தீரா நதியாய் பாடியபடி பயணித்தல்…

Tricycleஇல் இருக்கும் க்யோசெனின் கவிதை ஒன்றை இங்கு பதிவு செய்திருந்தேன். அதற்கு திரு வரசித்தன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் எனக்குப் பொருத்தமான வகையில் பதில் தந்திருக்கிறார். அதையும் ஓரிரு மாற்றங்கள் செய்து பதிவாகவே பதிவு செய்து வைக்கிறேன்.

Russell Brand- anugacchatu pravaha

அது (நதி) ஏன் பேசவில்லை?
நதிக்கு தன் பயணம் எங்கே என்று தெரிவதில்லை?
அது பயணிக்கிறது அவ்வளவுதான்?

cognitive distortion இலொன்று shoulds .
நான் அப்படியாக வரவேண்டும். நான் இதைச் செய்தாக வேண்டும். இப்படியெல்லாம் இல்லை என்றால் நான் தோல்வி. என் வாழ்க்கை தோல்வி இப்படி இப்படி நினைப்பது மனச்சோர்வையையும் எமக்களிக்கும். இந்த shoulds இனூடாக மற்றவர்களை மதிப்பிடவும் செய்வோம்.
நாங்கள் ஒரு மதத்துக்குள் பிறப்பதால் சில நம்பிக்கைகள் எம்மைப் பற்றிக் கொள்ளுகின்றன. அவை சில shoulds ஐ எமக்குத் தருகின்றன.
ஒருவர் ஆன்ம ஈடேற்றத்துக்காக வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவளிக்கிறார். ஆனால் இறுதியில் அவர் எதையும் அடைய முடியவில்லை.
அடைய வேண்டும் என்று நினைத்ததால் அவர் தோல்வியாக அதனை உணர்ந்தால் அதற்கு அவருடைய எதிர்வினை எப்படி இருக்கும்- சிலர் வீடுபேறடைந்ததாகவே பாவனை செய்யக்கூடும். ஒரு துறவி போல வெளியில் தோற்றமளிக்கக்கூடும்.
இன்னொருவர் எல்லாம் பொய் என்று நாத்திகராக மாறக்கூடும்.
மற்றவர் இது அடுத்தபிறவியில் தொடரும் என்ற நம்பிக்கையோடு தொடரவும் செய்வார்.

இப்படியிருக்க வேண்டும் என்றில்லாமல் நதியைப்போல இருந்தால்?
நதிக்கு கடலுக்குப் போக வேண்டும், இந்தக் காலத்துக்குள் போகவேண்டும், இந்தப்பாதையால் செல்லவேண்டும் என்றெல்லாம் தோன்றினால் நதி தன் தன்மையை இழந்து விடும்.
அது குழாய் நீர்.அல்லது வாய்க்கால். அல்லது வெள்ளம்.

எங்கள் வாழ்க்கையின் பயணம் எங்கள் கரைகளுக்கூடாக நிகழுகிறது.எங்களுக்குச் சாத்தியமானவைகளைச் செய்துகொண்டு பயணிப்பதில் எந்தக் குற்றமுமில்லை.
சுஜாதாவின் பயணம் அவருடைய கரைகளுக்கூடாக வாழ்வின் சாத்தியமான ஏற்ற இறக்கங்களூக்கூடாக நிகழ்ந்தது.
ஜெயமோகன் பயணம் கூட அவ்வாறுதான்.
அவர்கள் எழுதட்டும்.

நான் ஒரு நதியென்று உணர்வதும் என்கரைகளை அறிவதும் பாடிக்கொண்டே நகர்வதும்தான் என் வாழ்க்கை. என் கரைகள் என் சூழலில் கிடைப்பது.
சிலர் சொல்லுவார்கள் நீ கடலாகப் போகிறாய் என்று. சிலர் சொல்லுவார்கள் நீ கடலுக்குள் உன்னை இழந்து விடுவாய் என்று.
கடலைப் பற்றிச் சிந்தித்தால் கரைகளை கடக்கும் கணங்களை இழந்து விடுவேன்.
எங்கே போகிறாய் என்று கேட்டாலோ, “இங்கே போ” என்று யாரும் சொன்னாலோ பேசிக் கொண்டேயிருப்போம் விஷயத்துக்கு வரத் தேவையில்லை.
நதியை உணர்தல் வீடுபேறு.

அவர் சொன்னதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது! நண்பர் கிரி சொல்கிற மாதிரி, “நச்!”

காணொளி இல்லாமல் இந்தத் தளம் இருந்து புண்ணியமில்லை:


பாடல் வரிகள் இங்கே: Metrolyrics


பாடல் வரிகள் இங்கே: Metrolyrics:- இதைப் படிக்காட்டி என்ன பாடறாருன்னே புரியாது!

(மேலே இருக்கிற அழகிய ஆண்மகன் யாரென்று பார்க்கிறீர்களா? அவர் பெயர் Russell Brand அவர் என் இந்த போஸ் கொடுக்கிறார் தெரியுமா? விஷயம் அவரது உயர்த்திப் பிடித்த வலக்கையில் இருக்கிறது- அவரது அக்குளுக்கு மேலே எதோ பச்சை குத்தி இருக்கிறார், தெரிகிறதா? அது சமஸ்கிருதம் : அனுகச்சத பிரவாகம் என்றால், “ஆற்றோடு போ!” என்று பொருளாம்- “நீரோட்டத்துடன் நீந்து!”- மேலதிக விபரங்கள் இங்கே)

Advertisements

4 thoughts on “தீரா நதியாய் பாடியபடி பயணித்தல்…

 1. நான் வாழ்க்கையின் விதிவசத்தின்படி, போகிறபோக்கில் வருவது வரட்டும் என்று வாழ்பவன்.

  வாழ்க்கையின் நுணுக்கமான தருணங்களை உணர்ந்து அதனுள் உய்ந்து வாழ்பவர்கள் ஒரு சிலர். அவர்களில் இருவரை இங்கே காண்கிறேன்.

  உங்கள் இடுகைகளையும், அதன் உள் உள் அர்த்தங்களையும் உணர இயலவில்லை எனினும், அந்த நதியின் பயணக் குறிப்பு….

  குறிப்பாக…

  //கடலைப் பற்றிச் சிந்தித்தால் கரைகளை கடக்கும் கணங்களை இழந்து விடுவேன்.
  எங்கே போகிறாய் என்று கேட்டாலோ, “இங்கே போ” என்று யாரும் சொன்னாலோ பேசிக் கொண்டேயிருப்போம் விஷயத்துக்கு வரத் தேவையில்லை.
  நதியை உணர்தல் வீடுபேறு.//

  இந்த வரிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன…

  1. கனவில் நடப்பவனைப் போல் காலத்தைக் கடக்கிறேன் நான், அதனால, நீங்க வரசித்தன் அவர்களைப் பற்றி சொன்னது வேண்டுமானாலும் உண்மையாக இருக்கலாம், என் விஷயத்தில் “வாழ்க்கையின் நுணுக்கமான தருணங்களை உணர்ந்து அதனுள் உய்ந்து வாழ்பவர்கள் ஒரு சிலர். அவர்களில் நீயும் ஒருத்தர்,” என்று என்னைப் பற்றித் தெரியாதவர்கள் மட்டும்தான் சொல்ல முடியும்: அல்லது அப்படி சொல்பவர் உங்களை போல் சென்னைச் செம்மொழி பழகுனராக இருக்க வேண்டும்- மெய்யாலுமே நான் வாய்க்கையில உய்ந்துட்டேன்பா!

 2. நட்பாஸ்,
  பதிவாகப்போட்டிருக்கிறீர்கள்.நன்றி.
  நதி,கணத்தில் வாழ்தல்(ஸென்),cognitive எதுவும் என்கருத்தல்ல.வழித்தேங்காய்.
  இவைகளையும் பாருங்கள்.கூகுள் இட்டபோது கிடைத்தது.
  http://www.springerlink.com/content/y07v90w33m1k4pw6/- The River Model: A Metaphor and Tool for Training New Psychotherapists.
  http://www.hinduonnet.com/folio/fo0107/01070120.htm

  கிரி.
  அட ஆன்மிகத்தில் பலதடவைகள் சொல்லப்பட்டதைத்திருப்பி சொல்ல நான் அதை கடைப்பிடித்து வாழ்வதாக கிரி நினைக்கிறாரே
  இனியாவது வாழ்க்கையின் நுணுக்கமான தருணங்களை உணர்ந்து அதனுள் உய்ந்து வாழ ’’வேண்டும்’’ என்று முயற்சிக்கிறபோது நினைவு செயலோடு ஒன்றிக்கிறபோது ஒன்றித்துவிட்டோமென்று தோன்றுகிறபோது கிரி நினைவு வருகிறது.

  சென்னையில் ஆச்சிரமத்துக்கு இடம் பாருங்கள்.(நித்தியும் பிரமச்சரியமும் போல)

  நதிக்கரையில் மனிதர்கள் வாழத்தொடங்கியபோதே நதியைபோல வாழவேண்டுமென்று பேசத்தொடங்கிவிட்டார்கள்.
  விதிப்படி சிலர் நன்றாக வாழ்கிறார்கள். விதிப்படி கஷ்ட தசையில் இருப்பவர்களுக்குத்தான் இந்த தத்துவங்கள் தவிர்க்கமுடியாதவைகளை ஏற்றுக்கொள்ளப்பழக்குகின்றன என்று சொல்லலாம்.ஆக இப்படிச்சிந்திக்கக்கூடியவர்கள் கஷ்டங்களை அனுபவிக்கிறவர்கள் என்றும் சொல்லலாம்.

  எழுத்துக்களின் மூலம் ஒருவர் தன்னைப்பற்றிய குறை நிரப்பு பிம்பத்தை உருவாக்கமுடியுமா?
  compensation எனப்படுவது ஒரு உளவியல் கருத்து. மனிதர்கள் தங்களில் குறைவாக கருதுவதை ஈடு செய்வதற்காக இன்னொரு ஆளுமையைக்கட்டி எழுப்புவது.
  ஆரோக்கியமான வழி.தங்களை பலவீனமானவர்களாக கருதுபவர்கள் கராத்தே பழகுவார்கள்.எழுத்தும் அத்தகையதாக இருக்கலாம்.
  ஜெயமோகன் மனுஷ்யபுத்திரனை விமர்சித்தது அந்த வழியில்
  சுஜாதாவின் இளமை எழுத்துக்கள் முதுமைக்கான compensation என்றும் ஒரு தொனி தென்பட்டது.
  ஜெயமோகன் பலவீனமாக கருதுவது அவர் மனம் அல்லது அறிவு போலத்தெரிகிறது.
  பலமான இறுக்கமான மனம் போன்ற தொனி எழுத்துக்களில் தெரிகிறது.அறிவை பரவலாக்கிக் காட்டும் வாசிப்பும் எழுத்தும் பதிவுகளில் தெரிகிறது
  சாருநிவேதிதா அலைபாயும் மனமாக/கலகம் செய்பவராக காட்டிக்கொள்கிறாரா

  படித்ததை பகிர்கிறேன் என்றால் இந்த ஜட்ஜ்மெண்ட் தேவையில்லை.ஆனால் அவர்கள் கருத்துகளாகப்படித்து பலர் கோபப்படவும் ஆத்திரப்படவும் வேதனைப்படவும் செய்கிறபோது ஜட்ஜ்மெண்ட் தேவைப்படுமோ என்னவோ.

  அது ஜஸ்ட் ஒரு கருத்து.

  உடனடியாகப்பதில் அளிப்பது தாமதமாகும் நிலையில் இருக்கிறேன்.மன்னிக்கவும்
  (சமாதி நிலையில் இருந்த இருமுனிவர்களில் ஒருவர் விழித்தபோது ‘சாப்பிட்டாயா என்று கேட்டு விட்டு மீண்டும் அந்தநிலைக்குப்போய்விட்டாராம்.
  ‘பசிக்கவில்லை’’ என்றாராம் மற்றவர் ஒருமாதம் கழித்து சமாதியிலிருந்து மீண்டு.)

 3. springerlink சுட்டி பொது மக்களுக்கு இல்லை போலிருக்கிறதே? உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தன் ரகசியத்தைத் திறக்குமாம்: நீங்களே இந்த ஆற்றுப்படுதல் குறித்து ஒரு பதிவு இடலாமே? அதைப் படிக்க முடியாத எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

  compensation mechanism உண்மைதான் என்று நினைக்கிறேன்: அப்படி பார்த்தால் திரு ஜெயமோகன் அவர்கள் தன் உடல் குறித்த உணர்வுகளைத்தான் அறிவு/ ஆன்மீக தளத்தில் நிறைவு செய்து கொள்கிறார் என்று சொல்வேன்: ஒரு இடத்தில் தான் தீவிரமாக வெறுப்பது உடல் குறை காரணமாக தன் ஆளுமை (பர்சனாலிட்டி) குறித்துத் தாழ்வான எண்ணங்களைக் கொண்டவர்களையே என்று பொருள் வருகிற மாதிரி சொன்னதாக நினைவு.

  மேற்கத்திய நாகாரீகத்தின் பாதிப்பால்தான் நாம் இப்படிப்பட்ட அளவுகோல்களைக் கொண்டு ஒருவரது எழுத்து குறித்தப் புரிதலுக்குக் கையாள்கிறோம் என்று தோன்றுகிறது. வாசிட்டர் யார்? ஔவையார் யார்? அகத்தியர் யார்? இவர்களது உளவியல் தெரியாததால் நாம் இழப்பது என்ன?

  அவ்வளவு ஏன்? நிறைய பேர் தங்கள் பெயர்களில் எழுதாமல் அவ்வையார், சங்கரர் பெயர்களில் எழுதி இருக்கிறார்கள். எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், கருத்தாக்கத்தில் ஆளுமையின் பாதிப்பு குறித்த கவலைகள் அண்மையில் எழுந்த ஒன்றே: இதுவரை அவ்வையார் சொன்ன மாதிரி இருந்ததென்றால் அவ்வையாரே எழுதியதாக வைத்துக் கொள்வதுதான் மரபு என்று தோன்றுகிறது. நான் சொல்வது தப்பாக இருக்கலாம் என்பது சொல்ல வேண்டுவதில்லை. இது என் எண்ணம், அவ்வளவுதான்.

  இதைப் பற்றியெல்லாம் மரணமொக்கையில் விவரமாக எழுதும் எண்ணத்தில் இருக்கிறேன். பார்க்கலாம்.

  நீங்கள் உடனுக்குடன் எழுத வேண்டுவது அவசியமில்லை டாக்டர். ஒரு சித்தராக நீங்கள் இருக்கிற இடத்திலிருந்து நினைக்கிற நல்லெண்ணங்களே எமக்குத் துணை நிற்கும். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s