ஏகஅலுமினியம் காலியம் ஆன கதை

இன்று ஸ்லேட் என்ற இதழில் ஒரு சுவையான செய்தி படித்தேன். இது எனக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டும்.

ரஷ்ய மாமேதை மென்டலீவ் தனது பீரியாடிக் டேபிளை வடிவமைத்த போது அதில் சில வெற்றிடங்கள் இருந்தன. அவை குறித்து அவரது கருத்து என்னவென்றால் அந்த வெற்றிடங்களை நிரப்பக்கூடிய எலிமெண்டுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான்.

அத்தோடு நிற்கவில்லை மென்டலீவ். புதிதாய் கண்டுபிடிக்கப்படப்போகும் எலிமெண்டுகளின் குணங்கள் என்னென்னவாக இருக்கும் என்றும் பட்டியல் போட்டார். அது தனிக்கதை.

எனக்கு ஸ்லேட் கட்டுரை மூலம் தெரியவந்தது என்னவென்றால் இந்த வெற்று கட்டங்களை நிரப்பக்கூடியனவற்றுக்கு அவர் பெயரிடுகையில் சமஸ்க்ருத பதங்களைப் பயன்படுத்தினார் என்பதுதான். ஒரு கட்டம் தள்ளி என்பதற்கு ஏக என்ற பதம், இரண்டு கட்டம் தள்ளி என்பதற்கு த்வி- இப்படி போகிறது கதை.

ஏகஅலுமினியம் காலியம் ஆன கதை ஸ்லேட்டில் படியுங்கள். சுவையாக இருக்கிறது.

Advertisements