நானும் ஒரு தேவதாஸ்…

என் குரல் உனக்குக் கேளாதெனில்…
(அப்சல் அகமது சையத் எழுதிய கவிதை- ஆங்கில மொழியாக்கம் முஷரப் அலி பரூக்கி)

என் குரல் உனக்குக் கேளாதெனில்
ஒரு எதிரொலியை இணைத்துக் கொள்-
புராதனக் காவியங்களின் எதிரொலியை

எதிரொலியுடன்-
ஒரு இளவரசியை சேர்த்துப் பார்

அந்த இளவரசிக்கு
உன் அழகைக் கொடு

உன் அழகின் அண்மையில்-
ஒரு காதலனின் இதயம்

காதலனின் இதயத்தில்
செருகிய கத்தி.

Advertisements

2 thoughts on “நானும் ஒரு தேவதாஸ்…

 1. இது ஒரு முரட்டுக் காதலனின் கண்ணீர் கவிதை-

  “கண்ணே, நான் அழுது புலம்புவது உன் காதில் விழவில்லையா, எனக்காக உன் உள்ளம் இரங்கவில்லையா? என் உணர்ச்சிகள் உனக்குப் புரிய மாட்டேன் என்கிறதே- காதல் என்றால் என்ன என்றே உனக்குத் தெரியாதா?

  அப்படியானால் உன் கல் நெஞ்சில் ரோமியோ ஜூலியட், அமர் அக்பர் அந்தோணி, சலீம் அனார்கலி, அம்பிகாபதி அமராவதி போன்ற அமர காதல் காவியங்களை நினைவு படுத்திக்கொள்: இப்போது உன் மனம் கொஞ்சம் இளகியிருக்கும், இல்லையா?

  அதில் ஒரு இளவரசிக்கு இடம் கோடு- ஒரு பெரிய ராஜ்ஜியம் அவளுக்கு சொந்தமாகப் போகிறது. அந்த இளவரசிக்கு உன் அழகு இருக்கிற மாதிரி வடிவம் கோடு- அவள் மேல் ஈர்ப்பு வருகிறது, இல்லையா?

  அந்த அழகிய இளவரசியின் காலடியில் ஒரு காதலனின் இதயம் இருப்பதாக நினைத்துப் பார். பாவம் என்று தோன்றுகிறது இல்லையா?

  ஒரு பெண்ணின் பார்வைதான் நெஞ்சைப் புண்ணாக்கும் என்பார்கள், ஆனால் உன் பாராமுகம் ஒரு கத்தியைப் போல் இந்தக் காதலனின் இதயத்தைத் துளைத்து விட்டதே- இன்னும் அதன் ஓலம் உனக்குக் கேட்கவில்லையா?”

  இவர் பருத்தி வீரன் இல்லை சார், கண்ணீர் கவிதை பாடி பெண்களின் இதயத்தைக் கரைப்பதில் எலி சார், எலி 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s