இன்செப்ஷன்- யோக வாசிட்டம்.

சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று inception என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். நிறைய எதிர்பார்ப்புடன் போயிருந்தேன்- கதை எனக்குப் புரியப் போவதில்லை என்று தீர்மானம் செய்திருந்தேன்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தப் படத்துக்கு imdbஇல் 9 .2 கொடுத்திருக்கிறார்கள்- ஆனால் காட்சிகளுக்கு அப்பால் திரைக்கதை என்ற அளவில் இந்தப் படம் என்னை சற்றும் பாதிக்கவில்லை.

இதை வைத்து கேம் வடிவமைப்பார்கள்- அது இந்தப் படத்தை விட அதிக லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

ஏன் இந்தப் படம் நான் நினைத்த அளவுக்கு இல்லை என்றால் அதற்குக் காரணம் இதுதான்:

யோக வாசிட்டம்

ஆங்கிலப் படம் பார்க்கிற ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஹாலிவுட் படங்களில் இல்லாத கற்பனை இதில் இருக்கிறது- ஆனால் துரதிருஷ்டவசமாக புத்தகம் தற்போது கைவசம் இல்லை. ஸ்க்ரிப்ட் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள்.

அறிவியல் புதினங்கள், மாட்ரிக்ஸ், இன்செப்ஷன் – எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் கதைகள் இதில் இருக்கின்றன.

இந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஏன் இந்த மாதிரி படங்கள் நம் ஊரில் வருவதில்லை என்று கேட்கிறார்கள்- எனக்கு அது கூட ஆச்சரியமாக இல்லை. ஏன் இது போன்ற கதைகளை யாரும் இங்கே எழுதுவதில்லை?

இந்த அசாத்திய கற்பனைத் திறன் எங்கே போயிற்று?

பார்க்காத படத்தைப் பற்றி விமர்சனம் எழுதினேன் (ராவணன்). ஆனால் பார்த்த படத்தைப் பற்றி எழுத ஒன்றுமில்லாதது  போன்ற உணர்வு.

காரணம் நான் யோக வாசிட்டத்தை வைத்து எடுத்த வேறு ஒரு படம் ஓடுகிற தியேட்டரில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்- நீண்ட ட்ரெய்லர்கள் போட்டார்கள், முழுப் படம் திரையிடப்படவே இல்லை.

ஏமாற்றம்.

Advertisements

4 thoughts on “இன்செப்ஷன்- யோக வாசிட்டம்.

 1. அன்பின் நட்பாஸ்.
  கனவுக்குள் கனவு,பின்னூட்டத்துக்குள் ஒரு பின்னூட்டம்.படம் பற்றியதல்ல.
  கிரியின் கொல்லைப்புறத்தில் பேசியதற்கு வினாக்களைத்தான் முன்வைக்கமுடியும்.

  அறிவியல் பற்றிய என்னுடைய பதிலின் சாராம்சம் அறிவியல் பற்றி இப்படித்தான் எழுதவேண்டும் அப்படி எழுதக்கூடாது என்கிற கருத்துக்கான பதில்.
  அது எனது தொழில் ரீதியான அனுபவத்தினூடாக வந்தது. அ
  ஜெமோவுக்கோ சுஜாதாவுக்கோ அறிவியலை எப்படிச் சாதாரண மக்களுக்கு சொல்லுவது என்ற கட்டாயமில்லை.
  எனக்கு அந்தக்கட்டாயம் இருந்தது. நோயளிகளுக்கும் உறவினர்களுக்கும் நோயை நோயின் நிலையை விளங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. பல்வேறு கல்வி நிலை தொழில் அறிவு நிலை வயது என ஏற்றவகையில் விளங்கப்படுத்த வேண்டும்.அதனூடாகப்பார்க்கிறபோது அறிவியல் பல்வேறு நிலைகளுக்கூடாகப்பேசப்பட வேண்டும் என்பதான உணர்வு..அந்தப்பதில் அது.

  சுஜாதா ஆன்மீக ஈடுபாட்டை எழுத்துக்களில் காட்டவில்லைத்தான்.ஆன்மீகமில்லாத வாழ்க்கை குறைவானதா?
  சுஜாதா வெளியில் அப்படிக்காட்டிக்கொண்ட ஆனால் உள்ளூர ஞானியா?
  ஜேமோ வெளியில் ஆன்மிக அறிவுள்ள ஞானியாகக் காட்டிக்கொள்கிற உள்ளே அஞ்ஞானியா?
  ஜெமோவை சுஜாதா நிராகரித்தாரா? அல்லது ஜேமோவின் பாதை சுஜாதாவால் நிராகரிக்கப்பட்ட பாதையா?
  யார் யாரை நிராகரிக்கிறார்கள்?

  அது ஏன் உங்களுக்கு வேதனையைத்தருகிறது? உங்களின் பாதையும் ஜெமோவின் பாதையும் -அதாவது ஆன்மிக விழிப்புணர்வுதான் இந்த வாழ்வின் நோக்கம் என்கிற பாதையா?
  அதனால்தான் உங்களுக்கு கவலை தருகிறது
  ஜேமோ சுஜாதாவை நிராகரித்தால் சுஜாதா நிராகரிக்கப்படுவாரா?
  ஆன்மிகவாதிகளை விட உலகாயவாதிகள் பெரும்பான்மையான இந்த உலகில் அந்த உரையாடல் அர்த்தமற்றதாகத்தான் பெரும்பான்மையினருக்குத்தெரியும்.அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது.

  ஆன்மீக வழியில் பார்த்தால் ஜெமொவுக்கு ஆன்மீகத்து அறிவு சுஜாதாவுக்கு விஞ்ஞானச்சிந்தனை.
  ஆன்மிகத்துக்கு அறிவு ஒரு தடை.
  அறிவு என்றால் அது அறிவியல் அறிவாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.ஆன்மிக அறிவும் ஒரு தடைதான்.
  ஆன்மிக அறிவு அறிந்தவன் போன்ற பாவனையைத்தரும்.
  இறுதியில் சரணாகதி என்பது சரணாகதி என்ற பாவனை.
  இவர்களின் உரையாடல் சொல்வது சரணாகதி அடைந்ததாக ஏன் சுஜாதா பாவனை செய்யவில்லை என்றும் அர்த்தங்கொள்ளலாம்.
  ஆன்மிக ஈடுபாடுள்ளவர் சரணாகதி அடைந்ததாக பாவனை செய்திருப்பார்.மரணத்தை வரவேற்பதாக பேசியிருப்பார்.
  ஒன்றில் பாவனை.மற்றதில் பயம் அவ்வளவுதான்.

  ஆன்மிகம் சொல்லும் பக்குவப்பட்டவர்களுக்கு மரணம் என்பது மரத்திலிருந்து உதிர்கிற இலை போல இருக்கும். அதில் சரணாகதியும் இருக்காது பயமும் இருக்காது.
  அப்படிப்பார்த்தால் ஜெமோவும் சுஜாதாவும் ஒரே தளத்தில்தான் நிற்கிறார்கள் என்றும் சொல்லிவிடலாமா?.ஆன்மீக அறிவு கூட இருப்பதால் ஆன்மீக ரீதியில் உயர்வு என்று சொல்லமுடியுமா
  நான் ஆன்மீகம் படித்து ஆன்மாவை ஏற்றுக்கொண்டு நிறைய ஆன்மிகப்புத்தங்களை பதஞ்சலியிலிருந்து அனைவர் புத்தகங்களையும் படித்து ஓ ஆன்மிகப்பாதைதான் சிறந்தது அந்தப்பாதைதான் உயர்ந்தது என்று ஆன்மிக அறிவோடு மரணம் என்பது உடலிலிருந்து ஆன்மா பிரிகிறது என்று நம்பி சந்தோஷமாக செத்துப்போவதற்கும்
  நான் நீண்டகாலம் இருக்கவேண்டும் சாகக்கூடாது என்று போராடி இறந்து போவதற்கும் என்ன வேறுபாடு.?
  அந்தவழமையான சின்னக்கதையேதான்.
  ஆற்றில் அள்ளிச்செல்லப்படும் இரு துரும்புகள் ஒரு துரும்பு ஆற்றை எதிர்த்து நீந்த முயன்றது மற்றது ஆற்றோடு போவதை ஏற்றுக்கொண்டது.
  ஆன்மிகம் ஆற்றில்முடிவில் இன்னும் ஏதோ இருப்பதாகச்சொல்லுகிறது
  ..
  சுஜாதா என்னைக்கைவிட்டது என்றது ஆன்மா நான் என்ற அகங்காரத்தை கைவிட்டது என்று பொருள் கொள்ளலாமா?

  யார் யாரை நிராகரிப்பது? யார் யாரை அளவிடுவது?

  ஏன் அவர்களோடு உணர்வுரீதியாக பிணைக்கப்படுகிறீர்கள்.

 2. இத்தனை கேள்விகளை நான் எதிர்பார்க்கவில்லை. யோசித்துதான் பதில் சொல்ல முடியும்-

  தற்போதைக்கு, இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்: எனது ஆணவம்…

  ஒன்று புரிகிறது, புரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது: உங்கள் கேள்விகளுக்கான பதிலை நான் வாழ்ந்துதான் கண்டு பிடிக்க வேண்டும்.

 3. நானும் இன்செப்ஷன் பாத்துட்டேன்.. வெப்சைட்ஸ் எல்லாத்துலையும் கலக்கல்னு போட்டிருந்தாங்க. ஆனா என்னையும் படம் சற்றும் பாதிக்கவில்லை. கதை வாசிச்சுட்டு படம் பாத்ததாலோ அல்லது குவாலிடி குறைஞ்ச காப்பில பாத்ததாலோ என்னவோ நோ ரியாக்ஷன்..

  1. நான் திரையரங்குல பாத்தேன்- என் கூட பாத்தவங்க, தங்களுக்கு கதை புரிஞ்சிருச்சுங்கற மிதப்பில இருந்தாங்க. ஓரிரண்டு குறை கூட கண்டு பிடிச்சு சொன்னாங்க. கதையோட நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியலை என்பது என்னளவில் ஒரு பின்னடைவு.

   யோசிச்சுப் பாத்தா நல்ல கான்செப்ட். இதைப் படமா பாக்கறதைவிட கூடுதல் இன்பம் கேமா விளையாடறதுல கிடைக்கும் என்பது என்னோட எண்ணம்.

   அதையும் பாக்கதான போறோம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s