித்து விட்டது- எதிர்பார்த்ததைவிட சுலபமாகவே வென்று விட்டார்கள்: முயன்றிருந்தால் இன்னும் மூன்று கோல்கள் போட்டிருக்கலாம்: நான்காவது கோலைப் போட்டபின் போதும் என்று ஆகி விட்டது.

எனக்கு ஆச்சரியமளித்த விஷயம் அவர்கள் மெஸ்ஸியை மிக சுலபமாக பாட்டிலில் அடைத்துதான்: அவருக்கு கோலை நோக்கும் வாய்ப்பு இரண்டு மூன்று முறை கிடைத்திருந்தால் அதிகம்- தாக்குவது பற்றிய பேச்சே இல்லை.

“ஐம்பதாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்- என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு துயரை அனுபவித்ததில்லை. முகமது அலியின் கையால் குத்து வாங்கியது போல் இருக்கிறது. என் பலமெல்லாம் போய் விட்டது,” என்று சொல்லியிருக்கிறார் மாரடோனா.

Photo: Skubble

இவர்தான் ஆட்டம் துவங்கும் முன், “ஷ்வைன்ஷ்டைகர் சொல்லியிருப்பதை மறக்க மாட்டோம். அவர் எங்களைத் தரக் குறைவாகப் பேசி விட்டார். ஷ்வைன்ஷ்டைகர் நாங்கள் பொருத்தமில்லாத அணி என்று சொல்லி இருக்கிறார், நாங்கள் கால்பந்து ஆடத் தெரிந்தவர்கள். இன்று களத்தில் அவருக்கு எதிராக நாங்கள் செய்யவிருப்பதைப் பார்த்ததும் அவருக்கு அது தெரியத்தான் போகிறது,” என்று சொன்னார்.

சொன்னதை செய்ய முடியவில்லை. இன்று எல்லாருமே இந்த அணியில் சிலபல மாற்றங்களை செய்திருக்க வேண்டும், இன்னார் இருந்திருக்க வேண்டும், வியூக அமைப்பில் குளறுபடி அது இது என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் மாரடோனா தெளிவாக இருக்கிறார்- “ஆண்டவன் நாங்கள் இறுதிப் போட்டியில் விளையாடுவதை விரும்புகிறாரா இல்லையா என்பதுதான் கேள்வி- இதுதான் அவரது சித்தம் என்பது தெளிவாகிவிட்டது,” என்று ஒரு உண்மையான கர்ம யோகியின் தோரணையில் அவரது அணியின் தோல்வியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அர்ஜென்டினா ஏன் தோற்றது?

ஜெர்மனியின் பயிற்சியாளர் அர்ஜெண்டினாவின் அதிரடி ஆட்டத்தைக் கை காட்டுகிறார்- “எதிர் அணியினர் வேகமாகத் தாக்க வரும்போது காலி இடம் நிறைய கிடைக்கும். என் ஆட்டக்காரர்களிடம்கூட சொன்னேன், நீங்கள் அவர்களை விட இளைஞர்கள், விரைவானவர்கள், அயராமல் விளையாடக் கூடியவர்கள் என்று. அதனால்தான் எங்களால் அர்ஜெண்டினாவின் தடுப்பாளர்களுக்கு மிகுந்த அழுத்தம் தந்து அவர்களை முழுமையாகத் தகர்த்தெறிய இயன்றது,” என்று.

இன்னும் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

7 thoughts on “தர்ம அடி!

 1. சார்.. நல்ல அடிதான் போங்க… (ஆனா.. அர்ஜென்டினாக்கரனுக முதல்நாள் நைட்டு விஜய் படம் பாத்திருப்பானுக போலிருக்கு… எல்லாரும் வில்லனுக மாதிரி வழுக்கிட்டு வந்து அடிக்க ட்ரை பன்றாணுக!)

  எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்… மரடோனா ஏன் ரெண்டு மணிக்கட்டிலையும் வாட்ச் கட்டியிருக்கார்?!?!?!

  1. ஆமா, அதை நான் கவனிக்கலையே!

   வெள்ளை கோட்டுக்கு மேல கருப்பு கோட்டு போட்டிருக்காரு, அதை கவனிச்சிங்களா?

   1. “எப்பிடித்தான் இந்த வேகாத வெய்யில்ல கோர்ட் போட்டுகிட்டு நிக்கிறியோ நீ” – விஜய்(திருமலை)

    ஆனா இவரு டபுள் கோர்ட்டு.. அதுவும் சவுத் ஆபிரிக்காவுல.. அனேகமா இவ்வேளைக்கு பொசுங்கியிருக்கும்னு நெனைக்கறேன்.. (உள்ளேயும் வெளியேயும்)

    ஐயாவுக்கு லக்கி நம்பர் ரெண்டுன்னு நெனைக்கறேன்.. ரெண்டு தோடு.. ரெண்டு வாட்சு.. ரெண்டு கோட்டு.. பிரமாதம்…

 2. மாரடோனாவும் விஜய் படம் பார்த்திருப்பாரு. விடுங்க வெளங்காத பசங்க. அவனுங்களுக்கு நம்ம ஊர்லயும் அதி தீவிர ரசிகர்கள் இருக்காங்கப்பா. அவிங்க கனவுலயும் மண்ணைப் போட்டுட்டனுன்களே!

 3. ஹலோ… ஹலோ…

  ஸ்டாப் கமெண்ட்ஸ் ப்ளீஸ்.

  யாராவது அப்பிடி இப்பிடி தெரியாம தோத்துப் போயிட்டா போதுமே, விஜய் கூட கம்பேர் பண்ணக் கிளம்பிடறதா?

  ♪♪♪தொட்டபெட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா! தா…தாதா..தா..♪♪♪

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s